Chapter 6

Thirukkannapuram 6 - (தொண்டீர் உய்யும்)

திருக்கண்ணபுரம் 6
Thirukkannapuram 6 - (தொண்டீர் உய்யும்)
The āzhvār declares, "To attain salvation, let us worship Sowriraja Perumal of Thirukannapuram."
நாம் உய்யத் திருக்கண்ணபுரத்து சவுரிராஜப் பெருமாளைத் தொழுவோம் என்கிறார் ஆழ்வார்.
Verses: 1698 to 1707
Grammar: Eṇcīrk Kaḻinediladi Āsiriya Viruththam / எண்சீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்
Recital benefits: Will rule this world surrounded by the wide oceans under a royal umbrella and become gods in the sky
Tamil
Simplified
English
Verse info
Synonyms
Translation

PT 8.6.1

1698 தொண்டீர்! உய்யும்வகைகண்டேன் துளங்காஅரக்கர்துளங்க * முன்
திண்தோள்நிமிரச்சிலைவளையச் சிறிதேமுனிந்ததிருமார்பன் *
வண்டார்கூந்தல்மலர்மங்கை வடிக்கண்மடந்தைமாநோக்கம்
கண்டாள் * கண்டுகொண்டுகந்த கண்ணபுரம்நாம்தொழுதுமே. (2)
1698 ## தொண்டீர் உய்யும் வகை கண்டேன் * துளங்கா அரக்கர் துளங்க * முன்
திண் தோள் நிமிரச் சிலை வளையச் * சிறிதே முனிந்த திருமார்வன் **
வண்டு ஆர் கூந்தல் மலர் மங்கை * வடிக் கண் மடந்தை மா நோக்கம்
கண்டான் * கண்டுகொண்டு உகந்த * கண்ணபுரம் நாம் தொழுதுமே. 1
1698 ## tŏṇṭīr uyyum vakai kaṇṭeṉ * tul̤aṅkā arakkar tul̤aṅka * muṉ
tiṇ tol̤ nimirac cilai val̤aiyac * ciṟite muṉinta tirumārvaṉ **
vaṇṭu ār kūntal malar-maṅkai * vaṭik kaṇ maṭantai mā nokkam
kaṇṭāṉ * kaṇṭukŏṇṭu ukanta * kaṇṇapuram nām tŏzhutume.-1

Ragam

Nādhanāmakriya / நாதநாமக்ரியை

Thalam

Jambai / ஜம்பை

Bhavam

Nāyaki (lovelorn lady)

Simple Translation

1698. O devotees, I have found a way to be saved. Our divine strong-shouldered lord became angry, bent his bow and made the Rākshasas who never tremble in war shiver. He is happy when he sees the doe-like glance of Lakshmi with hair that swarms with bees. He stays in Thirukkannapuram— let us go to there and worship him.

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion (Aṉvayam). Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
தொண்டீர்! தொண்டர்களே!; உய்யும் உஜ்ஜீவிக்கும்; வகை கண்டேன் வழியை அறிந்து கொண்டேன்; முன் துளங்கா ஒருநாளும் கஷ்டப்பட்டறியாத; அரக்கர் அரக்கர்கள்; துளங்க அஞ்சும்படியாகவும்; திண் தோள் திடமான தோள்கள்; நிமிர நிமிரும்படியாகவும்; சிலை வளைய வில்லை வளையும்படியாகவும்; சிறிதே முனிந்த சிலரையே அழித்தவனாய்; திருமார்மன் திருமகளை மார்பிலுடையவனாய்; வண்டார் வண்டுகள் படிந்த; கூந்தல் கூந்தலையுடைய; மலர் மங்கை மலர் மங்கையும்; மடந்தை பூமாதேவியும் இவர்களின்; வடி கூரிய; கண் கண்களின் பார்வையை; மா நோக்கம் அனுபவிப்பவனான; கண்டான் பெருமான்; மா உலக ரக்ஷணத்திற்காக; கண்டு ஏகாந்தமான இடம் என்று கண்டு; கொண்டு கொண்டு; உகந்த உகந்த எம்பெருமானிருக்கும்; கண்ணபுரம் திருக்கண்ணபுரத்தை; நாம் தொழுதுமே நாம் தொழுவோம்

