Chapter 4

Complaining about the length of the night - (ஊர் எல்லாம்)

தலைவி இரவு நீட்டிப்புக்கு வருந்திக் கூறல்
In order to engage in the act of madal (pursuing Him by going against Āzhvār’s nature), nAyaki has to sketch her nAyakan’s (paramour) image. But, the disappearance of the sun giving way to the darkness hampered her attempt. Āzhvār immediately attributed this impediment to thinking that Bhagavān used His divine discus to conceal the sun and bring in + Read more
மடலூர வேண்டுமாயின், தான் விரும்புகின்ற நாயகனை ஒரு படத்தில் எழுதவேண்டும். ஆனால், சூரியன் மறைந்து இருள் வந்து அவரது முயற்சியைத் தடுத்துவிட்டது. “இவள் மடலூர்வது தனக்குக் கவுரவக் குறைவு” என்று பகவானே ஆழியால் சூரியனை மறைத்து இருள் வரச்செய்துவிட்டானோ என்றும் அவர் நினைத்தார்.

நள்ளிரவு + Read more
Verses: 3266 to 3276
Grammar: Kaliviruththam / கலிவிருத்தம்
Pan: புறநீர்மை
Timing: 6.00- 7.12. AM
Recital benefits: will go to Vaikuntam
Tamil
Simplified
English
Verse info
Synonyms
Translation

TVM 5.4.1

3266 ஊரெல்லாம்துஞ்சி உலகெல்லாம்நள்ளிருளாய் *
நீரெல்லாம்தேறி ஓர்நீளிரவாய்நீண்டதால் *
பாரெல்லாமுண்ட நம்பாம்பணையான்வாரானால் *
ஆர்? எல்லே! வல்வினையேன் ஆவிகாப்பார்இனியே? (2)
3266 ## ஊர் எல்லாம் துஞ்சி * உலகு எல்லாம் நள் இருள் ஆய் *
நீர் எல்லாம் தேறி * ஓர் நீள் இரவு ஆய் நீண்டதால் **
பார் எல்லாம் உண்ட * நம் பாம்பு அணையான் வாரானால் *
ஆர் எல்லே வல்வினையேன் * ஆவி காப்பார் இனியே? (1)
3266 ## ūr ĕllām tuñci * ulaku ĕllām nal̤ irul̤ āy *
nīr ĕllām teṟi * or nīl̤ iravu āy nīṇṭatāl **
pār ĕllām uṇṭa * nam pāmpu aṇaiyāṉ vārāṉāl *
ār ĕlle valviṉaiyeṉ * āvi kāppār iṉiye? (1)

Ragam

Kandā / கண்டா

Thalam

Tiripuṭai / திரிபுடை

Bhavam

Nāyaki (lovelorn lady)

Simple Translation

In the stillness of the night, as the town slumbers and darkness blankets the world, a profound silence settles over the land and waters. It feels like an endless night, with the Lord, who once devoured the worlds, remaining distant. In this moment of solitude and longing, the question arises: Who will come to the aid of this troubled soul?

Explanatory Notes

The Nāyakī laments that the benevolent Lord, who sustained all the worlds with their contents, in His stomach and protected them during the deluge, does not come to her aid in her present state of distress. The slanderous folks whose gossips actually fostered her God-love are fast asleep and so is the rest of the world. The Nāyakī cannot move about either because it is + Read more

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion (Aṉvayam). Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
ஊர் எல்லாம் துஞ்சி ஊர் முழுவதும் உறங்கிப்போய்; உலகு எல்லாம் உலகம் எல்லாம்; நள் இருளாய் இருள் சூழ்ந்துவிட்டது; நீர் எல்லாம் தேறி நீர் நிலம் எல்லாம் ஒலி அடங்கி; ஓர் நீள் இரவு ஆய் ஒரு நீண்ட இரவாய்; நீண்டதால் நீண்டதால் நான் என்ன செய்வேன்?; பார் எல்லாம் உண்ட பிரளயத்தில் உலகை உண்ட; நம் பாம்பு ஆதிசேஷன் மீது; அணையான் பள்ளி கொள்ளும் பெருமான்; வாரானால் வரவில்லை; இனி இனி; வல்வினையேன் கொடும்பாவியான என்னுடைய; ஆவி காப்பார் உயிரை காப்பவர் யார்?; ஆர் எல்லே! யார் உள்ளார்?
thunji is sleep; ulagellām the whole world; nal̤ abundant; irul̤āy being dark; nīr water; ellām all; thĕṛi quiet, without any tides (as the living beings that live in water have slept); ŏr just being night, without any difference between day and night; nīl̤ extended; iravāy night; nīṇdadhu stretched so that there appears no end to it;; pār earth which was in danger due to pral̤aya (total deluge); ellām the whole; uṇda one who kept it in his stomach and protected it; pāmbu thiruvanthāzhwān (ādhi ṣĕsha), the servitor; aṇaiyān having as bed and protecting him; nam one who is the refuge for us; vārān have not arrived and protected us; ellĕ alas!; ini now, when the protector has not helped; val very strong (that which cannot be exhausted by experiencing the fruits of); vinaiyĕn ī, who am a sinner, my; āvi āthmā (self); kāppār protector/saviour; ār who?; āzh deep; kadal ocean

