O Kaṇṇa! Having Seen You, I Was Saved.
கண்ணா! உன்னைக் கண்டுகொண்டு உய்ந்தேன்
3235 உள்ளனமற்றுளவாப் புறமேசிலமாயஞ்சொல்லி *
வள்ளல்! மணிவண்ணனே! என்றென்றே உன்னையும் வஞ்சிக்கும் *
கள்ளமனம்தவிர்ந்தே உன்னைக்கண்டுகொண்டுய்ந்தொழிந்தேன் *
வெள்ளத்தணைக்கிடந்தாயினியுன்னைவிட்டென்கொள்வனே!