PT 8.6.2

1699 பொருந்தாஅரக்கர்வெஞ்சமத்துப் பொன்றஅன்றுபுள்ளூர்ந்து *
பெருந்தோள்மாலிதலைபுரளப் பேர்ந்தஅரக்கர்தென்னிலங்கை *
இருந்தார்தம்மையுடன்கொண்ட அங்குஎழிலார்பிலத்துப்புக்கொளிப்ப *
கருந்தாள்சிலைகைக்கொண்டானூர் கண்ணபுரம்நாம்தொழுதுமே.
1699 பொருந்தா அரக்கர் வெம் சமத்துப் * பொன்ற அன்று புள் ஊர்ந்து *
பெருந் தோள் மாலி தலை புரளப் * பேர்ந்த அரக்கர் தென் இலங்கை **
இருந்தார் தம்மை உடன்கொண்டு * அங்கு எழில் ஆர் பிலத்துப் புக்கு ஒளிப்ப *
கருந் தாள் சிலை கைக்கொண்டான் ஊர் * கண்ணபுரம் நாம் தொழுதுமே 2
1699 pŏruntā arakkar vĕm camattup * pŏṉṟa aṉṟu pul̤ ūrntu *
pĕrun tol̤ māli talai pural̤ap * pernta arakkar tĕṉ ilaṅkai **
iruntār-tammai uṭaṉkŏṇṭu * aṅku ĕzhil ār pilattup pukku ŏl̤ippa *
karun tāl̤ cilai kaikkŏṇṭāṉ ūr * kaṇṇapuram nām tŏzhutume 2

Ragam

Nādhanāmakriya / நாதநாமக்ரியை

Thalam

Jambai / ஜம்பை

Bhavam

Nāyaki (lovelorn lady)

Reference Scriptures

BG. 9-29

Simple Translation

1699. Our lord who carried a strong bow in his hand and shot arrows and killed all the Rākshasas in southern Lankā and who rode on Garudā to fight with strong-armed Māli, making his head roll on the ground, stays in Thirukkannapuram. Let us go there and worship him.

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion (Aṉvayam). Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
பொருந்தா முன்பு சத்ருக்களான; அரக்கர் அரக்கர்கள்; வெம் சமத்து கொடிய போரில்; பொன்ற அன்று முடியும்படியாக அன்று; புள் ஊர்ந்து கருடன் மேல் ஊர்ந்து; பெருந் தோள் வலிய தோள்களையுடைய; மாலி மாலியின்; தலை புரள தலை பூமியில் புரளும்படியாகவும்; பேர்ந்த அரக்கர் அவனைத் தவிர மற்ற அரக்கர்கள்; தென் இலங்கை தென் இலங்கையிலிருந்த; இருந்தார் தம்மை மற்றுமுள்ள அரக்கர்களையும்; உடன் இலங்கையிலிருந்து; கொண்டு கூட்டிக்கொண்டு; அங்கு அங்கிருந்து; எழிலார் பிலத்துப்புக்கு அழகிய பாதாளத்தில்; ஒளிப்ப புகுந்து ஒளிய; கருந்தாள் சிலை வயிரம் பாய்ந்த தனுசை; கைக் கொண்டான் கையிலுடைய பெருமானின்; ஊர் கண்ணபுரம் ஊரான திருக்கண்ணபுரத்தை; நாம் தொழுதுமே நாம் தொழுவோம்

