Unite Me with the Lord in Tirukkuṟuṅkuṭi
என்னைத் திருக்குறுங்குடியில் சேர்த்துவிடுங்கள்
1788 தவளவிளம்பிறைதுள்ளுமுந்நீர்த்
தண்மலர்த்தென்றலோடன்றிலொன்றித்
துவள * என்னெஞ்சகம் சோரஈரும்
சூழ்பனிநாள்துயிலாதிருப்பேன் *
இவளும்ஓர்பெண்கொடியென்றிரங்கார்
என்னலமைந்துமுன்கொண்டுபோன *
குவளைமலர்நிறவண்ணர்மன்னு
குறுங்குடிக்கேஎன்னைஉய்த்திடுமின். (2)