Chapter 6
Thirunāngur Thirukkāvalandanbādi - (தா அளந்து)
திருநாங்கூர்க் காவளம்பாடி
This Divya Desam is located about one and a half miles east of Thirunangur. It lies on the route from Sirkazhi to Poompuhar. Near this village is Thirukkuraiyalur, the birthplace of Thirumangai āzhvār.
இந்தத் திவ்விய தேசம் திருநாங்கூருக்குக் கிழக்கே சுமார் ஒன்றரை மைல் தொலைவில் உள்ளது. சீர்காழியிலிருந்து பூம்புகாருக்கு செல்லும் வழியில் இந்தத் திவ்விய தேசம் உள்ளது. இவ்வூருக்கு அருகில் திருமங்கையாழ்வார் அவதரித்த திருக்குறையலூர் உள்ளது.
Verses: 1298 to 1307
Grammar: Aṟuchīrk Kaḻinediladi Āsiriya Viruththam / அறுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்
Recital benefits: Will rule this world surrounded by the wide oceans under a royal umbrella and become gods in the sky
- PT 4.6.1
1298 ## தா அளந்து உலகம் முற்றும் *
தட மலர்ப் பொய்கை புக்கு *
நா வளம் நவின்று அங்கு ஏத்த *
நாகத்தின் நடுக்கம் தீர்த்தாய் **
மா வளம் பெருகி மன்னும் *
மறையவர் வாழும் நாங்கை *
காவளம்பாடி மேய *
கண்ணனே களைகண் நீயே 1 - PT 4.6.2
1299 மண் இடந்து ஏனம் ஆகி * மாவலி வலி தொலைப்பான் *
விண்ணவர் வேண்டச் சென்று * வேள்வியில் குறை இரந்தாய் **
துண் என மாற்றார் தம்மைத் * தொலைத்தவர் நாங்கை மேய *
கண்ணனே காவளம் தண் பாடியாய் * களைகண் நீயே 2 - PT 4.6.3
1300 உருத்து எழு வாலி மார்வில் *
ஒரு கணை உருவ ஓட்டி *
கருத்து உடைத் தம்பிக்கு * இன்பக்
கதிர் முடி அரசு அளித்தாய் **
பருத்து எழு பலவும் மாவும் *
பழம் விழுந்து ஒழுகும் நாங்கை *
கருத்தனே காவளம் தண்
பாடியாய் * களைகண் நீயே 3 - PT 4.6.4
1301 முனைமுகத்து அரக்கன் மாள *
முடிகள் பத்து அறுத்து வீழ்த்து * ஆங்கு
அனையவற்கு இளையவற்கே *
அரசு அளித்து அருளினானே **
சுனைகளில் கயல்கள் பாயச் *
சுரும்பு தேன் நுகரும் நாங்கை *
கனை கழல் காவளம் தண்
பாடியாய் * களைகண் நீயே 4 - PT 4.6.5
1302 பட அரவு உச்சி தன்மேல் *
பாய்ந்து பல் நடங்கள்செய்து *
மடவரல் மங்கை தன்னை *
மார்வகத்து இருத்தினானே **
தட வரை தங்கு மாடத் *
தகு புகழ் நாங்கை மேய *
கடவுளே காவளம் தண்
பாடியாய் * களைகண் நீயே 5 - PT 4.6.6
1303 மல்லரை அட்டு மாளக் *
கஞ்சனை மலைந்து கொன்று *
பல் அரசு அவிந்து வீழப் *
பாரதப் போர் முடித்தாய் **
நல் அரண் காவின் நீழல் *
நறை கமழ் நாங்கை மேய *
கல் அரண் காவளம் தண்
பாடியாய் * களைகண் நீயே 6 - PT 4.6.7
1304 மூத்தவற்கு அரசு வேண்டி *
முன்பு தூது எழுந்தருளி *
மாத்து அமர் பாகன் வீழ *
மத கரி மருப்பு ஒசித்தாய் **
பூத்து அமர் சோலை ஓங்கிப் *
புனல் பரந்து ஒழுகும் நாங்கை *
காத்தனே காவளம் தண்
பாடியாய் * களைகண் நீயே 7 - PT 4.6.8
1305 ஏவு இளங் கன்னிக்கு ஆகி *
இமையவர் கோனைச் செற்று *
கா வளம் கடிது இறுத்துக் *
கற்பகம் கொண்டு போந்தாய் **
பூ வளம் பொழில்கள் சூழ்ந்த *
புரந்தரன் செய்த நாங்கை *
காவளம்பாடி மேய *
கண்ணனே களைகண் நீயே 8 - PT 4.6.9
1306 சந்தம் ஆய்ச் சமயம் ஆகிச் *
சமய ஐம் பூதம் ஆகி *
அந்தம் ஆய் ஆதி ஆகி *
அரு மறை அவையும் ஆனாய் **
மந்தம் ஆர் பொழில்கள்தோறும் *
மட மயில் ஆலும் நாங்கை *
கந்தம் ஆர் காவளம் தண்
பாடியாய் * களைகண் நீயே 9 - PT 4.6.10
1307 ## மா வளம் பெருகி மன்னும் *
மறையவர் வாழும் * நாங்கைக்
காவளம்பாடி மேய *
கண்ணனைக் கலியன் சொன்ன **
பா வளம் பத்தும் வல்லார் *
பார்மிசை அரசர் ஆகிக் *
கோ இள மன்னர் தாழக் *
குடை நிழல் பொலிவர் தாமே 10