PT 8.6.3

1700 வல்லியிடையாள்பொருட்டாக மதிள்நீரிலங்கையார்கோவை *
அல்லல்செய்துவெஞ்சமத்துள் ஆற்றல்மிகுந்தஆற்றலான் *
வல்லாளரக்கர்குலப்பாவைவாட முனிதன்வேள்வியை *
கல்விச்சிலையால்காத்தானூர் கண்ணபுரம்நாம்தொழுதுமே.
1700 வல்லி இடையாள் பொருட்டாக * மதிள் நீர் இலங்கையார் கோவை *
அல்லல் செய்து வெம் சமத்துள் * ஆற்றல் மிகுத்த ஆற்றலான் **
வல் ஆள் அரக்கர் குலப்பாவை வாட * முனி தன் வேள்வியை *
கல்விச் சிலையால் காத்தான் ஊர் * கண்ணபுரம் நாம் தொழுதுமே 3
1700 valli iṭaiyāl̤ pŏruṭṭāka * matil̤ nīr ilaṅkaiyār-kovai *
allal cĕytu vĕm camattul̤ * āṟṟal mikutta āṟṟalāṉ **
val āl̤ arakkar kulappāvai vāṭa * muṉi-taṉ vel̤viyai *
kalvic cilaiyāl kāttāṉ ūr * kaṇṇapuram nām tŏzhutume-3

Ragam

Nādhanāmakriya / நாதநாமக்ரியை

Thalam

Jambai / ஜம்பை

Bhavam

Nāyaki (lovelorn lady)

Simple Translation

1700. Our lord who fought with Thādaga, the daughter of a Rākshasa family and killed her when she disturbed the sacrifices of the sages, and protected their sacrifices, and who went to Lankā surrounded by forts and the ocean, fought a terrible war with the king of Lankā, afflicting him, and brought back his vine-waisted wife Sita stays in Thirukkannapuram. Let us go there and worship him.

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion (Aṉvayam). Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
வல்லி கொடிபோன்ற; இடையாள் இடையையுடைய; பொருட்டாக ஸீதைக்காக; நீர் கடலை அகழாகவுடைய; மதிள் மதிள்களோடு கூடின; இலங்கையார் இலங்கை அரக்கர்களின்; கோவை தலைவனை; அல்லல் செய்து துன்பப்படுத்தி; வெம் சமத்துள் கொடிய போரில்; ஆற்றல் மிகுந்த வலிமை மிகுந்த; ஆற்றலான் மகா வீரனாய்; வல்லாள் வலிய ஆண்மையையுடைய; அரக்கர் அரக்கர்களின்; குல குலத்தில் தோன்றிய; பாவை வாட தாடகையை அழித்து; முனி தன் விச்வாமித்ர முனியின்; வேள்வியை வேள்வியை; கல்வி தான் கற்ற; சிலையால் வில்லைக் கொண்டு; காத்தான் ஊர் காத்த பெருமானின் ஊரான; கண்ணபுரம் திருகண்ணபுரத்தை; நாம் தொழுதுமே நாம் தொழுவோம்

PT 8.6.4

1701 மல்லைமுந்நீரஅதர்பட வரிவெஞ்சிலைகால்வளைவித்து *
கொல்லைவிலங்குபணிசெய்யக் கொடியோனிலங்கைபுகலுற்று *
தொல்லைமரங்கள்புகப்பெய்து துவலைநிமிர்ந்துவானணவ *
கல்லால்கடலையடைத்தானூர் கண்ணபுரம்நாம்தொழுதுமே.
1701 மல்லை முந்நீர் அதர்பட * வரி வெம் சிலை கால் வளைவித்து *
கொல்லை விலங்கு பணிசெய்ய * கொடியோன் இலங்கை புகல் உற்று **
தொல்லை மரங்கள் புகப் பெய்து * துவலை நிமிர்ந்து வான் அணவ *
கல்லால் கடலை அடைத்தான் ஊர் * கண்ணபுரம் நாம் தொழுதுமே 4
1701 mallai munnīr atarpaṭa * vari vĕm cilai kāl val̤aivittu *
kŏllai vilaṅku paṇicĕyya * kŏṭiyoṉ ilaṅkai pukal uṟṟu **
tŏllai maraṅkal̤ pukap pĕytu * tuvalai nimirntu vāṉ aṇava *
kallāl kaṭalai aṭaittāṉ ūr * kaṇṇapuram nām tŏzhutume-4

Ragam

Nādhanāmakriya / நாதநாமக்ரியை

Thalam

Jambai / ஜம்பை

Bhavam

Nāyaki (lovelorn lady)

Simple Translation

1701. When Rāma went to bring back his wife Sita, and shot his arrows at the ocean making Varuna the god of the sea come to aid him, the monkeys in the Kishkinda forest built a bridge over the ocean with stones and trees and helped him as the spray from the ocean rose to the sky. Thirumāl who as Rāma with the monkey army entered Lankā, the kingdom of the cruel Rākshasa king Rāvana, stays in Thirukkannapuram. Let us go there and worship him.

