Chapter 7

Thiruvāli 3 - (கள்வன்கொல் யான்)

திருவாலி 3
Thiruvāli 3 - (கள்வன்கொல் யான்)
The āzhvār, assuming the role of a Nayaki, previously sent messages to the Lord through a bee and a stork. It is said that Vayalali Emperuman came that night and took Parakala Nayaki away. This verse is structured like the lament of a mother who wakes up to find her daughter (Parakala Nayaki), who had slept beside her, missing. The mother is distraught and laments, realizing that the union has already taken place.
ஆழ்வார், நாயகி நிலையை அடைந்து முன்பு வண்டு, குருகு ஆகியவற்றை வயலாகி மணவாளனுக்குத் தூது விட்டார். வயலாளி எம்பெருமான் அன்றிரவில் வந்து பரகாலநாயகியை அழைத்துச் சென்றுவிட்டதாக ஈண்டுக் கூறப்படுகிறது. தன்னோடு படுத்துறங்கிய தன் பெண்ணை (பரகாலநாயகியை)க் காணாமல் தாய் திகைத்துப் புலம்புவதுபோல் இப்பாசுரம் அமைந்துள்ளது. உடன்போக்கு நிகழ்ந்துவிட்டதே என்று தாய் இரங்குகிறாள்.
Verses: 1208 to 1217
Grammar: Kalinilaiththuṟai / கலிநிலைத்துறை
Recital benefits: Will go to Vaikuṇṭam and be with the Gods
Tamil
Simplified
English
Verse info
Synonyms
Translation

PT 3.7.1

1208 கள்வன்கொல்? யான்அறியேன்கரியானொரு காளைவந்து *
வள்ளிமருங்குல் என்தன் மடமானினைப் போதவென்று *
வெள்ளிவளைக்கை பற்றப் பெற்ற தாயரை விட்டகன்று *
அள்ளலம்பூங்கழனி அணியாலிபுகுவர்கொலோ? (2)
1208 ## கள்வன்கொல்? யான் அறியேன் * கரியான் ஒரு காளை வந்து *
வள்ளி மருங்குல் * என் தன் மட மானினைப் போத என்று **
வெள்ளி வளைக் கை * பற்றப் பெற்ற தாயரை விட்டு அகன்று *
அள்ளல் அம் பூங் கழனி * அணி ஆலி புகுவர்கொலோ? 1
1208 ## kal̤vaṉkŏl? yāṉ aṟiyeṉ * kariyāṉ ŏru kāl̤ai vantu *
val̤l̤i maruṅkul * ĕṉ-taṉ maṭa māṉiṉaip pota ĕṉṟu **
vĕl̤l̤i val̤aik kai * paṟṟap pĕṟṟa tāyarai viṭṭu akaṉṟu *
al̤l̤al am pūṅ kazhaṉi * aṇi āli pukuvarkŏlo?-1

Ragam

Dvajāvanti / த்வஜாவந்தி

Thalam

Ādi / ஆதி

Bhavam

Mother

Simple Translation

1208. Her mother says, “Is he a thief? I don’t know who he is. A dark one like a bull came to my daughter, as innocent as a doe and with a waist thin as a vine, and he said, ‘Come. ’ He took her hand ornamented with silver bangles and went with her. She left me, her mother. I gave birth to her but she went with him. Will they go to the beautiful Thiruvāli flourishing with muddy fields?”

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion (Aṉvayam). Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
கள்வன் கொல் கள்வனோ அன்றி உடையவன் தானோ; யான் அறியேன் நான் அறியேன்; கரியான் கருத்த நிற; ஒரு காளை வந்து காளை ஒருவன் வந்து; வள்ளி மருங்குல் என்தன் நுண்ணிய இடையுடைய என்; மட மானினை இள மான் போன்ற என் பெண்ணை; போத என்று வா என்று அழைத்து; வெள்ளி வளை வெள்ளி வளையணிந்துள்ள; கைப் பற்ற கையைப் பிடிக்க; பெற்ற தாயரை பெற்ற தாயான என்னை; விட்டு அகன்று விட்டு போய் விட்டாள்; அள்ளல் சேற்று நிலங்களிலே; அம் பூ அழகிய பூக்கள்; கழனி நிறைந்த வயல்களையுடைய; அணி ஆலி அழகிய திருவாலி; புகுவர்கொலோ புகுந்தார்களோ
kal̤vankol īs he a thief (or the owner)?; yān aṛiyĕn ī don-t know; kariyān oru kāl̤ai vandhu a dark, young person came; val̤l̤i marungul having slender waist; endhan mada māninai my daughter, who is very young; pŏdha enṛu urged her saying -Come! Come!-; vel̤l̤i val̤aik kai paṝa holding her hand which has silver bangles; peṝa thāyarai me who is her mother; ittu aganṛu leaving alone; al̤l̤al in mud; am pūngazhani having fertile fields which are filled with beautiful flowers; aṇi āli in thiruvāli which is an ornament for the earth; puguvarkolŏ will they enter?

