Chapter 10

Thirukkottiyur - (எங்கள் எம்)

திருக்கோட்டியூர்
Thirukkottiyur - (எங்கள் எம்)
Thirukkoshtiyur, known as the ornament of the Pandya Nadu, is also referred to as Goshteepuram. It is said that the Devas held a council in this village to plan the destruction of Hiranyakashipu, who tormented the three worlds. This place is impenetrable by Asuras. The son of Koorathāzhvār, Parasara Bhattar, stayed here for many days. This is also where + Read more
பாண்டிய நாட்டிற்குத் திலகமாய் விளங்குவது திருக்கோட்டியூர். இதற்குக் கோஷ்டீபுரம் என்றும் பெயர். மூவுலகையும் துன்புறுத்திய இரணியனை அழிப்பதற்குத் தேவர்கள் இவ்வூரில் ஆலோசனை நடத்தினார்களாம். அசுரர்கள் உள்ளே புகமுடியாத இடம் இது. ஆழ்வானின் குமாரர் பட்டர் பலநாட்கள் இங்கு எழுந்தருளியிருந்தார். + Read more
Verses: 1838 to 1847
Grammar: Āsiriyaththuṟai / ஆசிரியத்துறை
Recital benefits: Will go to Vaikuṇṭam and remain there always
Tamil
Simplified
English
Verse info
Synonyms
Translation

PT 9.10.1

1838 எங்கள்எம்மிறைஎம்பிரான் இமையோர்க்குநாயகன் * ஏத்தடியவர்
தங்கள்தம்மனத்துப்பிரியாதுஅருள்புரிவான் *
பொங்குதண்ணருவிபுதம்செய்யப் பொன்களேசிதறும், இலங்கொளி *
செங்கமலம்மலரும் திருக்கோட்டியூரானே. (2)
1838 ## எங்கள் எம் இறை எம் பிரான் * இமையோர்க்கு நாயகன் * ஏத்து அடியவர்
தங்கள் தம் மனத்துப் * பிரியாது அருள் புரிவான் **
பொங்கு தண் அருவி புதம் செய்யப் * பொன்களே சிதற இலங்கு ஒளி *
செங்கமலம் மலரும் * திருக்கோட்டியூரானே 1
1838 ## ĕṅkal̤ ĕm iṟai ĕm pirāṉ * imaiyorkku nāyakaṉ * ettu aṭiyavar-
taṅkal̤ tam maṉattup * piriyātu arul̤ purivāṉ- **
pŏṅku taṇ aruvi putam cĕyyap * pŏṉkal̤e citaṟa ilaṅku ŏl̤i *
cĕṅkamalam malarum- * tirukkoṭṭiyūrāṉe-1

Ragam

Yamunākalyāṇi / யமுனாகல்யாணி

Thalam

Aḍa / அட

Bhavam

Self

Divya Desam

Simple Translation

1838. Our dear god, our king, chief of the gods in the sky, who stays in the minds of the devotees who praise him and gives them his grace, stays in Thirukkottiyur where a cool, tall waterfall makes a cloud of golden drops and lovely lotuses bloom and shine.

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion (Aṉvayam). Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
எங்கள் எம் இறை எங்களுக்கே இறைவன்; எம் பிரான் எம் பெருமான்; இமையோர்க்கு நித்யஸூரிகளுக்கு; நாயகன் தலைவனும்; ஏத்து துதிக்கின்ற; அடியவர் பக்தர்களின்; தங்கள் தம் மனத்து மனதிலிருந்து; பிரியாது பிரியாமல்; அருள்புரிவான் அருள்புரிபவனும்; பொங்கு தண் பொங்கி ஓடும்; அருவி அருவி போல்; புதம் செய்ய மேகம்; பொன்களே பொன்னை; சிதற சிந்துவதால்; இலங்கு ஒளி மிக்க ஒளியையுடையதாய்; செங்கமலம் சிவந்த தாமரைப்பூக்கள்; மலரும் மலரும்; திருக்கோட்டி திருக்கோட்டி; ஊரானே! ஊரில் உள்ளவனே!