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion (Aṉvayam). Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
கொடியோன் கொடிய இராவணனின்; இலங்கை இலங்கையில்; புகல் உற்று பிரவேசிப்பதற்காக; மல்லை முன் செழிப்பான; நீர் அதர்பட கடல் வழிவிடும்படி; வரி வெம் வரிகளையுடைய கொடிய; சிலை வில்லை; கால் வளைவித்து வளையச்செய்து; கொல்லை விலங்கு வானரங்கள்; பணி செய்ய கைங்கர்யம் செய்ய; தொல்லை மரங்கள் பழைய மரங்களை; புக கடலினுள் புகும்படியாக; பெய்து வெட்டிப் போட்டு; துவலை நிமிர்ந்து திவலைகள் கிளர்ந்த கடலில்; வான் அணவ ஆகாசத்து அளவு; கல்லால் கடலை மலைகளால் கடலில்; அடைத்தான் அணைகட்டிய பெருமானின்; ஊர் கண்ணபுரம் ஊரான திருக்கண்ணபுரத்தை; நாம் தொழுதுமே நாம் தொழுவோம்

PT 8.6.5

1702 ஆமையாகிஅரியாகி அன்னமாகி * அந்தணர்தம்

ஓமமாகிஊழியாகி உலகுசூழ்ந்தநெடும்புணரி *

சேமமதிள்சூழிலங்கைக்கோன் சிரமுங்கரமும்துணித்து * முன்

காமற்பயந்தான்கருதுமூர் கண்ணபுரம்நாம்தொழுதுமே.
1702 ஆமை ஆகி அரி ஆகி * அன்னம் ஆகி * அந்தணர் தம்

ஓமம் ஆகி ஊழி ஆகி * உவரி சூழ்ந்த நெடும் புணரி **

சேம மதிள் சூழ் இலங்கைக் கோன் * சிரமும் கரமும் துணித்து * முன்

காமன் பயந்தான் கருதும் ஊர் * கண்ணபுரம் நாம் தொழுதுமே 5
1702 āmai āki ari āki * aṉṉam āki * antaṇar-tam

omam āki ūzhi āki * uvari cūzhnta nĕṭum puṇari **

cema matil̤ cūzh ilaṅkaik koṉ * ciramum karamum tuṇittu * muṉ

kāmaṉ payantāṉ karutum ūr * kaṇṇapuram nām tŏzhutume-5

Ragam

Nādhanāmakriya / நாதநாமக்ரியை

Thalam

Jambai / ஜம்பை

Bhavam

Nāyaki (lovelorn lady)

Simple Translation

1702. Our lord, the father of Kāma, is the eon itself. He took the forms of a turtle, a man-lion and a swan to fight with the Asurans and he accepts the sacrifices that Vediyars offer with the recitation of the Vedās. He went to Lankā protected by strong forts and surrounded with high, wave-filled oceans that circle the whole earth and cut off the ten heads and twenty hands of its king Rāvana and he stays happily in Thirukkannapuram—let us go there and worship him.

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion (Aṉvayam). Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
ஆமை ஆகி கூர்மமாய்; அரி ஆகி நரசிம்மமாய்; அன்னம் ஆகி அன்னமாய்; அந்தணர் தம் அந்தணர்களின்; ஓமம் ஆகி யாகமாய்; ஊழி ஆகி காலனாய்; உவரி நெடும் விசாலமான உப்பு; புணரி சூழ்ந்த கடலாலே சூழ்ந்த; சேம மதிள் காவலான மதிள்களாலே; சூழ் சூழ்ந்த; இலங்கைக்கோன் ராவணனின்; சிரமும் கரமும் சிரமும் கரமும்; துணித்து துணித்தவனும்; முன் காமன் முன்பு மன்மதனை; பயந்தான் மகனாகப் பெற்றவனும்; கருதும் ஊர் விரும்பி இருக்கும் ஊரான; கண்ணபுரம் திருக்கண்ணபுரத்தை; நாம் தொழுதுமே நாம் தொழுவோம்

