He Who is in My Mind is the Lord of Kuṟuṅkuṭi
என் மனத்தில் இருப்பவன் குறுங்குடிப் பெருமான்
1797 செற்றவன்தென்னிலங்கைமலங்கத்
தேவர்பிரான், திருமாமகளைப்
பெற்றும் * என்நெஞ்சகம்கோயில்கொண்ட
பேரருளாளன், பெருமைபேசக்
கற்றவன் * காமருசீர்க்கலியன்
கண்ணகத்தும்மனத்தும்அகலாக்
கொற்றவன் * முற்றுலகாளிநின்ற
குறுங்குடிக்கேஎன்னைஉய்த்திடுமின். (2)