PT 9.10.2

1839 எவ்வநோய்தவிர்ப்பான்எமக்கிறைஇன்னகைத்துவர்வாய் * நிலமகள்
செவ்விதோயவல்லான் திருமாமகட்கினியான் *
மௌவல்மாலைவண்டாடும் மல்லிகைமாலையோடுமணந்து * மாருதம்
தெய்வம்நாறவரும் திருக்கோட்டியூரானே.
1839 எவ்வ நோய் தவிர்ப்பான் * எமக்கு இறை இன் நகைத் துவர் வாய் * நில மகள்
செவ்வி தோய வல்லான் * திரு மா மகட்கு இனியான் **
மௌவல் மாலை வண்டு ஆடும் * மல்லிகை மாலையோடும் அணைந்து * மாருதம்
தெய்வம் நாற வரும் * திருக்கோட்டியூரானே 2
1839 ĕvva noy tavirppāṉ * ĕmakku iṟai iṉ nakait tuvar vāy * nila-makal̤
cĕvvi toya vallāṉ * tiru mā makaṭku iṉiyāṉ- **
mauval mālai vaṇṭu āṭum * mallikai mālaiyoṭum aṇaintu * mārutam
tĕyvam nāṟa varum- * tirukkoṭṭiyūrāṉe-2

Ragam

Yamunākalyāṇi / யமுனாகல்யாணி

Thalam

Aḍa / அட

Bhavam

Self

Divya Desam

Simple Translation

1839. He, our king is the sweet lord of beautiful Lakshmi and the beloved of the sweetly-smiling earth goddess with a coral mouth whom he embraces. He cures all painful diseases of his devotees and he stays in divine Thirukkottiyur where the breeze blows and spreads the fragrance of jasmine and mauval flowers everywhere.

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion (Aṉvayam). Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
எமக்கு இறை எனக்கு இறைவன்; எவ்வம் துக்கம் தரும்; நோய் நோய்களை; தவிர்ப்பான் நீக்கியருள்வதற்காக; இன் நகை இனிய புன்சிரிப்பையும்; துவர் சிவந்த; வாய் அதரத்தையுமுடைய; நிலமகள் பூமிப் பிராட்டியின்; செவ்வி அழகை இனிமையை; தோய அநுபவிக்க; வல்லான் வல்லவனாய்; திரு மா மகட்கு திருமகளுக்கு; இனியான் இனியனான எம்பெருமான்; வண்டு ஆடும் வண்டுகள் ரீங்கரிக்கும்; மௌவல் காட்டு மல்லிகை; மாலை மாலையோடும்; மல்லிகை மாலையோடும் மல்லிகை பூக்களோடும்; அணைந்து கூடி அணைந்த; மாருதம் காற்று; தெய்வம் நாற தெய்வ மணம்; வரும் வீசிக்கொண்டிருக்கும்; திருக்கோட்டி திருக்கோட்டி; ஊரானே! ஊரில் உள்ளவனே!

PT 9.10.3

1840 வெள்ளியான்கரியான் மணிநிறவண்ணன் விண்ணவர்தமக்கிறை * எமக்கு
ஒள்ளியானுயர்ந்தான் உலகேழும்உண்டுமிழ்ந்தான் *
துள்ளுநீர்மொண்டுகொண்டு சாமரைக்கற்றைச்சந்தனமுந்திவந்தசை *
தெள்ளுநீர்ப்புறவில் திருக்கோட்டியூரானே.
1840 வெள்ளியான் கரியான் * மணி நிற வண்ணன் விண்ணவர் தமக்கு இறை * எமக்கு
ஒள்ளியான் உயர்ந்தான் * உலகு ஏழும் உண்டு உமிழ்ந்தான் **
துள்ளு நீர் மொண்டு கொண்டு * சாமரைக் கற்றைச் சந்தனம் உந்தி வந்து அசை *
தெள்ளு நீர்ப் புறவில் * திருக்கோட்டியூரானே 3
1840 vĕl̤l̤iyāṉ kariyāṉ * maṇi niṟa vaṇṇaṉ viṇṇavar-tamakku iṟai * ĕmakku
ŏl̤l̤iyāṉ uyarntāṉ * ulaku ezhum uṇṭu umizhntāṉ- **
tul̤l̤u nīr mŏṇṭu kŏṇṭu * cāmaraik kaṟṟaic cantaṉam unti vantu acai *
tĕl̤l̤u nīrp puṟavil- * tirukkoṭṭiyūrāṉe-3

