Chapter 3

Āndāl praising the Lord and asking for eternal service (அன்று இவ் உலகம்)

இறுதி இலக்கு: கைங்கர்ய சேவை
Āndāl praising the Lord and asking for eternal service (அன்று இவ் உலகம்)
Introduction & Details
Recitation
Translation

TP 3.24

497 அன்றிவ்வுலகமளந்தாய்! அடிபோற்றி *

சென்றங்குத்தென்லிங்கைசெற்றாய்! திறல்போற்றி *

பொன்றச்சகடமுதைத்தாய்! புகழ்போற்றி *

கன்றுகுணிலாஎறிந்தாய்! கழல்போற்றி *

குன்றுகுடையாவெடுத்தாய்! குணம்போற்றி *

வென்றுபகைகெடுக்கும் நின்கையில்வேல்போற்றி *

என்றென்றுன்சேவகமே ஏத்திப்பறைகொள்வான் *

இன்றுயாம்வந்தோம் இரங்கேலோரெம்பாவாய். (2)

TP 3.25

498 ஒருத்திமகனாய்ப்பிறந்து * ஓரிரவில்

ஒருத்திமகனாய் ஒளித்துவளர *

தரிக்கிலானாகித் தான்தீங்குநினைந்த *

கருத்தைப்பிழைப்பித்துக் கஞ்சன்வயிற்றில் *

நெருப்பென்னநின்ற நெடுமாலே! * உன்னை

அருத்தித்துவந்தோம் பறைதருதியாகில் *

திருத்தக்கசெல்வமும் சேவகமும்யாம்பாடி *

வருத்தமும்தீர்ந்து மகிழ்ந்தேலோரெம்பாவாய்.

TP 3.28

501 கறவைகள்பின்சென்று கானம்சேர்ந்துண்போம் *

அறிவொன்றுமில்லாத ஆய்க்குலத்து * உன்தன்னைப்

பிறவிபெறுந்தனைப் புண்ணியம்யாமுடையோம் *

குறைவொன்றுமில்லாத கோவிந்தா! * உன்தன்னோடு

உறவேல்நமக்கு இங்கொழிக்கவொழியாது *

அறியாதபிள்ளைகளோம் அன்பினால் * உன்தன்னை

சிறுபேரழைத்தனவும் சீறியருளாதே *

இறைவா! நீதாராய் பறையேலோரெம்பாவாய். (2)

TP 3.29

502 சிற்றஞ் சிறுகாலே வந்துன்னைச்சேவித்து * உன்

பொற்றாமரையடியே போற்றும்பொருள்கேளாய் *

பெற்றம்மேய்த்துண்ணுங் குலத்தில் பிறந்து * நீ

குற்றேவலெங்களைக் கொள்ளாமற்போகாது *

இற்றைப்பறைகொள்வா னன்றுகாண்கோவிந்தா! *

எற்றைக்கும் ஏழேழ்பிறவிக்கும் * உன்தன்னோடு

உற்றோமேயாவோம் உனக்கேநாமாட்செய்வோம் *

மற்றைநம்காமங்கள் மாற்றேலோரெம்பாவாய். (2)

TP 3.30

503 வங்கக்கடல்கடைந்த மாதவனைக்கேசவனைத் *

திங்கள்திருமுகத்துச் சேயிழையார்சென்றிறைஞ்சி *

அங்கப்பறைகொண்டவாற்றை * அணிபுதுவைப்

பைங்கமலத்தண்தெரியல் பட்டர்பிரான்கோதை சொன்ன *

சங்கத்தமிழ்மாலை முப்பதும்தப்பாமே *

இங்கிப்பரிசுரைப்பார் ஈரிரண்டுமால்வரைத்தோள் *

செங்கண்திருமுகத்துச் செல்வத்திருமாலால் *

எங்கும்திருவருள்பெற்று இன்புறுவரெம்பாவாய். (2)