PT 3.7.2

1209 பண்டு இவன் ஆயன்நங்காய்! படிறன் புகுந்து * என்மகள்தன்
தொண்டையஞ்செங்கனிவாய் நுகர்ந்தானை உகந்து * அவன் பின்
கெண்டையொண்கண்மிளிரக் கிளிபோல்மிழற்றி நடந்து *
வண்டமர்கானல்மல்கும் வயலாலி புகுவர்கொலோ?
1209 பண்டு இவன் ஆயன் நங்காய் * படிறன் புகுந்து * என் மகள் தன்
தொண்டை அம் செங் கனி வாய் * நுகர்ந்தானை உகந்து ** அவன்பின்
கெண்டை ஒண் கண் மிளிரக் * கிளிபோல் மிழற்றி நடந்து *
வண்டு அமர் கானல் மல்கும் * வயல் ஆலி புகுவர்கொலோ? 2
1209 paṇṭu ivaṉ āyaṉ naṅkāy * paṭiṟaṉ pukuntu * ĕṉ makal̤-taṉ
tŏṇṭai am cĕṅ kaṉi vāy * nukarntāṉai ukantu ** avaṉpiṉ
kĕṇṭai ŏṇ kaṇ mil̤irak * kil̤ipol mizhaṟṟi naṭantu *
vaṇṭu amar kāṉal malkum * vayal āli pukuvarkŏlo?-2

Ragam

Dvajāvanti / த்வஜாவந்தி

Thalam

Ādi / ஆதி

Bhavam

Mother

Simple Translation

1209. Her mother says, “O, friend, he is a cowherd and he is naughty. When he entered our home and kissed my daughter on her mouth, as red as a thondai fruit, she was happy and walked behind him prattling like a parrot and her eyes shone like kendai fish. Will they go to beautiful Vayalāli (Thiruvāli) surrounded by the seashore swarming with bees?”

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion (Aṉvayam). Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
நங்காய்! பெண்ணே!; இவன் என் மகளைக்கொண்டுபோன இவன்; பண்டு ஆயன் முன்பு பெண்களைத் திருடும்; படிறன் இடையனாக இருந்தவன் இப்போது; புகுந்து என் என் வீட்டில் புகுந்து; மகள் தன் என் மகளின்; தொண்டை அம் அழகிய சிவந்த; செங்கனிவாய் அதரத்தை; நுகர்ந்தானை அனுபவித்த இவனை; உகந்து விரும்பி என் பெண்; கெண்டை ஒண் கெண்டைமீன் போன்ற; கண் மிளிர கண்கள் ஒளிவிட; கிளி போல் கிளிபோலே மழலை சொற்கள்; மிழற்றி பேசிக்கொண்டு; அவன் பின் நடந்து அவன் பின்னே நடந்துபோய்; வண்டு அமர் வண்டுகள் இருக்கும்; கானல் கடற்கரை; மல்கும் சோலைகள் சூழ்ந்த; வயல் வயல்களையுடைய; ஆலி புகுவர் கொலோ திருவாலி புகுந்தார்களோ
nangāy ŏh neighbourhood girls!; ivan this youthful person; paṇdu previously; āyan padiṛan was a thief in the cowherd clan (who would steal the cowherd girls); pugundhu entered (into my home physically); en magal̤ than my youthful daughter, her; thoṇdai sengani am vāy nugarndhān drank the nectar from her beautiful lips which are like reddish kŏvai fruit; ugandhu (my daughter) desiring him; keṇdai like keṇdai fish; oṇ kaṇ beautiful eyes; mil̤ira becoming expanded and shining (due to seeing something unseen); kil̤i pŏl like a parrot; mizhaṝi speaking some words; avan pin nadandhu walking behind him (both of them, who became united); vaṇdu amar filled with beetles; kānal malgum surrounded by seaside gardens; vayal having fertile fields; āli in thiruvāli; puguvar kolŏ they may reach or not!

