O Myna Bird! Speak to the Lord for My Sake.
நாகணவாய்ப் பறவையே! பிரானிடம் என்பொருட்டு உரை
3350 திருந்தக்கண்டெனக்கொன்றுரையாய் ஒண்சிறுபூவாய்! *
செருந்திஞாழல்மகிழ் புன்னைசூழ்தண்திருவண்வண்டூர் *
பெருந்தண்தாமரைக்கண் பெருநீள்முடிநால்தடந்தோள் *
கருந்திண்மாமுகில்போல் திருமேனியடிகளையே.