PT 8.6.6

1703 வருந்தாதிருநீமடநெஞ்சே! நம்மேல்வினைகள்வாரா * முன்
திருந்தாஅரக்கர்தென்னிலங்கை செந்தீயுண்ணச்சிவந்து, ஒருநாள் *
பெருந்தோள்வாணற்குஅருள்புரிந்து பின்னைமணாளனாகி * முன்
கருந்தாள்களிறொன்றொசித்தானூர் கண்ணபுரம்நாம்தொழுதுமே.
1703 வருந்தாது இரு நீ மட நெஞ்சே * நம் மேல் வினைகள் வாரா * முன்
திருந்தா அரக்கர் தென் இலங்கை * செந் தீ உண்ண சிவந்து ஒருநாள் **
பெருந் தோள் வாணற்கு அருள் புரிந்து * பின்னை மணாளன் ஆகி * முன்
கருந் தாள் களிறு ஒன்று ஒசித்தான் ஊர் * கண்ணபுரம் நாம் தொழுதுமே 6
1703 varuntātu iru nī maṭa nĕñce * nam mel viṉaikal̤ vārā * muṉ
tiruntā arakkar tĕṉ ilaṅkai * cĕn tī uṇṇa civantu ŏrunāl̤ **
pĕrun tol̤ vāṇaṟku arul̤ purintu * piṉṉai maṇāl̤aṉ āki * muṉ
karun tāl̤ kal̤iṟu ŏṉṟu ŏcittāṉ ūr * kaṇṇapuram nām tŏzhutume-6

Ragam

Nādhanāmakriya / நாதநாமக்ரியை

Thalam

Jambai / ஜம்பை

Bhavam

Nāyaki (lovelorn lady)

Simple Translation

1703. O innocent heart, do not worry— the results of bad karmā will not come to us. Our lord who burned up Lankā in the south, ruled by his enemy Rākshasas, broke the long tusks of the elephant Kuvalayābeedam and gave his grace to Vānāsuran, the beloved of Nappinnai stays in Thirukkannapuram. Let us go there and worship him.

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion (Aṉvayam). Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
மட நெஞ்சே! மட நெஞ்சே!; வருந்தாது இரு நீ நீ வருத்தப்படாமல் இரு; நம் மேல் வினைகள் நம் மேல் பாபங்கள்; வாரா வந்து சேராது; முன் திருந்தா முன்பு திருந்தாதிருந்த; அரக்கர் அரக்கர்களின்; தென் இலங்கை ஊரான தென் இலங்கையை; செந் தீ சிவந்த நெருப்பு; உண்ண ஆக்ரமிக்கும்படி; சிவந்து சீறினவனானவனும்; ஒரு நாள் வேறு ஒரு சமயம்; பெருந்தோள் பெரிய தோள்களையுடைய; வாணற்கு பாணாஸுரன் விஷயத்தில்; அருள்புரிந்து அருள்புரிந்தவனும்; பின்னை நப்பின்னையின்; மணாளன் ஆகி நாதனும்; முன் கரும் முன்பு வலிமையுள்ள; தாள் கால்களையுடைய; களிறு ஒன்று ஒரு யானையை; ஒசித்தான் ஊர் கொன்ற பெருமானின் ஊரான; கண்ணபுரம் திருக்கண்ணபுரத்தை; நாம் தொழுதுமே நாம் தொழுவோம்