PT 3.7.3

1210 அஞ்சுவன்வெஞ்சொல்நங்காய்! அரக்கர் குலப்பாவை தன்னை *
வெஞ்சினமூக்கரிந்த விறலோன் திறம்கேட்கில் * மெய்யே
பஞ்சியல்மெல்லடி எம்பணைத்தோளி பரக்கழிந்து *
வஞ்சியந்தண்பணைசூழ் வயலாலிபுகுவர்கொலோ?
1210 அஞ்சுவன் வெம் சொல் நங்காய் * அரக்கர் குலப் பாவை தன்னை *
வெம் சின மூக்கு அரிந்த * விறலோன் திறம் கேட்கில் மெய்யே **
பஞ்சிய மெல் அடி * எம் பணைத் தோளி பரக்கழிந்து *
வஞ்சி அம் தண் பணை சூழ் * வயல் ஆலி புகுவர்கொலோ? 3
1210 añcuvaṉ vĕm cŏl naṅkāy * arakkar kulap pāvai-taṉṉai *
vĕm ciṉa mūkku arinta * viṟaloṉ tiṟam keṭkil mĕyye **
pañciya mĕl aṭi * ĕm paṇait tol̤i parakkazhintu *
vañci am taṇ paṇai cūzh * vayal āli pukuvarkŏlo?-3

Ragam

Dvajāvanti / த்வஜாவந்தி

Thalam

Ādi / ஆதி

Bhavam

Mother

Simple Translation

1210. Her mother says, “O my friend, he is strong and fearless. I was afraid when I heard that he had cut off the nose of Surpanaha, a woman of the Rākshasa clan. My daughter with round arms and feet as soft as cotton went with him and people are gossiping about her. Will they go to Vayalāli (Thiruvāli) surrounded with cool beautiful fields and blooming vines?”

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion (Aṉvayam). Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
நங்காய்! பெண்ணே!; வெம் சொல் இது கொடுஞ்சொல்லாக இருந்தது; வெம் சின கடும் கோபத்தாலே; அரக்கர் அரக்கர்; குலப்பாவைதன்னை குலப் பெண்ணின்; மூக்கு அரிந்த மூக்கை அறுத்ததை; விறலோன் மிடுக்கையுடைய; திறம் கேட்கில் அவனைப் பற்றி கேட்கில்; மெய்யே அஞ்சுவன் உண்மையாக அஞ்சுகிறேன்; பஞ்சிய மெல் பஞ்சுபோல் மிருதுவான; அடி எம் அடியையுடையவளும்; பணை மூங்கில்போன்ற; தோளி தோள்களையும் உடைய என் மகள்; பரக்கழிந்து பெரும் பழிக்கு இடமாகி; வஞ்சி அம் வஞ்சிக் கொடிகளால்; தண் பணை சூழ் குளிர்ந்த நீர் நிலகள் சூழ்ந்த; வயல் வயல்களையுடைய; ஆலி திருவாலியிலே; புகுவர்கொலோ புகுந்திருப்பர்களோ
nangāy ŏh neighbourhood girl!; vem sol ṭhis is a very cruel word.; arakkar kulap pāvai thannai sūrpaṇakā who was celebrated as the only daughter of the whole rākshasa clan, her; vem sinam by the cruel anger; mūkku her nose; arindha severed; viṛalŏn the youthful person who is strong, his; thiṛam way; kĕtkil if heard now; meyyĕ anjuvan will fear thinking that it is happening now; (while this is the case); panju mel adi very tender feet, similar to cotton; em paṇaith thŏl̤i my daughter who has bamboo like shoulder; parakku azhindhu without humility (being together with him, both of them); vanji by collection of creepers; am beautiful; thaṇ paṇai by cool bamboo bushes; sūzh surrounded; vayal having fertile fields; āli in thiruvāli; puguvarkolŏ will they reach?