Ragam

Yamunākalyāṇi / யமுனாகல்யாணி

Thalam

Aḍa / அட

Bhavam

Self

Divya Desam

Simple Translation

1840. The faultless sapphire-colored lord, the god of gods in the sky, the light of our lives, who swallowed all the seven worlds and spit them out stays in Thirukkottiyur surrounded with fields where the abundant wave-filled water of the rivers flows carrying sandalwood and samarai stones making the fields flourish.

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion (Aṉvayam). Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
வெள்ளியான் கிருதயுகத்தில் வெளுத்தவனும்; கரியான் கலியுகத்தில் கறுத்தவனும்; மணி த்வாபரயுகத்தில்; நிற வண்ணன் பசுமை நிறமுடையவனும்; விண்ணவர் நித்யஸூரிகளின்; தமக்கு இறை தலைவன்; உயர்ந்தான் உயர்ந்தவன்; எமக்கு எனக்கு; ஒள்ளியான் காட்டியவன்; உலகு பிரளயத்தில்; ஏழும் ஏழு உலகங்களையும்; உண்டு உண்டு காத்து; உமிழ்ந்தான் பின் ஸ்ருஷ்டித்தான்; துள்ளு நீர் துள்ளி ஓடும் நீர்; சாமரை சாமர; கற்றை திரள்களையும்; சந்தனம் சந்தனமரங்களையும்; மொண்டு இழுத்து; கொண்டு கொண்டு வந்து; உந்தி வந்து தள்ளிக் கொண்டு வந்து; அசை பிரவஹிக்கும்; தெள்ளு நீர் தெளிந்த நீரையுடைய; புறவில் சுற்றுப்பக்கங்களோடு கூடின; திருக்கோட்டி திருக்கோட்டி; ஊரானே! ஊரில் உள்ளவனே!

PT 9.10.4

1841 ஏறுமேறிஇலங்குமொண்மழுப்பற்றும் ஈசற்குஇசைந்து * உடம்பிலோர்
கூறுதான்கொடுத்தான் குலமாமகட்கினியான் *
நாறுசண்பகமல்லிகைமலர்புல்கி இன்னிளவண்டு * நல்நறும்
தேறல்வாய்மடுக்கும் திருக்கோட்டியூரானே.
1841 ஏறும் ஏறி இலங்கும் ஒண் மழுப் பற்றும் * ஈசற்கு இசைந்து * உடம்பில் ஓர்
கூறு தான் கொடுத்தான் * குல மா மகட்கு இனியான் **
நாறு செண்பகம் மல்லிகை மலர் புல்கி * இன் இள வண்டு * நல் நறும்
தேறல் வாய்மடுக்கும் * திருக்கோட்டியூரானே 4
1841 eṟum eṟi ilaṅkum ŏṇ mazhup paṟṟum * īcaṟku icaintu * uṭampil or
kūṟu-tāṉ kŏṭuttāṉ * kula mā makaṭku iṉiyāṉ- **
nāṟu cĕṇpakam mallikai malar pulki * iṉ il̤a vaṇṭu * nal naṟum
teṟal vāymaṭukkum- * tirukkoṭṭiyūrāṉe-4

Ragam

Yamunākalyāṇi / யமுனாகல்யாணி

Thalam

Aḍa / அட

Bhavam

Self

Divya Desam

Simple Translation

1841. He, the beloved of Lakshmi, the goddess who nurtures good families, gave a part of himself to Shivā who carries a sharp shining axe and rides a bull, stays in Thirukkottiyur where lovely young bees embrace the fragrant jasmine and shanbaga flowers and drink good sweet-smelling honey.