TVM 5.4.2

3267 ஆவிகாப்பாரினியார்? ஆழ்கடல்மண்விண்மூடி *
மாவிகாரமாய் ஓர்வல்லிரவாய்நீண்டதால் *
காவிசேர்வண்ணன் என்கண்ணனும்வாரானால் *
பாவியேன்நெஞ்சமே! நீயும்பாங்கல்லையே.
3267 ஆவி காப்பார் இனி யார்? * ஆழ் கடல் மண் விண் மூடி *
மா விகாரம் ஆய் * ஓர் வல் இரவு ஆய் நீண்டதால் **
காவி சேர் வண்ணன் * என் கண்ணனும் வாரானால் *
பாவியேன் நெஞ்சமே * நீயும் பாங்கு அல்லையே. (2)
3267 āvi kāppār iṉi yār? * āzh kaṭal maṇ viṇ mūṭi *
mā vikāram āy * or val iravu āy nīṇṭatāl **
kāvi cer vaṇṇaṉ * ĕṉ kaṇṇaṉum vārāṉāl *
pāviyeṉ nĕñcame * nīyum pāṅku allaiye. (2)

Ragam

Kandā / கண்டா

Thalam

Tiripuṭai / திரிபுடை

Bhavam

Nāyaki (lovelorn lady)

Simple Translation

In this never-ending, dark night that veils the deep sea, the land, and the sky, my mind, too, offers no solace. Alas! my only refuge, Kaṇṇaṉ, the Lord with a blue tint, does not come to my aid. Who will save me in the days to come?

Explanatory Notes

In the middle of the famous ‘Rāsa Krīḍa’, when Kṛṣṇa danced with the Gopīs, the damsels of Vrindāvan, He disappeared for a while, and the Gopīs were thrown on tenter hooks. But then, Kṛṣṇa reappeared and made amends for His sudden withdrawal by assuming the form, par excellence, far more exquisite than in the earlier session. The Nāyakī too probably expected the Lord to present Himself before her likewise, but this expectation didn’t materialise. Hence, this lamentation.

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion (Aṉvayam). Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
ஆழ் கடல் ஆழ்ந்த கடலையும்; மண் விண் மூடி பூமியையும் ஆகாசத்தையும் மறைத்து; மா விகாரம் ஆய் விகாரமான; ஓர் வல் இரவு ஆய் ஒரு பெரிய இரவாய் இருள்; நீண்டதால் வளர்வதால் அந்தோ! என் செய்வேன்; காவி சேர் நெய்தல் பூப்போன்ற; வண்ணன் வடிவழகையுடைய; என் கண்ணனும் என் கண்ணனும்; வாரானால் வரவில்லை; பாவியேன் பாவியான என்; நெஞ்சமே! மனமே!; நீயும் பாங்கு நீயும் எனக்கு ஆதரவாய்; அல்லையே இல்லையே; ஆவி காப்பார் என் உயிரைக் காப்பவர்; இனி யார்? இனி யார் உளர்?
maṇ earth; viṇ sky; mūdi covering; huge; vikāramāy having a well developed state; val dense (even many suns cannot break the darkness); ŏr iravāy lengthy night filled with darkness; nīṇdadhu extended without an end;; kāvi with neydhal (blue nelumbo) flower; sĕr matching; vaṇṇan having complexion; en obedient to have such complexion as my wealth; kaṇṇanum krishṇa; vārān have not come so far;; pāviyĕn one who is having sins (which makes the obedient krishṇa to disobey me), my; nenjamĕ oh heart!; nīyum you too; pāngallai are not favourable;; ini when krishṇa, the protector is not helping and you, the companion are not helping,; āvi my life; kāppār protector; ār who?; nenjamĕ ŏh heart!; niyum you who are the main cause for all actions

TVM 5.4.3

3268 நீயும்பாங்கல்லைகாண் நெஞ்சமே! நீளிரவும் *
ஓயும்பொழுதின்றி ஊழியாய்நீண்டதால் *
காயும்கடுஞ்சிலை என்காகுத்தன்வாரானால் *
மாயும்வகையறியேன் வல்வினையேன்பெண்பிறந்தே.
3268 நீயும் பாங்கு அல்லைகாண் * நெஞ்சமே நீள் இரவும் *
ஓயும் பொழுது இன்றி * ஊழி ஆய் நீண்டதால் *
காயும் கடும் சிலை * என் காகுத்தன் வாரானால் *
மாயும் வகை அறியேன் * வல்வினையேன் பெண் பிறந்தே * (3)
3268 nīyum pāṅku allaikāṇ * nĕñcame nīl̤ iravum *
oyum pŏzhutu iṉṟi * ūzhi āy nīṇṭatāl *
kāyum kaṭum cilai * ĕṉ kākuttaṉ vārāṉāl *
māyum vakai aṟiyeṉ * valviṉaiyeṉ pĕṇ piṟante * (3)

Ragam

Kandā / கண்டா

Thalam

Tiripuṭai / திரிபுடை

Bhavam

Nāyaki (lovelorn lady)

Simple Translation

As the night stretches on endlessly, my own mind refuses to cooperate, adding to the sense of eternity in this dark hour. The mighty Kākuttaṉ, whose formidable bow strikes down enemies, remains elusive. As a troubled soul born into the limitations of a female existence, I am left wondering about my fate, uncertain of how to find resolution in this moment of despair.