PT 3.7.4

1211 ஏது அவன் தொல்பிறப்பு? இளையவன் வளையூதி * மன்னர்
தூதுவனாயவனூர் சொலுவீர்கள்! சொலீர்அறியேன் *
மாதவன் தன்துணையாநடந்தாள் தடம்சூழ்புறவில் *
போதுவண்டாடுசெம்மல் புனலாலி புகுவர்கொலோ?
1211 ஏது அவன் தொல் பிறப்பு? * இளையவன் வளை ஊதி * மன்னர்
தூதுவன் ஆயவன் ஊர் * சொல்வீர்கள் சொலீர் அறியேன் **
மாதவன் தன் துணையா நடந்தாள் * தடம் சூழ் புறவில் *
போது வண்டு ஆடு செம்மல் * புனல் ஆலி புகுவர்கொலோ? 4
1211 etu avaṉ tŏl piṟappu? * il̤aiyavaṉ val̤ai ūti * maṉṉar
tūtuvaṉ āyavaṉ ūr * cŏlvīrkal̤ cŏlīr aṟiyeṉ **
mātavaṉ taṉ tuṇaiyā naṭantāl̤ * taṭam cūzh puṟavil *
potu vaṇṭu āṭu cĕmmal * puṉal āli pukuvarkŏlo?-4

Ragam

Dvajāvanti / த்வஜாவந்தி

Thalam

Ādi / ஆதி

Bhavam

Mother

Simple Translation

1211. Her mother says, “Was he ever born, that young one who went as a messenger blowing his conch to Duryodhanā for the Pāndavā kings? Tell me where he comes from. Tell me, I don’t know. She went with Madhavan, her beloved companion. Will they go to famous Vayalāli (Thiruvāli) surrounded with ponds where bees swarm around the flowers in the groves?”

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion (Aṉvayam). Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
ஏது அவன் தொல்பிறப்பு அவனுடைய குலம் எது; அறியேன் நான் அறியேன்; இளையவன் இளையவனாகவும்; வளை ஊதி சங்கை ஊதுமவனாயும்; மன்னர் பாண்டவர்களுக்கு; தூதுவன் தூது சென்றவனாயுமுள்ள; ஆயவன் ஊர் அந்த ஆயவன் ஊர் எது என்று; சொல்வீர்கள் சொல்லத் தெரிந்தால்; சொலீர் சொல்லுங்கள்; மாதவன் தன் மாதவனை தனக்கு; துணையா துணையாக கொண்டு; நடந்தாள் அவனோடு கூடச் சென்றாள்; தடம் சூழ் தடாகங்கள் சூழ்ந்த; புறவில் சோலைகளை உடையதும்; போது பூக்களிலே; வண்டு ஆடு வண்டுகள் களித்து ஆடும்; செம்மல் புனல் நீர்வளம் நிறைந்ததுமான; ஆலி திருவாலியிலே; புகுவர்கொலோ புகுந்திருப்பர்களோ
avan ṭhat youthful person-s; thol piṛappu previous birth; ĕdhu aṛiyĕn ī don-t know whether it is kshathriya birth or cowherd birth;; il̤aiyavan young person; val̤ai ūdhi (to cause fear in enemies) one who blew the conch; mannar for kings; thūdhuvanāyavan one who went as a messenger, his; ūr birth; solluvīrgal̤ īdhenṛu ŏh you who are able to know and tell!; solleer ẏou tell me truthfully and decisively;; mādhavan ṣriya:pathi (the lord of ṣrī mahālakshmi); than thuṇaiyāga nadandhāl̤ she walked, having him as her companion; vaṇdu beetles; thadam sūzh surrounded by ponds; puṛavil blossomed in the surroundings; semmal pŏdhu big flowers; ādu indulging (having entered to drink honey); punal āli in thiruvāli which has abundance of water; puguvarkolŏ will they enter?

