Koshti Kshetram
Your browser does not support the audio element.
audio
13 வண்ணமாடங்கள்சூழ் திருக்கோட்டியூர் *
கண்ணன்கேசவன் நம்பிபிறந்தினில் *
எண்ணெய்சுண்ணம் எதிரெதிர்தூவிட *
கண்ணன்முற்றம் கலந்துஅளராயிற்றே. (2)
14 ஓடுவார்விழுவார் உகந்தாலிப்பார் *
நாடுவார்நம்பிரான் எங்குற்றானென்பார் *
பாடுவார்களும் பல்பறைகொட்டநின்று *
ஆடுவார்களும் ஆயிற்றுஆய்ப்பாடியே.
15 பேணிச்சீருடைப் பிள்ளைபிறந்தினில் *
காணத்தாம்புகுவார் புக்குப்போதுவார் *
ஆணொப்பார் இவன்நேரில்லைகாண் * திரு
வோணத்தான் உலகாளுமென்பார்களே.
16 உறியைமுற்றத்து உருட்டிநின்றாடுவார் *
நறுநெய்பால்தயிர் நன்றாகத்தூவுவார் *
செறிமென்கூந்தல் அவிழத்திளைத்து * எங்கும்
அறிவழிந்தனர் ஆய்ப்பாடியாயரே.
17 கொண்டதாளுறி கோலக்கொடுமழு *
தண்டினர் பறியோலைச்சயனத்தர் *
விண்டமுல்லை அரும்பன்னபல்லினர் *
அண்டர்மிண்டிப்புகுந்து நெய்யாடினார்.
18 கையும்காலும்நிமிர்த்துக் கடாரநீர் *
பையவாட்டிப் பசுஞ்சிறுமஞ்சளால் *
ஐயநாவழித்தாளுக்கு அங்காந்திட *
வையமேழும்கண்டாள் பிள்ளைவாயுளே.
19 வாயுள்வையகம்கண்ட மடநல்லார் *
ஆயர்புத்திரனல்லன் அருந்தெய்வம் *
பாயசீருடைப் பண்புடைப்பாலகன் *
மாயனென்று மகிழ்ந்தனர்மாதரே.
20 பத்துநாளும்கடந்த இரண்டாநாள் *
எத்திசையும் சயமரம்கோடித்து *
மத்தமாமலை தாங்கியமைந்தனை *
உத்தானம்செய்து உகந்தனர்ஆயரே.
21 கிடக்கில் தொட்டில்கிழியஉதைத்திடும் *
எடுத்துக்கொள்ளில் மருங்கையிறுத்திடும் *
ஒடுக்கிப்புல்கில் உதரத்தேபாய்ந்திடும் *
மிடுக்கிலாமையால் நான்மெலிந்தேன்நங்காய்.
22 செந்நெலார்வயல்சூழ் திருக்கோட்டியூர் *
மன்னுநாரணன் நம்பிபிறந்தமை *
மின்னுநூல் விட்டுசித்தன்விரித்த * இப்
பன்னுபாடல்வல்லார்க்கு இல்லைபாவமே. (2)
173 கொங்குங்குடந்தையும் கோட்டியூரும்பேரும் *
எங்கும்திரிந்து விளையாடும்என்மகன் *
சங்கம்பிடிக்கும் தடக்கைக்குத்தக்க * நல்
அங்கமுடையதோர்கோல்கொண்டுவா
அரக்குவழித்ததோர்கோல்கொண்டுவா.
359 மாலிருஞ்சோலையென்னும் மலையையுடையமலையை *
நாலிருமூர்த்திதன்னை நால்வேதக்கடலமுதை *
மேலிருங்கற்பகத்தை வேதாந்தவிழுப்பொருளின் *
மேலிருந்தவிளக்கை விட்டுசித்தன்விரித்தனனே. (2)
360 நாவகாரியம்சொல்லிலாதவர் நாள்தொறும்விருந்தோம்புவார் *
தேவகாரியம்செய்து வேதம்பயின்றுவாழ்திருக்கோட்டியூர் *
மூவர்காரியமும்திருத்தும் முதல்வனைச்சிந்தியாத * அப்
பாவகாரிகளைப்படைத்தவன் எங்ஙனம்படைத்தான்கொலோ. (2)
361 குற்றமின்றிக்குணம்பெருக்கிக் குருக்களுக்குஅனுகூலராய் *
செற்றமொன்றுமிலாத வண்கையினார்கள்வாழ்திருக்கோட்டியூர் *
துற்றியேழுலகுண்ட தூமணிவண்ணன்தன்னைத்தொழாதவர் *
பெற்றதாயர்வயிற்றினைப் பெருநோய்செய்வான்பிறந்தார்களே.
362 வண்ணநல்மணியும் மரதகமும்அழுத்தி நிழலெழும்
திண்ணைசூழ் * திருக்கோட்டியூர்த் திருமாலவன் திருநாமங்கள் *
எண்ணக்கண்டவிரல்களால் இறைப்பொழுதும்எண்ணகிலாதுபோய் *
உண்ணக்கண்டதம்ஊத்தைவாய்க்குக் கவளமுந்துகின்றார்களே.