Explanatory Notes

The Nāyakī is in the same predicament as Sītā during her captivity in Laṅkā. Sītā lamented that there was none in that hostile land who could help her with poison or a sharp knife to end her miserable life. There at least, Sītā could hear the heartening sound from Śrī Rāma’s (Kākuttaṉ’s) bow in the nearby battlefield, which disillusioned her and set her mind at ease, when + Read more

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion (Aṉvayam). Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
நெஞ்சமே! மனமே!; நீயும் பாங்கு நீயும் எனக்கு உதவியாக; அல்லைகாண் இருக்கவில்லை; நீள் இரவும் நீண்ட இரவும்; ஓயும் பொழுது இன்றி ஓயாதவாறு; ஊழியாய் ஊழிகாலம் போல்; நீண்டதால் வளர்கிறது அந்தோ என் செய்வேன்; காயும் விரோதிகளை அழிக்கும்; கடுஞ் சிலை கொடிய வில்லையுடைய; என் காகுத்தன் என் ராமபிரானும்; வாரானால் வரவில்லை; வல் கொடிய; வினையேன் பாபத்தையுடைய நான்; பெண் பிறந்தே பெண்ணாய்ப் பிறந்து வருந்தியும்; மாயும் வகை இறக்கும் வகை; அறியேன் அறியேன் அதற்கும் உரிமை இல்லையே!
pāngu allai are not obedient;; nīl̤ already extending; iravum night; ŏyum pozhudhu ending time; inṛi not having; ūzhiyāy like a kalpa (a day of brahmā); nīṇdadhu stretched;; kāyum roasting the enemies of his devotees; kadu cruel; silai having ṣrī ṣārnga [divine bow]; en kāguththan [kākuthstha] ṣrī rāma, chakravarthi thirumangan (divine son of emperor dhaṣaratha), who is born in the family heritage which gives great importance to helping others; vārān has not helped me like he helped sīthā, the divine daughter of king ṣrī janaka; val vinaiyĕn ī who am having great sins (which stop even emperumān from helping); peṇ woman (who does not even have the independence to kill herself); piṛandhu having been born; māyum vagai ways to finish myself; aṛiyĕn ī don-t know; peṇ as a female; piṛandhār born

TVM 5.4.4

3269 பெண்பிறந்தாரெய்தும் பெருந்துயர்காண்கிலேனென்று *
ஒண்சுடரோன் வாராதொளித்தான் * இம்மண்ணளந்த
கண்பெரியசெவ்வாய் எங்காரேறுவாரானால் *
எண்பெரியசிந்தைநோய் தீர்ப்பாரார்என்னையே?
3269 பெண் பிறந்தார் எய்தும் * பெரும் துயர் காண்கிலேன் என்று *
ஒண் சுடரோன் * வாராது ஒளித்தான் ** இம் மண் அளந்த
கண் பெரிய செவ்வாய் * எம் கார் ஏறு வாரானால் *
எண் பெரிய சிந்தை நோய் * தீர்ப்பார் ஆர் என்னையே? (4)
3269 pĕṇ piṟantār ĕytum * pĕrum tuyar kāṇkileṉ ĕṉṟu *
ŏṇ cuṭaroṉ * vārātu ŏl̤ittāṉ ** im maṇ al̤anta
kaṇ pĕriya cĕvvāy * ĕm kār eṟu vārāṉāl *
ĕṇ pĕriya cintai noy * tīrppār ār ĕṉṉaiye? (4)

Ragam

Kandā / கண்டா

Thalam

Tiripuṭai / திரிபுடை

Bhavam

Nāyaki (lovelorn lady)

Simple Translation

It seems the Sun refuses to shine upon a woman in such deep distress. My Lord, with skin like a cloud and features akin to a bull, whose eyes are wide and lips red, does not come to my aid. Alas! Who can cure me of this cruel mental affliction?

Explanatory Notes

The sun’s diurnal course is put through, regularly, at the Lord’s command and he dare not disobey. And yet, he would not come out, for fear of seeing the Nāyakī in such great distress. At the same time, he is afraid of being hunted out by the Lord’s emissaries and, therefore, keeps hiding somewhere beyond their reach. This has resulted in prolongation of the night. Well, + Read more

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion (Aṉvayam). Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
பெண் பெண்ணாய்; பிறந்தார் பிறந்தவர்கள்; எய்தும் பெருந் துயர் அடையும் பெரும் துயரை; காண்கிலேன் என்று காணமாட்டேன் என்றெண்ணி; ஒண் சுடரோன் உதயகால சூரியன்; வாராது வராமலே; ஒளித்தான் மறைந்து போனான் போலும்; இம் மண் அளந்த இப்பூமியை அளந்தவனும்; கண் பெரிய பெரிய கண்களையுடையவனும்; செவ்வாய் சிவந்த அதரத்தையுடையவனும்; எம் கார் ஏறு காளை போன்றவனுமான எம்பெருமானும்; வாரானால் வரவில்லையே அந்தோ!; எண் பெரிய நினைக்கவும் முடியாத; சிந்தைநோய் சிந்தை நோயை; என்னையே என்னிடத்திலிருந்து; தீர்ப்பார் ஆர்? நீக்கவல்லவர் யார்?
eydhum gets; perum thuyar unbearable great sorrow; kāṇgilĕn unable to witness; enṛu saying so; oṇ attractive during the time of dawn; sudarŏn radiant sun; vārādhu not coming; ol̤iththān hid himself (so that he is not found, even if searched for);; i this; maṇ earth; al̤andha as a result of joy due to measuring it to keep it for himself; periya vast; kaṇ divine eyes; sem reddish; vāy having divine lips; em (like that earth, with his beautiful features) making us exist exclusively for him; kār having cloud like blackish form; ĕṛu thrivikrama who appears like a prideful bull (having accomplished his desired task); vārān has not come;; periya great (to be out of reach, not conceivable through speech and mind); sindhai nŏy mental anguish; ennai me; thīrppār will eliminate; ār who?; annaiyarum mothers (who protect with affection); thŏzhiyarum friends (who protect due to well-wishing heart)