PT 3.7.5

1212 தாய்எனையென்று இரங்காள் தடந்தோளிதனக்கமைந்த *
மாயனை, மாதவனை மதித்து என்னை யகன்ற இவள் *
வேயனதோள்விசிறிப் பெடையன்னமெனநடந்து *
போயின பூங்கொடியாள் புனலாலி புகுவர்கொலோ?
1212 தாய் எனை என்று இரங்காள் * தடந் தோளி தனக்கு அமைந்த *
மாயனை மாதவனை * மதித்து என்னை அகன்ற இவள் **
வேய் அன தோள் விசிறிப் * பெடை அன்னம் என நடந்து *
போயின பூங் கொடியாள் * புனல் ஆலி புகுவர்கொலோ? 5
1212 tāy ĕṉai ĕṉṟu iraṅkāl̤ * taṭan tol̤i taṉakku amainta *
māyaṉai mātavaṉai * matittu ĕṉṉai akaṉṟa ival̤ **
vey aṉa tol̤ viciṟip * pĕṭai aṉṉam ĕṉa naṭantu *
poyiṉa pūṅ kŏṭiyāl̤ * puṉal āli pukuvarkŏlo?-5

Ragam

Dvajāvanti / த்வஜாவந்தி

Thalam

Ādi / ஆதி

Bhavam

Mother

Simple Translation

1212. Her mother says, “My daughter with round arms and feet soft as cotton doesn’t worry about me, her mother. She fell in love with Madhavan, the Mayan, and left me. She is as beautiful as a creeper and walks like a female swan, swinging her round bamboo-like arms. Will they go to Punalāli? (Thiruvāli)”

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion (Aṉvayam). Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
தடந்தோளி பெரிய தோள்களையுடைய; இவள் என் மகள்; தாய் எனை என்று என்னை பெற்ற தாய் என்று; இரங்காள் இரக்கங்கொள்ளவில்லை; தனக்கு அமைந்த தனக்குத்; மாயனை தகுந்த மாயனை; மாதவனை மாதவனை மதித்து; மதித்து கொண்டாடிக் கொண்டு; என்னை என்னை விட்டு; அகன்ற நீங்கினவளாய்; வேய் அன மூங்கில் போன்ற; தோள் தோள்களை; விசிறி வீசிக்கொண்டு; பெடை அன்னம் என பெடை அன்னம் போல்; நடந்து போயின நடந்து சென்ற; பூங் கொடியாள் அழகிய கொடிபோன்ற என் மகளும் அவனும்; புனல் ஆலி நீர்வளம்மிகுந்த திருவாலியிலே; புகுவர்கொலோ புகுந்திருப்பர்களோ
thadam thŏl̤i ival̤ ṣhe who is having huge shoulders; enai me who is having mental suffering; thāy enṛu irangāl̤ not showing her mercy considering that ī am her mother.; thanakku amaindha one who is having physical beauty etc matching her qualities such as beauty etc; māyanai mādhavanai the amaśing ṣriya:pathi; madhiththu considering to be the refuge; ennai aganṛu leaving me alone; vĕyana thŏl̤ visiṛi swaying her bamboo like shoulders; pedai annam ena like a female swan; nadandhu pŏyina walking behind him; pūm kodiyāl̤ my daughter who is having beautiful creeper like waist (and him); punal āli in thiruvāli which has abundant water; puguvarkolŏ will they enter?

PT 3.7.6

1213 எந்துணையென்றுஎடுத்தேற்கு இறையேனும் இரங்கிற்றிலள் *
தன்துணையாய என்தன் தனிமைக்கும் இரங்கிற்றிலள் *
வன்துணைவானவர்க்காய் வரம்செற்று * அரங்கத்து உறையும்
இன்துணைவன்னொடும்போய் எழிலாலி புகுவர்கொலோ?. (2)
1213 என் துணை என்று எடுத்தேற்கு * இறையேனும் இரங்கிற்றிலள் *
தன் துணை ஆய என் தன் * தனிமைக்கும் இரங்கிற்றிலள் **
வன் துணை வானவர்க்கு ஆய் * வரம் செற்று அரங்கத்து உறையும் *
இன் துணைவனொடும் போய் * எழில் ஆலி புகுவர்கொலோ? 6
1213 ĕṉ tuṇai ĕṉṟu ĕṭutteṟku * iṟaiyeṉum iraṅkiṟṟilal̤ *
taṉ tuṇai āya ĕṉ-taṉ * taṉimaikkum iraṅkiṟṟilal̤ **
vaṉ tuṇai vāṉavarkku āy * varam cĕṟṟu araṅkattu uṟaiyum *
iṉ tuṇaivaṉŏṭum poy * ĕzhil āli pukuvarkŏlo?-6