PT 8.6.7

1704 இலையார்மலர்ப்பூம்பொய்கைவாய் முதலைதன்னால்அடர்ப்புண்டு *
கொலையார்வேழம்நடுக்குற்றுக்குலைய அதனுக்குஅருள்புரிந்தான் *
அலைநீரிலங்கைத்தசக்கிரீவற்கு இளையோற்குஅரசையருளி * முன்
கலைமாச்சிலையால்எய்தானூர் கண்ணபுரம்நாம்தொழுதுமே.
1704 இலை ஆர் மலர்ப் பூம் பொய்கைவாய் * முதலை தன்னால் அடர்ப்புண்டு *
கொலை ஆர் வேழம் நடுக்கு உற்றுக் குலைய * அதனுக்கு அருள்புரிந்தான் **
அலை நீர் இலங்கைத் தசக்கிரீவற்கு * இளையோற்கு அரசை அருளி * முன்
கலை மாச் சிலையால் எய்தான் ஊர் * கண்ணபுரம் நாம் தொழுதுமே 7
1704 ilai ār malarp pūm pŏykaivāy * mutalai-taṉṉāl aṭarppuṇṭu *
kŏlai ār vezham naṭukku uṟṟuk kulaiya * ataṉukku arul̤purintāṉ **
alai nīr ilaṅkait tacakkirīvaṟku * il̤aiyoṟku aracai arul̤i * muṉ
kalai māc cilaiyāl ĕytāṉ ūr * kaṇṇapuram nām tŏzhutume-7

Ragam

Nādhanāmakriya / நாதநாமக்ரியை

Thalam

Jambai / ஜம்பை

Bhavam

Nāyaki (lovelorn lady)

Simple Translation

1704. He killed the murderous crocodile that caught the elephant Gajendra when the elephant went to get flowers from a pond blooming with flowers and tender leaves to worship him, and he gave the kingdom of Lankā to Vibhishanā the younger brother of ten-headed Rāvana, the king of Lankā surrounded with oceans rolling with waves, after shooting his arrow and killing Marisan when he came as a golden deer. He stays in Thirukkannapuram— let us go there and worship him.

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion (Aṉvayam). Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
கொலை ஆர் வேழம் மதம் மிகுந்த யானை; இலை ஆர் இலைகள் நிறைந்த; மலர்ப் பூம் மலர்களையுடைய அழகிய; பொய்கை வாய் பொய்கையில்; முதலை தன்னால் முதலையினால்; அடர்ப்புண்டு துன்பப்பட்டு; நடுக்கு உற்று நடுங்கி ஓய்ந்து; குலைய நிற்க; அதனுக்கு அருள் அதனுக்கு அருள்; புரிந்தான் புரிந்தவனும்; அலை அலைகளை உடைய; நீர் கடல் சூழ்ந்த இலங்கைக்கு; இலங்கை தலைவனான; தசக்கிரீவற்கு ராவணனின்; இளையோற்கு தம்பியான விபீஷணனுக்கு; அரசை அருளி அரசை அளித்தவனும்; முன் முன்பு; கலை மா மாரீசனாகிற மானை; சிலையால் ஒரு வில்லாலே; எய்தான் ஊர் முடித்தவனின் ஊரான; கண்ணபுரம் திருக்கண்ணபுரத்தை; நாம் தொழுதுமே நாம் தொழுவோம்

PT 8.6.8

1705 மாலாய்மனமே! அருந்துயரில் வருந்தாதிருநீ * வலிமிக்க
காலார்மருதும்காய்சினத்தகழுதும் கதமாக்கழுதையும் *
மாலார்விடையும்மதகரியும் மல்லருயிரும்மடிவித்து *
காலால்சகடம்பாய்ந்தானூர் கண்ணபுரம்நாம்தொழுதுமே.
1705 மால் ஆய் மனமே அருந் துயரில் * வருந்தாது இரு நீ வலி மிக்க *
கால் ஆர் மருதும் காய் சினத்த கழுதும் * கத மாக் கழுதையும் **
மால் ஆர் விடையும் மத கரியும் * மல்லர் உயிரும் மடிவித்து *
காலால் சகடம் பாய்ந்தான் ஊர் * கண்ணபுரம் நாம் தொழுதுமே 8
1705 māl āy maṉame arun tuyaril * varuntātu iru nī vali mikka *
kāl ār marutum kāy ciṉatta kazhutum * kata māk kazhutaiyum **
māl ār viṭaiyum mata kariyum * mallar uyirum maṭivittu *
kālāl cakaṭam pāyntāṉ ūr * kaṇṇapuram nām tŏzhutume-8

Ragam

Nādhanāmakriya / நாதநாமக்ரியை

Thalam

Jambai / ஜம்பை

Bhavam

Nāyaki (lovelorn lady)

Simple Translation

1705. O mind, you are confused— do not be plunged in deep sorrow and suffer. The lord who destroyed the Marudu trees and killed the angry Asuran, fought with seven strong bulls, killed the elephant Kuvalayābeedam and the wrestlers sent by Kamsan, and broke the cart when Sakatasuran came in that form and killed him stays in Thirukkannapuram— let us go there and worship him.