TVM 5.4.5

3270 ஆரென்னையாராய்வார்? அன்னையரும்தோழியரும் *
நீரென்னே? என்னாதே நீளிரவும்துஞ்சுவரால் *
காரன்னமேனி நங்கண்ணனும்வாரானால் *
பேரென்னைமாயாதால் வல்வினையேன்பின்னின்றே.
3270 ஆர் என்னை ஆராய்வார்? * அன்னையரும் தோழியரும் *
நீர் என்னே என்னாதே * நீள் இரவும் துஞ்சுவரால் **
கார் அன்ன மேனி * நம் கண்ணனும் வாரானால் *
பேர் என்னை மாயாதால் * வல்வினையேன் பின் நின்றே (5)
3270 ār ĕṉṉai ārāyvār? * aṉṉaiyarum tozhiyarum *
nīr ĕṉṉe ĕṉṉāte * nīl̤ iravum tuñcuvarāl **
kār aṉṉa meṉi * nam kaṇṇaṉum vārāṉāl *
per ĕṉṉai māyātāl * valviṉaiyeṉ piṉ niṉṟe (5)

Ragam

Kandā / கண்டா

Thalam

Tiripuṭai / திரிபுடை

Bhavam

Nāyaki (lovelorn lady)

Simple Translation

As the night drags on, both the elders and companions slumber, leaving me to confront the darkness alone. Even our beloved cloud-hued Kaṇṇaṉ remains out of reach. Despite this solitude, my name will endure, even after this troubled soul has passed on.

Explanatory Notes

Oh, how enchanting is this God-sickness! The Āzhvār who keeps scanning the whole scene, laments that there is none to think of him. What is even more exciting is his own statement that his name will outlive him. How true! the entire vaiṣṇavite world rests on him. But there the Nāyakī means to say that, on the one hand, the mates and the elders sleep on with no thought + Read more

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion (Aṉvayam). Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
அன்னையரும் தாய்மாரும்; தோழியரும் தோழிமாரும்; நீர் என்னே! உனக்கு இப்படி ஒரு கஷ்டமா; என்னாதே என்று நினைக்காமல்; நீள் இரவும் நீண்ட இரவு முழுவதும்; துஞ்சுவரால் உறங்குகிறார்களே அந்தோ!; கார் அன்ன மேகத்தையொத்த; மேனி திருமேனியையுடைய; நம் கண்ணனும் நம் கண்ணனும்; வாரானால் வரவில்லையே; மாயாதால் வாழ்நாள் முடியவேண்டும் என்று நான்; வல்வினையேன் விரும்பினாலும் என் கொடிய வினைகள்; பின் நின்றே என்னைப் போகவிடவில்லையே; ஆர் என்னை என்னைப் பற்றி; ஆராய்வார் யோசிப்பவர் யார்; பேர் என்னை என் சரீரம் அழிந்தாலும் என் பெயர் நிலைக்கும்
nīr her condition; ennĕ how is it; ennādhĕ instead of determining; nīl̤ lengthy; iravum the whole night; thunjuvar are sleeping;; kār anna like a dark cloud (which is having the quality to greatly help others); mĕni having a divine form; nam one who is obedient towards us; kaṇṇanum krishṇa too; vārān has not come to protect;; val vinaiyĕn for me who is having very strong sins (which stops even those who protect, not to protect); pin behind; ninṛu standing; pĕr for name sake; ennai me; māyādhu not allowing to die;; ennai me; ārāyvār one who protects; ār who?; pin following; ninṛa not leaving

TVM 5.4.6

3271 பின்நின்றகாதல்நோய் நெஞ்சம்பெரிதடுமால் *
முன்நின்றிராவூழி கண்புதையமூடிற்றால் *
மன்னின்றசக்கரத்து எம்மாயவனும்வாரானால் *
இந்நின்றநீளாவி காப்பார்ஆர்இவ்விடத்தே?
3271 பின்நின்று காதல் நோய் * நெஞ்சம் பெரிது அடுமால் *
முன்நின்று இரா ஊழி * கண் புதைய மூடிற்றால் **
மன் நின்ற சக்கரத்து * எம் மாயவனும் வாரானால் *
இந் நின்ற நீள் ஆவி * காப்பார் ஆர் இவ் இடத்தே? * (6)
3271 piṉniṉṟu kātal noy * nĕñcam pĕritu aṭumāl *
muṉniṉṟu irā ūzhi * kaṇ putaiya mūṭiṟṟāl **
maṉ niṉṟa cakkarattu * ĕm māyavaṉum vārāṉāl *
in niṉṟa nīl̤ āvi * kāppār ār iv iṭatte? * (6)

Ragam

Kandā / கண்டா

Thalam

Tiripuṭai / திரிபுடை

Bhavam

Nāyaki (lovelorn lady)

Simple Translation

This longing, like a persistent sickness, consumes my mind, while the endless night ahead blinds my eyes. My beloved Lord, who wields the unseparable discus, does not appear. Who then can offer protection to my weary life?