Ragam

Dvajāvanti / த்வஜாவந்தி

Thalam

Ādi / ஆதி

Bhavam

Mother

Simple Translation

1213. Her mother says, “I gave birth to her and thought she would be my help, but she left me without thinking that I would be lonely. The god of Thiruvarangam who gave a boon to the gods saying that he would help them went to Lankā and destroyed the Rākshasas. Will she go to beautiful Thiruvāli with her sweet companion?

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion (Aṉvayam). Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
என் துணை என்று எனக்குத் துணை என்று; எடுத்தேற்கு பெற்று வளர்த்த என்னைப் பற்றி இவளுக்கு; இறையேனும் கொஞ்சமும்; இரங்கிற்றிலள் இரக்கமில்லை; தன் துணை ஆய இதுவரையில் தனக்கு உதவியாயிருந்த; என்தன் தனிமைக்கும் நான் தனியே இருப்பதைப் ப்ற்றியும்; இரங்கிற்றிலள் இரக்கம் கொள்ளவில்லை; வானவர்க்கு தேவர்களுக்கு; வன் துணை ஆய் சிறந்த துணையாய்; வரம் செற்று அரக்கர்களின் பலத்தை அடக்கி; அரங்கத்து உறையும் ஸ்ரீரங்கத்திலிருக்கும்; இன் துணைவனொடும் நல்ல துணைவனான திருமாலோடே; போய் சென்று இருவரும்; எழில் ஆலி அழகிய திருவாலியில்; புகுவர்கொலோ புகுந்திருப்பர்களோ
en thuṇai enṛu considering as -my companion-; eduththĕṛku for me who gave birth; iṛaiyĕnum even a little bit; irangiṝilal̤ she did not have mercy;; than thuṇai āya her companion; endhan thanimaikkum for me being alone; irangiṝilal̤ she did not have mercy;; vānavargal̤ for dhĕvathās; van thuṇaiyāy going as strong companion; varam seṝu subduing the strength received by the demons of lankā; arangaththu uṛaiyum residing eternally in kŏyil (ṣrīrangam); in thuṇaivanodum pŏy went with her favourite companion; ezhil āli in beautiful thiruvāli; puguvarkolŏ will they enter?

PT 3.7.7

1214 அன்னையும் அத்தனும் என்று அடியோமுக்கு இரங்கிற்றிலள் *
பின்னைதன் கா தலன்தன் பெருந்தோள்நலம் பேணினளால் *
மின்னையும் வஞ்சியையும் வென்றிலங்கும் இடையாள் நடந்து *
புன்னையும் அன்னமும் சூழ் புனலாலி புகுவர்கொலோ?
1214 அன்னையும் அத்தனும் என்று * அடியோமுக்கு இரங்கிற்றிலள் *
பின்னை தன் காதலன் தன் * பெருந் தோள் நலம் பேணினளால் **
மின்னையும் வஞ்சியையும் * வென்று இலங்கும் இடையாள் நடந்து *
புன்னையும் அன்னமும் சூழ் * புனல் ஆலி புகுவர்கொலோ? 7
1214 aṉṉaiyum attaṉum ĕṉṟu * aṭiyomukku iraṅkiṟṟilal̤ *
piṉṉai-taṉ kātalaṉ-taṉ * pĕrun tol̤ nalam peṇiṉal̤āl **
miṉṉaiyum vañciyaiyum * vĕṉṟu ilaṅkum iṭaiyāl̤ naṭantu *
puṉṉaiyum aṉṉamum cūzh * puṉal āli pukuvarkŏlo?-7

Ragam

Dvajāvanti / த்வஜாவந்தி

Thalam

Ādi / ஆதி

Bhavam

Mother

Simple Translation

1214. Her mother says, “She didn’t worry that we are her father and mother. She wished only to embrace the ample arms of her beloved. Not even lightning or a vine can be compared to her waist. She followed him. Will they go to Punalāli (Thiruvāli) surrounded with punnai groves and swans?”

