O Kaṇṇa! I Will See You with the Eyes of Wisdom and Embrace You.
கண்ணா! நின்னை ஞானக் கண்களால் கண்டு தழுவுவேன்
3198 சக்கரத்தண்ணலே! என்று தாழ்ந்துகண்ணீர்ததும்ப *
பக்கம்நோக்கிநின்றலந்தேன் பாவியேன்காண்கின்றிலேன் *
மிக்கஞானமூர்த்தியாய வேதவிளக்கினை * என்
தக்கஞானக்கண்களாலே கண்டுதழுவுவனே.