Chapter 1

Sending messenger birds to the Lord of Thiru Vann vandur - (வைகல் பூங்)

திருவண்வண்டூர்ப் பெருமானிடம் தலைவி பறவைகளைத் தூதுவிடல் (திருவண்வண்டூர்)

These divine hymns elaborate on how Āzhvār as lovelorn lady sends messengers/mediators to emperumān (her Lover) residing in Thiru Vann vandur divyadesam with messages to explain Āzhvār’s despair and desperation. The messengers, the kurugu bird, stork/crane, the cuckoo (kuyil), the parrot, and the like, carry messages from the nayāki (Āzhvār) to her

+ Read more

ஆழ்வார் தம் நிலையைக் கூறுமாறு, திருவண்வண்டூர் என்னும் திவ்யதேசத்து எம்பெருமானிடம் குருகு, நாரை, கொக்கு, குயில், கிளி முதலியவற்றைத் தூது விடுதல். ஆழ்வாராகிய தலைவி எம்பிரானாகிய தலைவனிடம் தூது விடுதல்போல் இப்பகுதி அமைந்துள்ளது.

ஆறாம் பத்து-முதல் திருவாய்மொழி-“வைகல்”-பிரவேசம் –

முதல்

+ Read more
Verses: 3343 to 3353
Grammar: Kalinilaiththuṟai / கலிநிலைத்துறை
Pan: நட்டராகம்
Timing: 12.00- 1.12 PM
Recital benefits: will be like Kama for women with waists thin as lightning
  • TVM 6.1.1
    3343 ## வைகல் பூங் கழிவாய் * வந்து மேயும் குருகினங்காள் *
    செய் கொள் செந்நெல் உயர் * திருவண்வண்டூர் உறையும் **
    கை கொள் சக்கரத்து * என் கனிவாய்ப் பெருமானைக் கண்டு *
    கைகள் கூப்பி சொல்லீர் * வினையாட்டியேன் காதன்மையே (1)
  • TVM 6.1.2
    3344 காதல் மென் பெடையோடு * உடன் மேயும் கரு நாராய் *
    வேத வேள்வி ஒலி முழங்கும் * தண் திருவண்வண்டூர் **
    நாதன் ஞாலம் எல்லாம் உண்ட * நம் பெருமானைக் கண்டு *
    பாதம் கைதொழுது பணியீர் * அடியேன் திறமே (2)
  • TVM 6.1.3
    3345 திறங்கள் ஆகி எங்கும் * செய்கள் ஊடு உழல் புள்ளினங்காள் *
    சிறந்த செல்வம் மல்கு * திருவண்வண்டூர் உறையும் **
    கறங்கு சக்கரக் கைக் * கனிவாய்ப் பெருமானைக் கண்டு *
    இறங்கி நீர் தொழுது பணியீர் * அடியேன் இடரே (3)
  • TVM 6.1.4
    3346 இடர் இல் போகம் மூழ்கி * இணைந்து ஆடும் மட அன்னங்காள் *
    விடல் இல் வேத ஒலி முழங்கும் * தண் திருவண்வண்டூர் **
    கடலின் மேனிப்பிரான் * கண்ணனை நெடுமாலைக் கண்டு *
    உடலம் நைந்து ஒருத்தி * உருகும் என்று உணர்த்துமினே (4)
  • TVM 6.1.5
    3347 உணர்த்தல் ஊடல் உணர்ந்து * உடன் மேயும் மட அன்னங்காள் *
    திணர்த்த வண்டல்கள்மேல் * சங்கு சேரும் திருவண்வண்டூர் **
    புணர்த்த பூந் தண் துழாய் முடி * நம் பெருமானைக் கண்டு *
    புணர்த்த கையினராய் * அடியேனுக்கும் போற்றுமினே (5)
  • TVM 6.1.6
    3348 போற்றி யான் இரந்தேன் * புன்னைமேல் உறை பூங் குயில்காள் *
    சேற்றில் வாளை துள்ளும் * திருவண்வண்டூர் உறையும் **
    ஆற்றல் ஆழி அங்கை * அமரர் பெருமானைக் கண்டு *
    மாற்றம் கொண்டருளீர் * மையல் தீர்வது ஒருவண்ணமே (6)
  • TVM 6.1.7
    3349 ஒருவண்ணம் சென்று புக்கு * எனக்கு ஒன்று உரை ஒண் கிளியே *
    செரு ஒண் பூம் பொழில் சூழ் * செக்கர் வேலைத் திருவண்வண்டூர் **
    கரு வண்ணம் செய்ய வாய் * செய்ய கண் செய்ய கை செய்ய கால் *
    செரு ஒண் சக்கரம் சங்கு * அடையாளம் திருந்தக் கண்டே (7)
  • TVM 6.1.8
    3350 திருந்தக் கண்டு எனக்கு ஒன்று உரையாய் * ஒண் சிறு பூவாய் *
    செருந்தி ஞாழல் மகிழ் * புன்னை சூழ் தண் திருவண்வண்டூர் **
    பெரும் தண் தாமரைக்கண் * பெரு நீள் முடி நால் தடந்தோள் *
    கருந் திண் மா முகில் போல் * திருமேனி அடிகளையே (8)
  • TVM 6.1.9
    3351 அடிகள் கைதொழுது * அலர்மேல் அசையும் அன்னங்காள் *
    விடிவை சங்கு ஒலிக்கும் * திருவண்வண்டூர் உறையும் **
    கடிய மாயன் தன்னைக் * கண்ணனை நெடுமாலைக் கண்டு *
    கொடிய வல்வினையேன் * திறம் கூறுமின் வேறுகொண்டே (9)
  • TVM 6.1.10
    3352 வேறுகொண்டு உம்மை யான் இரந்தேன் * வெறி வண்டினங்காள் *
    தேறு நீர்ப் பம்பை * வடபாலைத் திருவண்வண்டூர் **
    மாறு இல் போர் அரக்கன் * மதிள் நீறு எழச் செற்று உகந்த *
    ஏறு சேவகனார்க்கு * என்னையும் உளள் என்மின்களே (10)
  • TVM 6.1.11
    3353 ## மின் கொள் சேர் புரிநூல் குறள் ஆய் * அகல் ஞாலம் கொண்ட *
    வன் கள்வன் அடிமேல் * குருகூர்ச் சடகோபன் சொன்ன **
    பண் கொள் ஆயிரத்துள் இவை பத்தும் * திருவண்வண்டூர்க்கு *
    இன்கொள் பாடல் வல்லார் * மதனர் மின்னிடை யவர்க்கே (11)