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion (Aṉvayam). Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
மால் ஆய் மனமே! மனமே! நீ மயக்கமடைந்து; அருந் துயரில் துயரப்பட்டு; வருந்தாது இரு நீ வருந்த வேண்டாம்; வலிமிக்க வலிமையையுடைய; கால்ஆர் மருதும் மருதமரங்களையும்; காய் சினத்த மிகுந்த கோபங்கொண்டு வந்த; கழுதும் பூதனையையும்; கத மா சேசியென்னும் குதிரையையும்; கழுதையும் கழுதைவடிவம் கொண்ட தேனுகாசுரனையும்; மால் ஆர் பெரிய வடிவம் கொண்ட; விடையும் எருதுகளையும்; மத கரியும் மதயானையையும்; மல்லர் உயிரும் மல்லர்களின் உயிரையும்; மடிவித்து முடித்தவனும்; காலால் சகடம் காலால் சகடாஸுரனை; பாய்ந்தான் பாய்ந்து முடித்தவனுமான; ஊர் பெருமானின் ஊரான; கண்ணபுரம் திருக்கண்ணபுரத்தை; நாம் தொழுதுமே நாம் தொழுவோம்

PT 8.6.9

1706 குன்றால்மாரிபழுதாக்கிக் கொடியேரிடையாள்பொருட்டாக *
வன்தாள்விடையேழ்அன்றடர்த்த வானோர்பெருமான்மாமாயன் *
சென்றான்தூதுபஞ்சவர்க்காய்த் திரிகாற்சகடம்சினமழித்து *
கன்றால்விளங்காயெறிந்தானூர் கண்ணபுரம்நாம்தொழுதுமே.
1706 குன்றால் மாரி பழுது ஆக்கி * கொடி ஏர் இடையாள் பொருட்டாக *
வன் தாள் விடை ஏழ் அன்று அடர்த்த * வானோர் பெருமான் மா மாயன் **
சென்றான் தூது பஞ்சவர்க்கு ஆய்த் * திரி கால் சகடம் சினம் அழித்து *
கன்றால் விளங்காய் எறிந்தான் ஊர் * கண்ணபுரம் நாம் தொழுதுமே 9
1706 kuṉṟāl māri pazhutu ākki * kŏṭi er iṭaiyāl̤ pŏruṭṭāka *
vaṉ tāl̤ viṭai ezh aṉṟu aṭartta * vāṉor pĕrumāṉ mā māyaṉ **
cĕṉṟāṉ tūtu pañcavarkku āyt * tiri kāl cakaṭam ciṉam azhittu *
kaṉṟāl vil̤aṅkāy ĕṟintāṉ ūr * kaṇṇapuram nām tŏzhutume-9

Ragam

Nādhanāmakriya / நாதநாமக்ரியை

Thalam

Jambai / ஜம்பை

Bhavam

Nāyaki (lovelorn lady)

Simple Translation

1706. The Māyan, the lord of the gods in the sky, carried Govardhanā mountain as an umbrella and protected the cows and the cowherds from the storm, killed seven strong-legged bulls to marry the vine-waisted Nappinnai, went as a messenger to the Kauravās for the Pāndavās, kicked and broke the cart when Sakatasuran appeared in that form and killed him, and threw a calf at the vilam tree and killed two Asurans. Let us go to Thirukkannapuram and worship him.

