Oppiliyappan Granted Me Refuge.
ஒப்பிலியப்பன் எனக்கு அடைக்கலம் அளித்தான்
3373 என்னப்பனெனக்காயிகுளாய் என்னைப்பெற்றவளாய் *
பொன்னப்பன்மணியப்பன்முத்தப்பன் என்னப்பனுமாய் *
மின்னப்பொன்மதிள்சூழ் திருவிண்ணகர்சேர்ந்தவப்பன் *
தன்னொப்பாரில்லப்பன் தந்தனன்தனதாள்நிழலே.