Your browser does not support the audio element.
audio
1788 தவளவிளம்பிறைதுள்ளுமுந்நீர்த்
தண்மலர்த்தென்றலோடன்றிலொன்றித்
துவள * என்னெஞ்சகம் சோரஈரும்
சூழ்பனிநாள்துயிலாதிருப்பேன் *
இவளும்ஓர்பெண்கொடியென்றிரங்கார்
என்னலமைந்துமுன்கொண்டுபோன *
குவளைமலர்நிறவண்ணர்மன்னு
குறுங்குடிக்கேஎன்னைஉய்த்திடுமின். (2)
1789 தாதவிழ்மல்லிகைபுல்லிவந்த
தண்மதியினிளவாடைஇன்னே *
ஊதைதிரிதந்துழறியுண்ண
ஓரிரவும்உறங்கேன் * உறங்கும்
பேதையர்பேதைமையால்இருந்து
பேசிலும்பேசுகபெய்வளையார் *
கோதைநறுமலர்மங்கைமார்வன்
குறுங்குடிக்கேஎன்னைஉய்த்திடுமின்.
1790 காலையும்மாலையொத்துண்டு
கங்குல்நாழிகைஊழியில்நீண்டுலாவும் *
போல்வதோர் தன்மைபுகுந்துநிற்கும்
பொங்கழலேயொக்கும்வாடைசொல்லில் *
மாலவன்மாமணிவண்ணன்
மாயம் மற்றுமுளஅவை வந்திடாமுன் *
கோலமயில்பயிலும்புறவின்
1791 கருமணிபூண்டுவெண்ணாகணைந்து
காரிமிலேற்றணர்தாழ்ந்துலாவும் *
ஒருமணியோசைஎன்னுள்ளந்தள்ள
ஓரிரவும்உறங்காதிருப்பேன் *
பெருமணிவானவருச்சிவைத்த
பேரருளாளன்பெருமை பேசி *
குருமணிநீர்கொழிக்கும்புறவின்
1792 திண்திமிலேற்றின்மணியும்ஆயன்
தீங்குழலோசையும், தென்றலோடு *
கொண்டதோர்மாலையும் அந்தியீன்ற
கோலவிளம்பிறையோடு கூடி *
பண்டையவல்லஇவைநமக்குப்
பாவியேனாவியைவாட்டம்செய்யும் *
கொண்டல்மணிநிறவண்ணர்மன்னு
1793 எல்லியும்நன்பகலும்இருந்தே
ஏசிலும்ஏசுகஏந்திழையார் *
நல்லரவர்திறம்நாமறியோம்
நாண்மடமச்சம்நமக்கிங்கில்லை *
வல்லனசொல்லிமகிழ்வரேனும்
மாமணிவண்ணரைநாம்மறவோம் *
கொல்லைவளரிளமுல்லைபுல்கு
1794 செங்கண்நெடியகரியமேனித்
தேவரொருவர்இங்கேபுகுந்து * என்
அங்கம்மெலியவளைகழல
ஆதுகொலோ? என்றுசொன்னபின்னை *
ஐங்கணிவில்லிதன்னாண்மை
என்னோடாடுமதனைஅறியமாட்டேன் *
கொங்கலர்தண்பணைசூழ்புறவில்
1795 கேவலமன்றுகடலினோசை
கேண்மின்கள்ஆயன்கைஆம்பல்வந்து * என்
ஆவியளவும் அணைந்துநிற்கும்
அன்றியும்ஐந்துகணைதெரிந்திட்டு *
ஏவலம்காட்டிஇவனொருவன்
இப்படியேபுகுந்துஎய்திடாமுன் *
கோவலர்கூத்தன்குறிப்பறிந்து
1796 சோத்தெனநின்றுதொழஇரங்கான்
தொன்னலங்கொண்டெனக்குஇன்றுகாறும் *
போர்ப்பதோர்பொற்படம்தந்துபோனான்
போயினவூரறியேன் * என்கொங்கை
மூத்திடுகின்றன
மற்றவன்தன்மொய்யகலமணையாதுவாளா *
கூத்தனிமையவர்கோன்விரும்பும்
1797 செற்றவன்தென்னிலங்கைமலங்கத்
தேவர்பிரான், திருமாமகளைப்
பெற்றும் * என்நெஞ்சகம்கோயில்கொண்ட
பேரருளாளன், பெருமைபேசக்
கற்றவன் * காமருசீர்க்கலியன்
கண்ணகத்தும்மனத்தும்அகலாக்
கொற்றவன் * முற்றுலகாளிநின்ற