Explanatory Notes

(i) It is a strange sickness that afflicts the Nāyakī. This Godsickness or God-love keeps on pushing her from behind and will, she says, pursue her even on the yonder side of death, unlike the earthly kind of sickness, which holds sway only as long as there is life.

(ii) While the night makes for physical blindness, God-love screens her mind’s eye. It is a pity, the darkness prevents the Nāyakī from beholding her Lord, if He were at all to present Himself before her at that hour.

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion (Aṉvayam). Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
பின் நின்ற தொடர்ந்து விடாமல் நிற்கும்; காதல் நோய் காதல் நோய்; நெஞ்சம் என் மனதைப் பெரிதும்; அடுமால் அழிக்கின்றதே அந்தோ!; முன் நின்று இரா இரவான; ஊழி கண் புதைய ஊழிகாலம் கண்ணை; மூடிற்றால் மறைக்கின்றது; மன் நின்ற அடியார்களின் வினை தீர்க்கும்; சக்கரத்து சக்கரத்தை உடைய; எம் மாயவனும் எம்பெருமானும்; வாரானால் வரவில்லையே; இன் நின்ற முடிவில்லாத; நீள் ஆவி நீள்கின்ற இவ்வுயிரை; இவ் இடத்தே இந்த நிலையில்; காப்பார் ஆர்? காப்பார் ஆர்?
kādhal love; nŏy disease; nenjam heart (which is its originating place); perithu very; adum destroyed;; mun in front; ninṛu standing; irā night; ūzhi kalpa (day of brahma, eon); kaṇ eye [vision]; pudhaiya to cover; mūdiṝu concealed;; manninṛa present eternally (to eliminate the enemies of devotees); chakkaram being the one with divine [sudharṣana] chakra (disc); em māyavanum krishṇa who made himself as our wealth by manifesting his amaśing qualities; vārān has not come;; ninṛa that which is not weakened even after experiencing sorrows eternally; en my; nīl̤ eternal; i this; āvi āthmā (soul); ivvidaththu in this situation; kāppār protector; ār who?; ivvidaththu in this condition (when the protector is not helping); kāppār protector

TVM 5.4.7

3272 காப்பாரார் இவ்விடத்து? கங்கிருளின்நுண்துளியாய் *
சேட்பாலதூழியாய்ச் செல்கின்றகங்குல்வாய் *
தூப்பாலவெண்சங்கு சக்கரத்தன்தோன்றானால் *
தீப்பாலவல்வினையேன் தெய்வங்காள்! என்செய்கேனோ?
3272 காப்பார் ஆர் இவ் இடத்து? * கங்கு இருளின் நுண் துளி ஆய் *
சேண் பாலது ஊழி ஆய் * செல்கின்ற கங்குல்வாய் **
தூப் பால வெண் சங்கு * சக்கரத்தன் தோன்றானால் *
தீப் பால வல்வினையேன் * தெய்வங்காள் என் செய்கேனோ? (7)
3272 kāppār ār iv iṭattu? * kaṅku irul̤iṉ nuṇ tul̤i āy *
ceṇ pālatu ūzhi āy * cĕlkiṉṟa kaṅkulvāy **
tūp pāla vĕṇ caṅku * cakkarattaṉ toṉṟāṉāl *
tīp pāla valviṉaiyeṉ * tĕyvaṅkāl̤ ĕṉ cĕykeṉo? (7)

Ragam

Kandā / கண்டா

Thalam

Tiripuṭai / திரிபுடை

Bhavam

Nāyaki (lovelorn lady)

Simple Translation

On this dark and dewy night, the Lord, adorned with the discus and conch, doesn't appear before me. Who can protect me in this state? Oh, deities, what can this fearful sinner do?

Explanatory Notes

(i) When the whole world is plunged in protracted darkness the Nāyakī finds the godlings awake and, in a spirit of companionship, the wakeful Nāyakī cries out her woe to the wakeful deities and perhaps enlists their sympathy.