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion (Aṉvayam). Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
ஏறும் ரிஷபத்தை வாஹனமாக உடைய; ஏறி ரிஷபத்தில் ஏறி; இலங்கும் ஒளியுள்ள; ஒண் மழு அழகிய மழுவை; பற்றும கையிலேந்திய; ஈசற்கு சிவனுக்கு; இசைந்து தன்னுடைய; உடம்பில் ஓர் உடலின் ஒரு; கூறு தான் பாகத்தை; கொடுத்தான் கொடுத்தவனும்; குல மா மகட்கு திருமகளின்; இனியான் நாயகனுமான பெருமான்; இன் இனிய; இள வண்டு இளம் வண்டுகள்; நாறு மிக்க மணம் கமழும்; செண்பகம் செண்பகம்; மல்லிகை மலர் மல்லிகை மலர்; புல்கி ஆகியவற்றில் தழுவி; நல் நறும் நல்ல மணமுள்ள; தேறல் தேனில்; வாய் வாய்வைத்து; மடுக்கும் பருகுமிடமான; திருக்கோட்டி திருக்கோட்டி; ஊரானே! ஊரில் உள்ளவனே!

PT 9.10.5

1842 வங்கமாகடல்வண்ணன் மாமணிவண்ணன்விண்ணவர்கோன் * மதுமலர்த்
தொங்கல்நீண்முடியான் நெடியான்படிகடந்தான் *
மங்குல்தோய்மணிமாடவெண்கொடி மாகமீதுயர்ந்தேறி * வானுயர்
திங்கள்தானணவும் திருக்கோட்டியூரானே.
1842 வங்க மா கடல் வண்ணன் * மா மணி வண்ணன் விண்ணவர் கோன் * மதுமலர்த்
தொங்கல் நீள் முடியான் * நெடியான் படி கடந்தான் **
மங்குல் தோய் மணி மாட வெண் கொடி * மாகம்மீது உயர்ந்து ஏறி * வான் உயர்
திங்கள் தான் அணவும் * திருக்கோட்டியூரானே 5
1842 vaṅka mā kaṭal vaṇṇaṉ * mā maṇi vaṇṇaṉ viṇṇavar-koṉ * matumalart
tŏṅkal nīl̤ muṭiyāṉ * nĕṭiyāṉ paṭi kaṭantāṉ- **
maṅkul toy maṇi māṭa vĕṇ kŏṭi * mākammītu uyarntu eṟi * vāṉ uyar
tiṅkal̤-tāṉ aṇavum- * tirukkoṭṭiyūrāṉe-5

Ragam

Yamunākalyāṇi / யமுனாகல்யாணி

Thalam

Aḍa / அட

Bhavam

Self

Divya Desam

Simple Translation

1842. The ocean-colored Nedumāl, the king of the gods in the sky, beautiful as a precious sapphire, whose crown is adorned with long flower garlands dripping with honey, who measured the world at Mahabali’s sacrifice- stays in Thirukkottiyur where the moon floats in the sky above the white flags flying above the beautiful jewel-studded palaces touching the clouds.