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion (Aṉvayam). Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
குன்றால் மலையினால்; மாரி பெருமழையை; பழுது ஆக்கி தடுத்தவனாய்; கொடி ஏர் கொடிபோன்ற; இடையாள் இடையை யுடைய; பொருட்டாக நப்பின்னைக்காக; வன் தாள் வலிய கால்களையுடைய; விடை ஏழ் ஏழு எருதுகளை; அன்று அடர்த்த முன்பு அடக்கினவனும்; வானோர் பெருமான் தேவர்களின் தலைவனும்; மா மாயன் மா மாயவனும்; பஞ்சவர்க்கு ஆய் பாண்டவர்களுக்காக; சென்றான் தூது தூது சென்றவனும்; திரி கால் சகடம் ஊர்ந்து செல்லும் சகடத்தின்; சினம் அழித்து கோபத்தை அழித்தவனும்; கன்றால் கன்றாக வந்த அசுரனை; விளங்காய் விளாங்காயாக வந்த; எறிந்தான் அசுரன் மீது எறிந்த; ஊர் பெருமானின் ஊரான; கண்ணபுரம் திருக்கண்ணபுரத்தை; நாம் தொழுதுமே நாம் தொழுவோம்

PT 8.6.10

1707 கருமாமுகில்தோய்நெடுமாடக் கண்ணபுரத்தெம்மடிகளை *
திருமாமகளால்அருள்மாரி செழுநீராலிவளநாடன் *
மருவார்புயற்கைக்கலிகன்றி மங்கைவேந்தனொலிவல்லார் *
இருமாநிலத்துக்கரசாகி இமையோரிறைஞ்சவாழ்வாரே. (2)
1707 ## கரு மா முகில் தோய் நெடு மாடக் * கண்ணபுரத்து எம் அடிகளை *
திரு மா மகளால் அருள்மாரி * செழுநீர் ஆலி வள நாடன் **
மருவு ஆர் புயல் கைக் கலிகன்றி * மங்கை வேந்தன் ஒலி வல்லார் *
இரு மா நிலத்துக்கு அரசு ஆகி * இமையோர் இறைஞ்ச வாழ்வாரே 10
1707 ## karu mā mukil toy nĕṭu māṭak * kaṇṇapurattu ĕm aṭikal̤ai *
tiru mā makal̤āl arul̤māri * cĕzhunīr āli val̤a nāṭaṉ **
maruvu ār puyal kaik kalikaṉṟi * maṅkai ventaṉ ŏli vallār *
iru mā nilattukku aracu āki * imaiyor iṟaiñca vāzhvāre-10

Ragam

Nādhanāmakriya / நாதநாமக்ரியை

Thalam

Jambai / ஜம்பை

Bhavam

Nāyaki (lovelorn lady)

Divya Desam

Simple Translation

1707. Kaliyan, the generous king of Thirumangai in flourishing Thiruvāli, composed ten pāsurams on the lord of Thirukannapuram surrounded with tall palaces over which dark clouds float. If devotees learn and recite these poems, they will rule this large world as the gods praise them.

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion (Aṉvayam). Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
கரு மா முகில் தோய் கறுத்த மேகங்கள் சூழ்ந்த; நெடு மாட பெரிய மாளிகைகளையுடைய; கண்ணபுரத்து திருக் கண்ணபுரத்து; எம் அடிகளை பெருமானைக் குறித்து; திரு மா மகளால் திருமகள் மூலமாக; அருள்மாரி அருள்மாரி என்ற பெயர் பெற்ற; செழு நீர் நிறைந்த நீருடைய; ஆலி வள நாடன் திருவாலி நாட்டுத்தலவரும்; மருவு ஆர் காளமேகம் போன்ற; புயல் கை ஔதார்யமுடையவரும்; மங்கை திருமங்கைக்கு; வேந்தன் பிரபுவுமான; கலிகன்றி திருமங்கை ஆழ்வார் அருளிச்செய்த பாசுரங்களை; ஒலி வல்லார் ஓத வல்லார்கள்; இரு மாநிலத்துக்கு இரண்டு லோகங்களுக்கும்; அரசுஆகி அரசர்களாகி; இமையோர் நித்தியமுக்தர்கள் திருவடிகளை; இறைஞ்ச வணங்குபவர்களாக; வாழ்வாரே வாழ்வரே