(ii) The Nāyakī who had earlier been proclaiming from the house-top that the Lord is the Sole Protector and we, His Subjects, are His exclusive + Read more

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion (Aṉvayam). Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
இவ்விடத்து இந்நிலையில்; காப்பார் ஆர்? காப்பவர் யார்?; கங்கு இருளின் தடித்த இருளையும்; நுண் துளியாய் பனித்துளியையும் உடைய; சேண் பால் அதி நுட்பமான; அது ஊழியாய் ஊழிகாலமாய்; செல்கின்ற கங்குல் வாய் செல்கின்ற இரவானது; தூப் பால அழுக்கற்ற; வெண் சங்கு வெண்மையான சங்கையும்; சக்கரத்தன் சக்கரத்தையும் உடையவனும்; தோன்றானால் வரவில்லையே அந்தோ!; தெய்வங்காள்! தேவதைகளே!; தீப் பால மிகக் கொடிய; வல்வினையேன் பாவங்களை உடைய நான்; என் செய்கேனோ? என்ன செய்வேன்?
ār who?; kangu abundant to be in the ultimate state; irul̤ darkness; nuṇ tiny; thul̤i misty droplet; āy having; sĕṇ very lengthy; pāladhu having the nature; ūzhiyāy kalpa (eon); selginṛa passing; kangulvāy in the night; thū pure; pāla having nature; veṇ white; sangu ṣrīpānchajanya; chakkaraththan one who is having divine sudharṣana chakra; thŏnṛān not appearing;; thī like fire; pāla burning nature; val very strong; vinaiyĕn ī, who am having sins; dheyvangāl̤ ŏh dhĕvathās (who are watching my suffering without even blinking the eyes); en what; seygĕn shall do?; dheyvangāl̤ ŏh dhĕvathās (celestial beings, who are awake)!; en what

TVM 5.4.8

3273 தெய்வங்காள்! என்செய்கேன்! ஓரிரவுஏழூழியாய் *
மெய்வந்துநின்று எனதாவிமெலிவிக்கும் *
கைவந்தசக்கரத்து என்கண்ணனும்வாரானால் *
தைவந்ததண்தென்றல் வெஞ்சுடரில்தானடுமே.
3273 தெய்வங்காள் என் செய்கேன்? * ஓர் இரவு ஏழ் ஊழி ஆய் *
மெய் வந்து நின்று * எனது ஆவி மெலிவிக்கும் **
கைவந்த சக்கரத்து * என் கண்ணனும் வாரானால் *
தைவந்த தண் தென்றல் * வெம் சுடரில் தான் அடுமே * (8)
3273 tĕyvaṅkāl̤ ĕṉ cĕykeṉ? * or iravu ezh ūzhi āy *
mĕy vantu niṉṟu * ĕṉatu āvi mĕlivikkum **
kaivanta cakkarattu * ĕṉ kaṇṇaṉum vārāṉāl *
taivanta taṇ tĕṉṟal * vĕm cuṭaril tāṉ aṭume * (8)

Ragam

Kandā / கண்டா

Thalam

Tiripuṭai / திரிபுடை

Bhavam

Nāyaki (lovelorn lady)

Simple Translation

In the silent night, I find myself tormented by the darkness that seems to stretch endlessly. Despite my pleas, even my beloved Lord Kaṇṇaṉ, who wields the powerful Discus, remains elusive. The once comforting breeze now feels like flames, intensifying my suffering. Oh, divine beings, what can I do in this moment of agony as the night weighs heavily on my spirit, engulfing me in its relentless grip?

Explanatory Notes

The Nāyakī is already emaciated due to separation from her Lord; the dark night of extra-ordinary duration now exploits her weakness by inflicting on her countless miseries. In her present state, even the cool, southerly breeze is far from soothing; actually, it produces the diametrically opposite effect. The night seems to assume, with a vengeance, several forms, (even + Read more

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion (Aṉvayam). Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
தெய்வங்காள்! தெய்வங்களே!; என்செய்கேன்? என்ன செய்வேன்?; ஓர் இரவு ஒரு இரவுப் பொழுதானது; ஏழ் ஊழியாய் ஏழு ஊழிகாலம் போல்; மெய் உண்மையில்; வந்து நின்று என் முன்னே வந்து நின்று; எனது ஆவி என் உயிரை; மெலிவிக்கும் மெலியச்செய்கிறது; கை வந்த கையில் ஏந்திய; சக்கரத்து சக்கரத்தை உடைய; என் கண்ணனும் என் கண்ணனும்; வாரானால் வரவில்லையே அந்தோ!; தை வந்த தடவுவது போல் வரும்; தண் தென்றல் குளிர்ந்த தென்றல் காற்றும்; வெஞ்சுடரில் கொடிய நெருப்பைக் காட்டிலும்; தான் அடுமே அதிகமாகச் சுடுகிறதே
seygĕn can (ī) do?; ŏr one; iravu night; ĕzhu seven; ūzhiyāy feeling like kalpa (brahmā-s day, eon); mey truthfully; vandhu coming in forefront; ninṛu standing; enadhu my; āvi prāṇa (life, vital air); melivikkum weakens;; kai vandha obedient (to act knowing the inner thoughts fully); chakkaram having divine disc; en kaṇṇanum krishṇa; vārān has not come (to eliminate this night with the help of that chakra);; thai vandha caressing (like those who come to torture); thaṇ cool; thenṛal [southerly] breeśe; vem hot; sudaril more than fire; adum burning.; vīngu huge; irul̤ having darkness