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion (Aṉvayam). Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
வங்க மா கப்பல்கள் நிறைந்த பெரிய; கடல் கடல் போன்ற; வண்ணன் நிறமுடையவனும்; மா மணி நீலமணி போன்ற; வண்ணன் வடிவழகையுடையவனும்; விண்ணவர் நித்யஸூரிகளுக்கு; கோன் தலைவனும்; மது மலர் தேனோடு கூடின பூ; தொங்கல் மாலையையுடையவனும்; நீள் பெரிய; முடியான் கிரீடமுடையவனும்; நெடியான் அனைத்தையும் அறிந்தவனும்; படி பூமியை; கடந்தான் அளந்தவனுமான பெருமான்; மங்குல் மேகமண்டலத்தை; தோய் அளாவியிருக்கும்; மணி மாட மணிமாடங்களிலிருக்கும்; வெண் கொடி வெள்ளைக் கொடிகள்; மாகம் மீது ஆகாயத்தின் மேல்; உயர்ந்து ஏறி வியாபித்து; வான் உயர் மிக உயரத்திலுள்ள; திங்கள் தான் சந்திரனை; அணவும் தழுவும்; திருக்கோட்டி திருக்கோட்டி; ஊரானே! ஊரில் உள்ளவனே!

PT 9.10.6

1843 காவலனிலங்கைக்கிறைகலங்கச் சரம்செலவுய்த்து * மற்றவன்
ஏவலம்தவிர்த்தான் என்னையாளுடையம்பிரான் *
நாவலம்புவிமன்னர்வந்துவணங்க மாலுறைகின்றதுஇங்கென *
தேவர்வந்திறைஞ்சும் திருக்கோட்டியூரானே.
1843 காவலன் இலங்கைக்கு இறை கலங்கச் * சரம் செல உய்த்து * மற்று அவன்
ஏவலம் தவிர்த்தான் * என்னை ஆளுடை எம் பிரான் **
நா வலம் புவி மன்னர் வந்து வணங்க * மால் உறைகின்றது இங்கு என *
தேவர் வந்து இறைஞ்சும் * திருக்கோட்டியூரானே 6
1843 kāvalaṉ ilaṅkaikku iṟai kalaṅkac * caram cĕla uyttu * maṟṟu avaṉ
evalam tavirttāṉ * ĕṉṉai āl̤uṭai ĕm pirāṉ- **
nā valam puvi maṉṉar vantu vaṇaṅka * māl uṟaikiṉṟatu iṅku ĕṉa *
tevar vantu iṟaiñcum- * tirukkoṭṭiyūrāṉe-6

Ragam

Yamunākalyāṇi / யமுனாகல்யாணி

Thalam

Aḍa / அட

Bhavam

Self

Divya Desam

Simple Translation

1843. The dear god, my ruler, who shot his arrows at the king of Lankā, destroyed his valor and defeated him stays in Thirukkottiyur where all the rulers of the world and the gods come to worship him knowing that it is there that he stays.

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion (Aṉvayam). Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
இலங்கைக்கு இலங்கையை; காவலன் காக்கும்; இறை அதிபதி இராவணன்; கலங்க கலங்கும்படியும்; மற்று சரம் மேலும் அம்புகளை; செல தொடுக்கும்; உய்த்து அவன் மிடுக்கையும்; அவன் ஏ வலம் சாம்ர்த்தியத்தையும்; தவிர்த்தான் அழித்த இராமபிரான்; என்னை என்னை; ஆளுடை ஆளும் அடிமைகொண்ட; எம் பிரான் பிரான்; நா வலம் புவி நாவலத் தீவிலுள்ள [ஜம்பூ]; மன்னர் மன்னர்கள்; இங்கு மால் என எம்பெருமான் இங்கு; உறைகின்றது உள்ளான் என்று அறிந்து; வந்து வணங்க வந்து வணங்க; தேவர் வந்து தேவர்களும் வந்து; இறைஞ்சும் வணங்கும் இடமான; திருக்கோட்டி திருக்கோட்டி; ஊரானே! ஊரில் உள்ளவனே!

