I Cried "O Primal Cause!": His Grace Was Attained.
ஆதிமூலமே என்றேன்: அவனருள் கிடைத்தது
3239 அம்மானாழிப்பிரான் அவன்எவ்விடத்தான்? யான்ஆர்? *
எம்மாபாவியர்க்கும் விதிவாய்க்கின்றுவாய்க்கும்கண்டீர் *
கைம்மாதுன்பொழித்தாய்! என்று கைதலைபூசலிட்டே *
மெய்ம்மாலாயொழிந்தேன் எம்பிரானும்என்மேலானே.