Chapter 6

The joy emperumān acquired after uniting with Āzhvār - (வைகுந்தா மணிவண்ணனே)

ஆழ்வார் இறைவனைச் சிக்கெனப் பிடித்தல்
Bhagavān was pleased to reunite with Āzhvār; He stands wondering, “what help can I render Āzhvār? I’ve united with the unattainable Āzhvār. Would Āzhvār separate from me stating his differences out of humility? Āzhvār realizes Bhagavān’s thought process and says “My hold on you is not ordinary or casual; I will never let go of you, not even for a day. I have a strong hold on you with stubborn determination as you so desire”, so saying he firmly grasps onto Bhagavān.
ஆழ்வாரோடு வந்து கலந்த எம்பெருமான் திருப்தியடைந்தான்; இவருக்கு என்ன உதவி செய்யலாம்? என்று யோசித்து நின்றான்; பெறமுடியாத ஆழ்வாரைப் பெற்றோம். இவர் தமக்கு இல்லாத தாழ்மைகளை எல்லாம் ஏறிட்டுச் சொல்லிக் கொண்டு நம்மை விட்டுப் பிரிந்து விடுவாரோ! என்று எண்ணினான். இதனை அறிந்த ஆழ்வார், நான் பிடித்தபிடி + Read more
Verses: 2956 to 2966
Grammar: Āsiriyaththuṟai / ஆசிரியத்துறை
Pan: பழந்தக்கராகம்
Timing: 7.30 - 9.00 PM
Recital benefits: will be the devotees of Kesavan
  • TVM 2.6.1
    2956 ## வைகுந்தா மணிவண்ணனே * என் பொல்லாத் திருக்குறளா என்னுள் மன்னி *
    வைகும் வைகல் தோறும் * அமுது ஆய வான் ஏறே **
    செய் குந்தா அரும் தீமை உன் அடியார்க்குத் தீர்த்து * அசுரர்க்குத் தீமைகள்
    செய் குந்தா * உன்னை நான் பிடித்தேன் கொள் சிக்கெனவே. (1)
  • TVM 2.6.2
    2957 சிக்கெனச் சிறிது ஓர் இடமும் * புறப்படாத் தன்னுள்ளே * உலகுகள்
    ஒக்கவே விழுங்கிப் * புகுந்தான் புகுந்ததற்பின் **
    மிக்க ஞான வெள்ளச் சுடர் விளக்குஆய் * துளக்கு அற்று அமுதம் ஆய் * எங்கும்
    பக்கம் நோக்கு அறியான் * என் பைந்தாமரைக் கண்ணனே (2)
  • TVM 2.6.3
    2958 தாமரைக் கண்ணனை * விண்ணோர் பரவும் தலைமகனை * துழாய் விரைப்
    பூ மருவு கண்ணி * எம் பிரானைப் பொன்மலையை **
    நாம் மருவி நன்கு ஏத்தி * உள்ளி வணங்கி நாம் மகிழ்ந்து ஆட * நாவு அலர்
    பா மருவி நிற்கத் தந்த * பான்மையே வள்ளலே (3)
  • TVM 2.6.4
    2959 வள்ளலே மதுசூதனா * என் மரதக மலையே * உனை நினைந்து
    எள்கல் தந்த எந்தாய் * உன்னை எங்ஙனம் விடுகேன் **
    வெள்ளமே புரை நின் புகழ் குடைந்து ஆடிப் பாடிக் * களித்து உகந்து உகந்து *
    உள்ள நோய்கள் எல்லாம் துரந்து * உய்ந்து போந்திருந்தே? (4)
  • TVM 2.6.5
    2960 உய்ந்து போந்து என் உலப்பு இலாத * வெம் தீவினைகளை நாசம் செய்து * உனது
    அந்தம் இல் அடிமை அடைந்தேன் விடுவேனோ **
    ஐந்து பைந்தலை ஆடு அரவு அணை மேவிப் * பாற்கடல் யோக நித்திரை *
    சிந்தை செய்த எந்தாய் * உன்னைச் சிந்தை செய்து செய்தே? (5)
  • TVM 2.6.6
    2961 உன்னைச் சிந்தை செய்து செய்து * உன் நெடு மா மொழி இசை பாடி ஆடி * என்
    முன்னைத் தீவினைகள் * முழு வேர் அரிந்தனன் யான் **
    உன்னைச் சிந்தையினால் * இகழ்ந்த இரணியன் அகல் மார்வம் கீண்ட * என்
    முன்னைக் கோளரியே * முடியாதது என் எனக்கே? (6)
  • TVM 2.6.7
    2962 முடியாதது என் எனக்கேல் இனி? * முழு ஏழ் உலகும் உண்டான் * உகந்து வந்து
    அடியேன் உட்புகுந்தான் * அகல்வானும் அல்லன் இனி **
    செடி ஆர் நோய்கள் எல்லாம் துரந்து * எமர் கீழ் மேல் எழு பிறப்பும் *
    விடியா வெம் நரகத்து என்றும் * சேர்தல் மாறினரே (7)
  • TVM 2.6.8
    2963 மாறி மாறிப் பல பிறப்பும் பிறந்து * அடியை அடைந்து உள்ளம் தேறி *
    ஈறு இல் இன்பத்து இரு வெள்ளம் * யான் மூழ்கினன் **
    பாறிப் பாறி அசுரர் தம் * பல் குழாங்கள் நீறு எழ * பாய் பறவை ஒன்று
    ஏறி வீற்றிருந்தாய் * உன்னை என்னுள் நீக்கேல் எந்தாய் (8)
  • TVM 2.6.9
    2964 எந்தாய்! தண் திருவேங்கடத்துள் நின்றாய் * இலங்கை செற்றாய் * மராமரம்
    பைந்தாள் ஏழ் உருவ * ஒரு வாளி கோத்த வில்லா **
    கொந்து ஆர் தண் அம் துழாயினாய் அமுதே * உன்னை என்னுள்ளே குழைத்த எம்
    மைந்தா * வான் ஏறே * இனி எங்குப் போகின்றதே? (9)
  • TVM 2.6.10
    2965 போகின்ற காலங்கள் போய காலங்கள் * போகு காலங்கள் * தாய் தந்தை உயிர்
    ஆகின்றாய் * உன்னை நான் அடைந்தேன் விடுவேனோ? **
    பாகின்ற தொல் புகழ் மூவுலகுக்கும் * நாதனே! பரமா * தண் வேங்கடம்
    மேகின்றாய் * தண் துழாய் விரை நாறு கண்ணியனே (10)
  • TVM 2.6.11
    2966 ## கண்ணித் தண் அம் துழாய் முடிக் * கமலத் தடம் பெருங் கண்ணனை * புகழ்
    நண்ணி தென் குருகூர்ச் * சடகோபன் மாறன் சொன்ன **
    எண்ணில் சோர்வு இல் அந்தாதி * ஆயிரத்துள் இவையும் ஓர் பத்து இசையொடும் *
    பண்ணில் பாட வல்லார் * அவர் கேசவன் தமரே (11)