PT 9.10.7

1844 கன்றுகொண்டுவிளங்கனியெறிந்து ஆநிரைக்கழிவென்று * மாமழை
நின்றுகாத்துகந்தான் நிலமாமகட்கினியான் *
குன்றின்முல்லையின்வாசமும் குளிர்மல்லிகைமணமும்அளைந்து * இளந்
தென்றல்வந்துலவும் திருக்கோட்டியூரானே.
1844 கன்று கொண்டு விளங்கனி எறிந்து * ஆ நிரைக்கு அழிவு என்று * மா மழை
நின்று காத்து உகந்தான் * நில மா மகட்கு இனியான் **
குன்றின் முல்லையின் வாசமும் * குளிர் மல்லிகை மணமும் அளைந்து * இளம்
தென்றல் வந்து உலவும் * திருக்கோட்டியூரானே 7
1844 kaṉṟu kŏṇṭu vil̤aṅkaṉi ĕṟintu * ā-niraikku azhivu ĕṉṟu * mā mazhai
niṉṟu kāttu ukantāṉ * nila mā makaṭku iṉiyāṉ- **
kuṉṟiṉ mullaiyiṉ vācamum * kul̤ir mallikai maṇamum al̤aintu * il̤am
tĕṉṟal vantu ulavum- * tirukkoṭṭiyūrāṉe-7

Ragam

Yamunākalyāṇi / யமுனாகல்யாணி

Thalam

Aḍa / அட

Bhavam

Self

Divya Desam

Simple Translation

1844. Our god, the beloved of the earth goddess, threw a vilam fruit at a calf and killed the two Asurans when they came as a tree and a calf and easily carried Govardhanā mountain as an umbrella to protect the cows and the cowherds from a terrible storm. He stays in Thirukkottiyur where the fresh breeze mixes with the fragrance of cool jasmine flowers and mullai flowers as it comes from the hills.

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion (Aṉvayam). Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
கன்று கொண்டு கன்றாகவந்த அஸுரனை; விளங்கனி விளங்கனியாக வந்த அஸுரன்; எறிந்து மீது எறிந்து இருவரையும் முடித்தவனும்; ஆ நிரைக்கு பசுக்கூட்டத்திற்கு; அழிவு என்று அழிவு வந்ததே என்று; மா மழை பெரும் மழையை மலையை; நின்று காத்து எடுத்து நிலை நின்று தடுத்து; உகந்தான் மகிழ்ந்த எம்பெருமான்; நில மா மகட்கு பூமாதேவிக்கு; இனியான் இனியவன்; குன்றின் மலையின்; முல்லையின் முல்லைப்பூவின்; வாசமும் நறுமணமும்; குளிர் குளிர்ந்த; மல்லிகை மல்லிகையின்; மணமும் மணமும்; அளைந்து தழுவி வரும் குளிர்ந்த; இளம்தென்றல் இளம்தென்றல் காற்று; வந்து உலவும் வந்து உலவும்; திருக்கோட்டி திருக்கோட்டி; ஊரானே! ஊரில் உள்ளவனே!

PT 9.10.8

1845 பூங்குருந்தொசித்து ஆனைகாய்ந்துஅரிமாச்செகுத்து * அடியேனையாளுகந்து
ஈங்கென்னுள்புகுந்தான் இமையோர்கள்தம்பெருமான் *
தூங்குதண்பலவின்கனி தொகுவாழையின்கனியொடு மாங்கனி *
தேங்குதண்புனல்சூழ் திருக்கோட்டியூரானே.
1845 பூங் குருந்து ஒசித்து ஆனை காய்ந்து * அரி மாச் செகுத்து * அடியேனை ஆள் உகந்து
ஈங்கு என்னுள் புகுந்தான் * இமையோர்கள் தம் பெருமான் **
தூங்கு தண் பலவின் கனி * தொகு வாழையின் கனியொடு மாங்கனி *
தேங்கு தண் புனல் சூழ் * திருக்கோட்டியூரானே 8
1845 pūṅ kuruntu ŏcittu āṉai kāyntu * ari māc cĕkuttu * aṭiyeṉai āl̤ ukantu
īṅku ĕṉṉul̤ pukuntāṉ * imaiyorkal̤-tam pĕrumāṉ- **
tūṅku taṇ palaviṉ kaṉi * tŏku vāzhaiyiṉ kaṉiyŏṭu māṅkaṉi *
teṅku taṇ puṉal cūzh- * tirukkoṭṭiyūrāṉe-8

