The Wielder of the Conch and Discus United with Me.
சங்கு சக்கரதாரி என்னோடு கூடினான்
3241 ஆவாரார்துணை? என்று அலைநீர்க்கடலுளழுந்தும்
நாவாய்போல் * பிறவிக்கடலுள் நின்றுநான்துளங்க *
தேவார்கோலத்தொடும் திருச்சக்கரம்சங்கினொடும் *
ஆவா! என்றருள்செய்து அடியேனொடுமானானே.