TVM 5.4.9

3274 வெஞ்சுடரில்தானடுமால் வீங்கிருளின்நுண்துளியாய் *
அஞ்சுடரவெய்யோன் அணிநெடுந்தேர்தோன்றாதால் *
செஞ்சுடர்த்தாமரைக்கண் செல்வனும்வாரானால் *
நெஞ்சிடர்தீர்ப்பாரினியார்? நின்றுருகுகின்றேனே.
3274 வெம் சுடரில் தான் அடுமால் * வீங்கு இருளின் நுண் துளி ஆய் *
அம் சுடர வெய்யோன் * அணி நெடும் தேர் தோன்றாதால் **
செஞ் சுடர்த் தாமரைக்கண் * செல்வனும் வாரானால் *
நெஞ்சு இடர் தீர்ப்பார் இனி யார்? நின்று உருகுகின்றேனே * (9)
3274 vĕm cuṭaril tāṉ aṭumāl * vīṅku irul̤iṉ nuṇ tul̤i āy *
am cuṭara vĕyyoṉ * aṇi nĕṭum ter toṉṟātāl **
cĕñ cuṭart tāmaraikkaṇ * cĕlvaṉum vārāṉāl *
nĕñcu iṭar tīrppār iṉi yār? niṉṟu urukukiṉṟeṉe * (9)

Ragam

Kandā / கண்டா

Thalam

Tiripuṭai / திரிபுடை

Bhavam

Nāyaki (lovelorn lady)

Simple Translation

In this dark night, with tiny dewdrops falling, the absence of the radiant Sun's chariot and the sight of the opulent Lord with red-lotus eyes are nowhere to be found. My heart constantly melts in anguish. Who indeed will relieve the ache in my mind in such a state?

Explanatory Notes

The night is very oppressive and the Nāyakī is sinking deep in dejection. There is, however, no hope of relief yet; neither the Sun has come out nor even the Lord whom an ardent devotee of the calibre of the Nāyakī could reasonably expect in such moments of distress. Indeed, the Lord is the Sun that never sets and He illumines the entire universe spiritual world downwards. + Read more

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion (Aṉvayam). Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
வீங்கு இருளின் செறிந்த இருளையும்; நுண் நுண்ணிய; துளியாய் பனித்துளியையும் உடையதான; தான் இரவு; வெஞ்சுடரில் கொடிய நெருப்பைக்காட்டிலும்; அடுமால் சுடுகிறது அந்தோ!; அஞ்சுடர அழகிய ஒளியை உடைய; வெய்யோன் சூரியனின்; அணி நெடுந் தேர் அழகிய பெரிய தேரும்; தோன்றாதால் தோன்றவில்லையே; செஞ்சுடர் சிவந்த ஒளிபொருந்திய; தாமரைக் கண் தாமரை போன்ற கண்களை உடைய; செல்வனும் எம்பெருமானும்; வாரானால் நின்று வரவில்லை ஆதலால்; உருகுகின்றேனே மனமுடைந்து உருகுகிறேன்; நெஞ்சு இடர் என் மனத் துயரை; தீர்ப்பார் இனி யார்? போக்குவார் யார்?
nuṇ tiny; thul̤i mist droplet; āy having; vem hot; sudaril more than fire; adum burning;; am beautiful; sudar having rays; veyyŏn ādhithya who is the hot sun, his; aṇi beautiful; nedu tall; thĕr chariot; thŏnṛādhu not appearing;; sem reddish (highlighting his great opulence); sudar having radiance; thāmarai like a lotus flower; kaṇ one who is having eye; selvanum ṣrīmān [one who has ṣrī mahālakshmi]; vārān has not come;; ninṛu standing steadily; uruguginṛĕn ī am melting;; ini now; nenjidar the suffering in my mind; thīrppār destroyer; ār who?; ninṛu staying (instead of leaving); uruguginṛĕnĕ pŏla like me who is melting

TVM 5.4.10

3275 நின்றுருகுகின்றேனேபோல நெடுவானம் *
சென்றுருகிநுண்துளியாய்ச் செல்கின்றகங்குல்வாய் *
அன்றொருகால்வையம் அளந்தபிரான்வாரானென்று *
ஒன்றொருகால்சொல்லாது உலகோஉறங்குமே.
3275 நின்று உருகுகின்றேனே போல * நெடு வானம் *
சென்று உருகி நுண் துளி ஆய்ச் * செல்கின்ற கங்குல்வாய் **
அன்று ஒருகால் வையம் * அளந்த பிரான் வாரான் என்று *
ஒன்று ஒருகால் சொல்லாது * உலகோ உறங்குமே (10) *
3275 niṉṟu urukukiṉṟeṉe pola * nĕṭu vāṉam *
cĕṉṟu uruki nuṇ tul̤i āyc * cĕlkiṉṟa kaṅkulvāy **
aṉṟu ŏrukāl vaiyam * al̤anta pirāṉ vārāṉ ĕṉṟu *
ŏṉṟu ŏrukāl cŏllātu * ulako uṟaṅkume (10) *

Ragam

Kandā / கண்டா

Thalam

Tiripuṭai / திரிபுடை

Bhavam

Nāyaki (lovelorn lady)

Simple Translation

As the world slumbers deeply, I find myself engulfed in the darkness of the night. Each tiny dewdrop falls from the vast sky, echoing my own sense of dissolution. In this moment of despair, there is no solace, no comforting voice to assure me that the Lord, who once held the universe in His embrace, will come to my aid.

Explanatory Notes

(i) The Nāyakī thinks that the dew drops come from the sky, melting down, in distress, like her c.f. similar sentiments expressed by the Nāyakī in II-I ante.