Ragam

Yamunākalyāṇi / யமுனாகல்யாணி

Thalam

Aḍa / அட

Bhavam

Self

Divya Desam

Simple Translation

1845. The god of the gods who broke the kurundu trees when the Asurans came in the form of those trees, killed the elephant Kuvalayābeedam and destroyed the Asuran Kesi when he came as a horse made me his devotee and slave and entered my heart. He stays in Thirukkottiyur surrounded with cool water and groves where sweet jackfruits rest on the ground, bunches of bananas ripen on their branches and mangoes grow on their trees.

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion (Aṉvayam). Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
பூம் பூத்திருந்த; குருந்து குருந்தை மரத்தை; ஒசித்து முறித்தவனும்; ஆனை குவலாயாபீட யானையை; காய்ந்து அழித்தவனும்; அரி மா கேசி என்ற குதிரையை; செகுத்து கொன்றவனும்; அடியேனை அடியேனை; ஆள் ஆட்கொண்டவனும்; உகந்து ஈங்கு உகந்து இங்கு வந்து; இமையோர்கள் நித்யஸூரிகளின்; தம் தலைவனான; பெருமான் பெருமான்; என்னுள் என்னுள்; புகுந்தான் புகுந்தான்; தூங்கு பழுத்துத் தொங்கும்; தண் அழகிய; பலவின் கனி பலாப் பழங்களும்; தொகு வாழையின் திரண்ட வாழை; கனியொடு பழங்களோடு; மாங்கனி மாம்பழங்களும்; தேங்கு தேங்காய்களும்; தண் குளிர்ந்த; புனல் சூழ் ஆறுகளால் சூழ்ந்த; திருக்கோட்டி திருக்கோட்டி; ஊரானே! ஊரில் உள்ளவனே!

PT 9.10.9

1846 கோவையின்தமிழ்பாடுவார்குடமாடுவார், தடமாமலர்மிசை *
மேவுநான்முகனில் விளங்குபுரிநூலர் *
மேவுநான்மறைவாணர் ஐவகைவேள்விஆறங்கம் வல்லவர் தொழும் *
தேவதேவபிரான் திருக்கோட்டியூரானே.
1846 கோவை இன் தமிழ் பாடுவார் * குடம் ஆடுவார் தட மா மலர்மிசை *
மேவும் நான்முகனில் * விளங்கு புரி நூலர் **
மேவும் நான்மறை வாணர் * ஐவகை வேள்வி ஆறு அங்கம் வல்லவர் தொழும் *
தேவ தேவபிரான் * திருக்கோட்டியூரானே 9
1846 kovai iṉ tamizh pāṭuvār * kuṭam āṭuvār taṭa mā malarmicai *
mevum nāṉmukaṉil * vil̤aṅku puri nūlar **
mevum nāṉmaṟai vāṇar * aivakai vel̤vi āṟu aṅkam vallavar tŏzhum *
teva-tevapirāṉ- * tirukkoṭṭiyūrāṉe-9

Ragam

Yamunākalyāṇi / யமுனாகல்யாணி

Thalam

Aḍa / அட

Bhavam

Self

Divya Desam

Simple Translation

1846. The Vediyars in Thirukkottiyur who wear shining threads and are as divine as Nānmuhan seated on a beautiful lotus sing Tamil pāsurams and dance the kudakkuthu dance. Scholars of the four Vedās and six Upanishads and performers of the five kinds of fire sacrifice, they all worship the god of gods in Thirukkottiyur.