363 உரகமெல்லணையான்கையில் உறைசங்கம்போல்மடவன்னங்கள் *
நிரைகணம்பரந்தேறும் செங்கமலவயல்திருக்கோட்டியூர் *
நரகநாசனைநாவிற்கொண்டழையாத மானிடசாதியர் *
பருகுநீரும்உடுக்குங்கூறையும் பாவம்செய்தனதாங்கொலோ.(2)
364 ஆமையின்முதுகத்திடைக்குதிகொண்டு தூமலர்சாடிப்போய் *
தீமைசெய்துஇளவாளைகள் விளையாடுநீர்த்திருக்கோட்டியூர் *
நேமிசேர்தடங்கையினானை நினைப்பிலாவலிநெஞ்சுடை *
பூமிபாரங்களுண்ணும்சோற்றினைவாங்கிப் புல்லைத்திணிமினே.
365 பூதமைந்தொடுவேள்வியைந்து புலன்களைந்துபொறிகளால் *
ஏதமொன்றுமிலாத வண்கையினார்கள்வாழ்திருக்கோட்டியூர் *
நாதனைநரசிங்கனை நவின்றேத்துவார்களுழக்கிய *
பாததூளிபடுதலால் இவ்வுலகம்பாக்கியம்செய்ததே.
366 குருந்தமொன்றொசித்தானொடும்சென்று கூடியாடிவிழாச்செய்து *
திருந்துநான்மறையோர் இராப்பகல்ஏத்திவாழ்திருக்கோட்டியூர் *
கருந்தடமுகில்வண்ணனைக் கடைக்கொண்டுகைதொழும்பத்தர்கள் *
இருந்தவூரிலிருக்கும்மானிடர் எத்தவங்கள்செய்தார்கொலோ.
367 நளிர்ந்தசீலன்நயாசலன் அபிமானதுங்கனை * நாள்தொறும்
தெளிந்தசெல்வனைச்சேவகங்கொண்ட செங்கண்மால்திருக்கோட்டியூர் *
குளிர்ந்துறைகின்றகோவிந்தன் குணம்பாடுவாருள்ளநாட்டினுள் *
விளைந்ததானியமும் இராக்கதர்மீதுகொள்ளகிலார்களே.
368 கொம்பினார்பொழில்வாய் குயிலினம்கோவிந்தன்குணம்பாடுசீர் *
செம்பொனார்மதிள்சூழ் செழுங்கழனியுடைத்திருக்கோட்டியூர் *
நம்பனைநரசிங்கனை நவின்றேத்துவார்களைக்கண்டக்கால் *
எம்பிரான்தனசின்னங்கள் இவரிவரென்றுஆசைகள்தீர்வனே.
369 காசின்வாய்க்கரம்விற்கிலும் கரவாதுமாற்றிலிசோறிட்டு *
தேசவார்த்தைபடைக்கும் வண்கையினார்கள்வாழ்திருக்கோட்டியூர் *
கேசவா! புருடோ த்தமா! கிளர்சோதியாய்! குறளா! என்று *
பேசுவார்அடியார்கள் எந்தம்மைவிற்கவும்பெறுவார்களே.
370 சீதநீர்புடைசூழ் செழுங்கழனியுடைத்திருக்கோட்டியூர் *
ஆதியானடியாரையும் அடிமையின்றித்திரிவாரையும் *
கோதில்பட்டர்பிரான் குளிர்புதுவைமன்விட்டுசித்தன்சொல் *
ஏதமின்றிஉரைப்பவர் இருடீகேசனுக்காளரே. (2)
1550 தாரேன்பிறர்க்கு உன்னருள்என்னிடைவைத்தாய் *
ஆரேன் அதுவேபருகிக்களிக்கின்றேன் *
காரேய்கடலேமலையே திருக்கோட்டி
யூரே * உகந்தாயை உகந்தடியேனே.
1838 எங்கள்எம்மிறைஎம்பிரான் இமையோர்க்குநாயகன் * ஏத்தடியவர்
தங்கள்தம்மனத்துப்பிரியாதுஅருள்புரிவான் *
பொங்குதண்ணருவிபுதம்செய்யப் பொன்களேசிதறும், இலங்கொளி *
செங்கமலம்மலரும் திருக்கோட்டியூரானே. (2)
1839 எவ்வநோய்தவிர்ப்பான்எமக்கிறைஇன்னகைத்துவர்வாய் * நிலமகள்
செவ்விதோயவல்லான் திருமாமகட்கினியான் *
மௌவல்மாலைவண்டாடும் மல்லிகைமாலையோடுமணந்து * மாருதம்
தெய்வம்நாறவரும் திருக்கோட்டியூரானே.
