I Saw and Experienced the Lord of the Dark Divine Form.
கருமேனியம்மானைக் கண்டு அனுபவித்தேன்
3238 புறமறக்கட்டிக்கொண்டு இருவல்வினையார்குமைக்கும் *
முறைமுறையாக்கைபுகலொழியக் கண்டுகொண்டொழிந்தேன் *
நிறமுடைநால்தடந்தோள் செய்யவாய்செய்ய தாமரைக்கண் *
அறமுயலாழியங்கைக் கருமேனியம்மான்தன்னையே.