O Lord of Tulasī! Come, So That We May Sing and Dance.
திருத்துழாயானே! யாங்கள் பாடியாடுதற்கு நீ வருக
3196 கண்டுகொண்டென்கைகளார நின்திருப்பாதங்கள்மேல் *
எண்திசையுமுள்ளபூக்கொண்டு ஏத்தியுகந்துகந்து *
தொண்டரோங்கள்பாடியாடச் சூழ்கடல்ஞாலத்துள்ளே *
வண்துழாயின்கண்ணிவேந்தே! வந்திடகில்லாயே.