(ii) It would be some consolation for her, if there was yet another soul, awake like her, to sustain her by recounting the Lord’s wondrous deeds as Trivikrama or tell her that she needn’t expect the Lord whose + Read more

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion (Aṉvayam). Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
உருகுகின்றேனே உருகுவதையே; நின்று நிலையாகப் பெற்ற என்னை; போல போல்; நெடு வானம் பரந்த ஆகாசமும்; சென்று உருகி உருகிப் போய் அதனால்; நுண் துளியாய் நுண்ணிய பனித்துளியாய்; செல்கின்ற செல்கின்ற; கங்குல் வாய் இரவுப் பொழுதில்; அன்று ஒரு கால் முன்பொரு காலத்தில்; வையம் அளந்த உலகை அளந்த; பிரான் பெருமான்; வாரான் என்று வரமாட்டான் என்று; ஒன்று ஒருகால் ஒரு வார்த்தை கூட; சொல்லாது இது பற்றிக் கூறாமல்; உலகோ உலகமே; உறங்குமே! உறங்குகின்றதே! அந்தோ!
nedu the vastly spacious; vānam sky; senṛu waning; urugum melting; nuṇ tiny; thul̤i droplets; āy having; selginṛa (continuously) going on; kangul vāy in the night; anṛu that day (when mahābali encroached upon); orukāl back then; vaiyam earth; al̤andha measured; pirān the one who benefits the whole world; vārān is he coming today; enṛu at least saying so; onṛu a word; orukāl once; sollādhu without saying so; ulagu world; uṛangum sleeping; ŏ! parānguṣa nāyaki saying with disgust -what kind of attitude is this?-; uṛanguvān pŏl pretending to be sleeping (when getting an opportunity to do so); yŏgu the meditation of thinking about protecting the world

TVM 5.4.11

3276 உறங்குவான்போல் யோகுசெய்தபெருமானை *
சிறந்தபொழில்சூழ் குருகூர்ச்சடகோபன்சொல் *
நிறங்கிளர்ந்தவந்தாதி ஆயிரத்திப்பத்தால் *
இறந்துபோய்வைகுந்தம் சேராவாறெங்ஙனேயோ? (2)
3276 ## உறங்குவான் போல் * யோகுசெய்த பெருமானை *
சிறந்த பொழில் சூழ் * குருகூர்ச் சடகோபன் சொல் **
நிறம் கிளர்ந்த அந்தாதி * ஆயிரத்துள் இப் பத்தால் *
இறந்து போய் வைகுந்தம் * சேராவாறு எங்ஙனேயோ? * (11)
3276 ## uṟaṅkuvāṉ pol * yokucĕyta pĕrumāṉai *
ciṟanta pŏzhil cūzh * kurukūrc caṭakopaṉ cŏl **
niṟam kil̤arnta antāti * āyirattul̤ ip pattāl *
iṟantu poy vaikuntam * cerāvāṟu ĕṅṅaṉeyo? * (11)

Ragam

Kandā / கண்டா

Thalam

Tiripuṭai / திரிபுடை

Bhavam

Nāyaki (lovelorn lady)

Simple Translation

Those who chant these ten songs, among the thousand sung by Caṭakōpaṉ in Kurukūr, where orchards bloom, praising the Lord who appears asleep but tirelessly works for His devotees' well-being, are destined for the spiritual realm afterlife.

Explanatory Notes

The Nāyakī had said, in the preceding song, that the whole world was asleep, suggesting that even the Lord had gone to sleep. The Lord was, however, quick to point out to the Āzhvār that He was not asleep but was only contemplating the manner in which He should present Himself to the Āzhvār and regale him. Thus informed, the Āzhvār could sustain himself and so also, the + Read more

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion (Aṉvayam). Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
உறங்குவான் போல் நித்திரை செய்பவன்போல்; யோகு செய்த யோக நித்திரை செய்யும்; பெருமானை பெருமானைக் குறித்து; சிறந்த பொழில் சூழ் சிறந்த சோலைகள் சூழ்ந்த; குருகூர் திருகுருகூரில் அவதரித்த; சடகோபன் நம்மாழ்வார்; சொல் அருளிச்செய்த; நிறம் கிளர்ந்த பண் நிறைந்த; அந்தாதி அந்தாதி; ஆயிரத்துள் ஆயிரம் பாசுரங்களுள்; இப் பத்தால் இந்தப் பத்துப் பாசுரங்களால்; இறந்து போய் மரணத்திற்குப்பின்; வைகுந்தம் வைகுந்தம்; சேராவாறு சேராமல்; எங்ஙனேயோ? இருப்பரோ?
seydha engaged in; perumānai about sarvĕṣvaran; siṛandha rich; pozhil garden; sūzh surrounded; kurugūr leader of āzhvārthirunagari; satakŏpan āzhvār; sol mercifully compiled; niṛam paṇ (tune); kil̤arndha abundant; andhādhi in anthādhi style (beginning of a pāsuram matching the ending of previous pāsuram); āyiraththul̤ among the thousand pāsurams; ip paththāl by this decad; iṛandhu shedding the body; pŏy travelling in the archirādhi (the illuminated) path; vaigundham in paramapadham (spiritual realm); sĕrāvāṛu not reaching; enganĕ how?; annimīrgāl̤ ŏh mothers!; nīr ẏou all