1840 வெள்ளியான்கரியான் மணிநிறவண்ணன் விண்ணவர்தமக்கிறை * எமக்கு
ஒள்ளியானுயர்ந்தான் உலகேழும்உண்டுமிழ்ந்தான் *
துள்ளுநீர்மொண்டுகொண்டு சாமரைக்கற்றைச்சந்தனமுந்திவந்தசை *
தெள்ளுநீர்ப்புறவில் திருக்கோட்டியூரானே.
1841 ஏறுமேறிஇலங்குமொண்மழுப்பற்றும் ஈசற்குஇசைந்து * உடம்பிலோர்
கூறுதான்கொடுத்தான் குலமாமகட்கினியான் *
நாறுசண்பகமல்லிகைமலர்புல்கி இன்னிளவண்டு * நல்நறும்
தேறல்வாய்மடுக்கும் திருக்கோட்டியூரானே.
1842 வங்கமாகடல்வண்ணன் மாமணிவண்ணன்விண்ணவர்கோன் * மதுமலர்த்
தொங்கல்நீண்முடியான் நெடியான்படிகடந்தான் *
மங்குல்தோய்மணிமாடவெண்கொடி மாகமீதுயர்ந்தேறி * வானுயர்
திங்கள்தானணவும் திருக்கோட்டியூரானே.
1843 காவலனிலங்கைக்கிறைகலங்கச் சரம்செலவுய்த்து * மற்றவன்
ஏவலம்தவிர்த்தான் என்னையாளுடையம்பிரான் *
நாவலம்புவிமன்னர்வந்துவணங்க மாலுறைகின்றதுஇங்கென *
தேவர்வந்திறைஞ்சும் திருக்கோட்டியூரானே.
1844 கன்றுகொண்டுவிளங்கனியெறிந்து ஆநிரைக்கழிவென்று * மாமழை
நின்றுகாத்துகந்தான் நிலமாமகட்கினியான் *
குன்றின்முல்லையின்வாசமும் குளிர்மல்லிகைமணமும்அளைந்து * இளந்
தென்றல்வந்துலவும் திருக்கோட்டியூரானே.
1845 பூங்குருந்தொசித்து ஆனைகாய்ந்துஅரிமாச்செகுத்து * அடியேனையாளுகந்து
ஈங்கென்னுள்புகுந்தான் இமையோர்கள்தம்பெருமான் *
தூங்குதண்பலவின்கனி தொகுவாழையின்கனியொடு மாங்கனி *
தேங்குதண்புனல்சூழ் திருக்கோட்டியூரானே.
1846 கோவையின்தமிழ்பாடுவார்குடமாடுவார், தடமாமலர்மிசை *
மேவுநான்முகனில் விளங்குபுரிநூலர் *
மேவுநான்மறைவாணர் ஐவகைவேள்விஆறங்கம் வல்லவர் தொழும் *
தேவதேவபிரான் திருக்கோட்டியூரானே.
1847 ஆலுமாவலவன்கலிகன்றி மங்கையர்தலைவன் * அணிபொழில்
சேல்கள்பாய்கழனித் திருக்கோட்டியூரானை *
நீலமாமுகில்வண்ணனை நெடுமாலைஇன்தமிழால்நினைந்த * இந்
நாலுமாறும்வல்லார்க்கு இடமாகும் வானுலகே. (2)
1856 கம்பமாகளிறு அஞ்சிக்கலங்க * ஓர்
கொம்புகொண்ட குரைகழல்கூத்தனை *
கொம்புலாம்பொழில் கோட்டியூர்க்கண்டுபோய் *
நம்பனைச்சென்றுகாண்டும் நாவாயுளே.
2227 பயின்றதுஅரங்கம் திருக்கோட்டி * பன்னாள்
பயின்றதுவும் வேங்கடமே * பன்னாள் -பயின்றது
அணிதிகழுஞ்சோலை அணிநீர்மலையே *
மணிதிகழும்வண்தடக்கைமால்.
2268 இன்றாவறிகின்றேனல்லேன் * இருநிலத்தைச்
சென்றுஆங்களந்த திருவடியை * - அன்று
கருக்கோட்டியுள்கிடந்து கைதொழுதேன், கண்டேன் *
திருக்கோட்டியெந்தைதிறம்.
2343 விண்ணகரம்வெஃகா விரிதிரைநீர்வேங்கடம் *
மண்ணகரம்மாமாடவேளுக்கை * மண்ணகத்த
தென்குடந்தை தேனார்திருவரங்கம்தென்கோட்டி *
தன்குடங்கைநீரேற்றான்தாழ்வு.
2415 குறிப்பெனக்குக் கோட்டியூர்மேயானையேத்த *
குறிப்பெனக்கு நன்மைபயக்க * - வெறுப்பனோ?
வேங்கடத்துமேயானை மெய்வினைநோயெய்தாமல் *
தான்கடத்தும்தன்மையான்தாள்.
2779 கோட்டியூர் அன்னவுருவினரியை * திருமெய்யத்து
இன்னமுதவெள்ளத்தை இந்தளூரந்தணனை *
மன்னுமதிள்கச்சி வேளுக்கையாளரியை *
மன்னியபாடகத்து எம்மைந்தனை * -