RNA 58

பிற சமயங்களை வாதில் வென்றவன் இராமானுசன்

3950 பேதையர் வேதப்பொருளிதென்றுன்னி * பிரமம் நன்றென்று
ஓதிமற்றெல்லாவுயிருமஃதென்று * உயிர்கள்மெய்விட்டு
ஆதிப்பரனோடொன்றாமென்றுசொல்லுமவ்வல்லலெல்லாம்
வாதில்வென்றான் * எம்மிராமானுசன்மெய்ம்மதிக்கடலே.
3950 petaiyar vetap pŏrul̤ itu ĕṉṟu uṉṉi * piramam naṉṟu ĕṉṟu
oti maṟṟu ĕllā uyirum aḵtu ĕṉṟu ** uyirkal̤ mĕyviṭṭu
ātip paraṉoṭu ŏṉṟu ām ĕṉṟu cŏllum av allal ĕllām *
vātil vĕṉṟāṉ * ĕm irāmānucaṉ mĕym matikkaṭale (58)

Ragam

Ārabi / ஆரபி

Thalam

Jambai / ஜம்பை

Bhavam

Self

Simple Translation

3950. There are Vedānta scholars who say, “This is the meaning of the Vedās. The highest is Brahmān and all the souls will leave the body and join the ancient PaRaman. ” Rāmānujā, the ocean of truth argued with them and defeated them in disputation about Vedānta.

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion (Aṉvayam). Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
பேதையர் அவிவேகிகள்; இது நாங்கள் சொல்லுகிற இதுதான்; வேத பொருள் என்று வேதத்தின் அர்த்தம் என்று; உன்னி நிரூபித்துக் கொண்டு; பிரமம் நன்று எல்லாவற்றிலும் பிரம்மம் உள்ளது; என்று ஓதி என்று ஓதி; மற்று எல்லா உயிரும் அஃது எல்லா உயிர்களும் பிரம்மமே; என்று உயிர்கள் என்றும் ஜீவாத்மாக்கள்; மெய்விட்டு தேகத்தை விட்ட பின்பு; ஆதிப் பரனோடு எம்பெருமானோடு; ஒன்று ஆம் என்று ஐக்யமடைகின்றன என்றும்; சொல்லும் சொல்லும்; அவ் அல்லல் எல்லாம் அந்த வாதங்களை எல்லாம்; மெய் மதிக் கடலே தத்வ ஞாநக் கடலாகிய; எம் இராமாநுசன் எம் இராமாநுசன்; வாதில் வாதத்தில் நிரூபித்து; வென்றான் வெற்றி பெற்றார்
pĕdhaiyar ūnlike those who did not accept vĕdhas as authority, the illiterates who accepted vĕdhas as the authority, but misinterpreted the meaning of vĕdhas; vĕdhap porul̤ idhu enṛu unni who (try to) prove that such is the meaning of vĕdhas,; ŏdhi and establish that; piramam brahmam; nanṛenṛu is a distinguished one,; māṝellā uyirum the group of jeevāthmās (and non-sentient) which are different (from such brahmam); ahdhu enṛu ­ are same as brahmam itself,; uyirgal̤ the group of jeevāthmās; mey vittu when leaving from the body (which gives wrong reflections like thinking that there are many moons when looking in mirrors); onṛam would realiśe that there is only one (in existence), (they say so),; ādhi one who is the cause of everything; paranŏdu that is the sarvasmāthparan, emperumān, (that is, distinguishable from and greater than everything),; enṛu sollum them saying such things,; avalllal ellām all such sayings (were won by); irāmānusan emperumānār,; mey madhik kadal he who is the ocean of knowledge of thathvam,; em and who is our lord,; vādhil venṛān for the upliftment of the world, he debated with them and won them.; ŏh! how kind of him to do this! is the interpretation.; allal making noise; their sound of words;