If One Worships Tirukkaṇṇapuram, There is Salvation
திருக்கண்ணபுரம் தொழுதால் உய்வுண்டு
1698 தொண்டீர்! உய்யும்வகைகண்டேன் துளங்காஅரக்கர்துளங்க * முன்
திண்தோள்நிமிரச்சிலைவளையச் சிறிதேமுனிந்ததிருமார்பன் *
வண்டார்கூந்தல்மலர்மங்கை வடிக்கண்மடந்தைமாநோக்கம்
கண்டாள் * கண்டுகொண்டுகந்த கண்ணபுரம்நாம்தொழுதுமே. (2)