There is No Sleep: Send Me to Kuṟuṅkuṭi
உறக்கமே இல்லை: என்னைக் குறுங்குடிக்கு அனுப்புங்கள்
1791 கருமணிபூண்டுவெண்ணாகணைந்து
காரிமிலேற்றணர்தாழ்ந்துலாவும் *
ஒருமணியோசைஎன்னுள்ளந்தள்ள
ஓரிரவும்உறங்காதிருப்பேன் *
பெருமணிவானவருச்சிவைத்த
பேரருளாளன்பெருமை பேசி *
குருமணிநீர்கொழிக்கும்புறவின்
குறுங்குடிக்கேஎன்னைஉய்த்திடுமின்.