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion (Aṉvayam). Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
கோவை இன் ஒழுங்கான இனிய; தமிழ் இந்த பெரிய திருமொழியை; பாடுவார் பாடுபவர்களும்; குடம் குடக்கூத்து; ஆடுவார் ஆடுபவர்களும்; தட மா பெரிய; மலர் மிசை தாமரையில்; மேவும் பிறந்த; நான்முகனில் பிரமனைக் காட்டிலும்; விளங்கு ஒளியுள்ள; புரி நூலர் மேவும் பூணூல் உள்ள; நான்மறை நான்கு வேதங்களையும்; மேவும் விரும்பி; வாணர் கற்றவர்களும்; ஐவகை ஐந்து வகை; வேள்வி யாகங்களிலும்; ஆறு வேதங்களின் ஆறு; அங்கம் அங்கங்களிலும்; வல்லவர் வல்லவர்களானவர்கள்; தொழும் வணங்கும்; தேவ தேவபிரான் தேவாதி தேவன்; திருக்கோட்டி திருக்கோட்டி; ஊரானே! ஊரில் உள்ளவனே!

PT 9.10.10

1847 ஆலுமாவலவன்கலிகன்றி மங்கையர்தலைவன் * அணிபொழில்
சேல்கள்பாய்கழனித் திருக்கோட்டியூரானை *
நீலமாமுகில்வண்ணனை நெடுமாலைஇன்தமிழால்நினைந்த * இந்
நாலுமாறும்வல்லார்க்கு இடமாகும் வானுலகே. (2)
1847 ## ஆலும் மா வலவன் கலிகன்றி * மங்கையர் தலைவன் * அணி பொழில்
சேல்கள் பாய் கழனித் * திருக்கோட்டியூரானை **
நீல மா முகில் வண்ணனை * நெடுமாலை இன் தமிழால் நினைந்த * இந்
நாலும் ஆறும் வல்லார்க்கு * இடம் ஆகும் வான் உலகே 10
1847 ## ālum mā valavaṉ kalikaṉṟi * maṅkaiyar talaivaṉ * aṇi pŏzhil
celkal̤ pāy kazhaṉit * tirukkoṭṭiyūrāṉai **
nīla mā mukil vaṇṇaṉai * nĕṭumālai iṉ tamizhāl niṉainta * in
nālum āṟum vallārkku * iṭam ākum-vāṉ ulake-10

Ragam

Yamunākalyāṇi / யமுனாகல்யாணி

Thalam

Aḍa / அட

Bhavam

Self

Divya Desam

Simple Translation

1847. The poet Kaliyan, the mighty chief of Thirumangai who rides a horse, composed a garland of sweet Tamil pāsurams on the dark cloud-colored god of Thirukkottiyur surrounded with beautiful groves and fields where fish frolic. If devotees learn and recite these ten sweet Tamil songs and praise Nedumāl, they will go to the spiritual world.

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion (Aṉvayam). Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
ஆலும் மா ஆடல் மா குதிரையை; வலவன் நடத்துவதில் வல்லவரான; மங்கையர் திருமங்கை நாட்டுக்கு; தலைவன் தலைவனான; கலிகன்றி திருமங்கை ஆழ்வார்; அணி அழகிய; பொழில் சோலைகளையும்; சேல்கள் மீன்கள்; பாய் துள்ளிவிளையாடும்; கழனி வயல்களையுமுடைய; நீல வண்ணனை நீல வண்ணனை; மா முகில் மேகத்தை ஒத்த நிறமுடைய; நெடுமாலை மோஹமுடையவனை; திருக்கோட்டி திருக்கோட்டி; ஊரானை ஊரானை குறித்து; இன் தமிழால் இனிய தமிழால்; நினைந்த நனைந்த; இந் நாலும் ஆறும் பத்துப் பாசுரங்களையும்; வல்லார்க்கு ஓதவல்லவர்களுக்கு; வான் உலகே பரமபதம்; இடமாகும் இருப்பிடமாகும்