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion (Aṉvayam). Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
மின்னையும் மின்னற் கொடியையும்; வஞ்சியையும் வஞ்சிக் கொடியையும்; வென்று வென்றவளாய்; இலங்கும் நுண்ணிய; இடையாள் இடை உடைய என் மகள்; அன்னையும் அத்தனும் என்று தாய் தகப்பனென்று கூட; அடியோமுக்கு எங்கள் விஷயத்தில்; இரங்கிற்றிலள் இரக்கம் காட்டவில்லை; பின்னை தன் காதலன் தன் தன் காதலனின்; பெருந் தோள் பெரும் தோள்களோடே; நலம் அணைந்து பெறும்; பேணினளால் ஸுகத்தையே விரும்பின வளாய்; நடந்து நடந்து சென்று; புன்னையும் புன்னை மரங்களும்; அன்னமும் சூழ் அன்னப் பறவைகளும் சூழ்ந்த; புனல் ஆலி நீர்வளம் நிறந்த திருவாலியிலே; புகுவர்கொலோ புகுந்திருப்பர்களோ
annaiyum ṃother; aththanum and father; enṛu considering that; adiyŏmukku in our matters; irangiṝilal̤ she is not showing mercy;; pinnai than for nappinnaip pirātti; kādhalan than beloved-s; perum thŏl̤ nalam the joy of embracing his great shoulders; pĕṇinal̤ desiring; minnaiyum vanjiyaiyum lightning and vanji creeper; venṛu defeat; ilangum shining; idaiyāl̤ my daughter who is having waist region; nadandhu walked and went; punnaiyum punnai gardens; annamum groups of swans; sūzh surrounded; punal āli in thiruvāli which has abundant water; puguvarkolŏ Will they enter?

PT 3.7.8

1215 முற்றிலும் பைங்கிளியும் பந்தும் ஊசலும், பேசுகின்ற *
சிற்றில்மென்பூவையும்விட்டகன்ற செழுங்கோதை தன்னைப் *
பெற்றிலேன் முற்றிழையை, பிறப்பிலிபின்னே நடந்து *
மற்றெல்லாம் கைதொழப்போய் வயலாலி புகுவர்கொலோ?
1215 முற்றிலும் பைங் கிளியும் * பந்தும் ஊசலும் பேசுகின்ற *
சிற்றில் மென் பூவையும் * விட்டு அகன்ற செழுங் கோதை தன்னைப் **
பெற்றிலேன் முற்று இழையை * பிறப்பிலி பின்னே நடந்து *
மற்று எல்லாம் கைதொழப் போய் * வயல் ஆலி புகுவர்கொலோ? 8
1215 muṟṟilum paiṅ kil̤iyum * pantum ūcalum pecukiṉṟa *
ciṟṟil mĕṉ pūvaiyum * viṭṭu akaṉṟa cĕzhuṅ kotai-taṉṉaip **
pĕṟṟileṉ muṟṟu izhaiyai * piṟappili piṉṉe naṭantu *
maṟṟu ĕllām kaitŏzhap poy * vayal āli pukuvarkŏlo?-8

Ragam

Dvajāvanti / த்வஜாவந்தி

Thalam

Ādi / ஆதி

Bhavam

Mother

Simple Translation

1215. Her mother says, “My daughter, soft as a flower garland ornamented with precious jewels, left her play house, green parrot, ball, swing and soft-speaking puvai bird and went away. Did I not give birth to her? She went behind him who has no beginning and is worshiped by all. Will they go to Vayalāli (Thiruvāli)?”

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion (Aṉvayam). Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
முற்றிலும் சிறுமுறத்தையும்; பைங் கிளியும் பச்சைக் கிளியையும்; பந்தும் ஊசலும் பந்தையும் ஊஞ்சலையும்; சிற்றில் பேசுகின்ற சிறிய கூட்டிலிருந்து பேசுகிற; மென் பூவையும் மெல்லிய பறவையையும்; விட்டு அகன்ற விட்டு வெளியேறின; செழும் அழகிய; கோதைதன்னை பூமாலை போன்றவளும்; முற்று நிறைந்த; இழையை ஆபரணங்கள் அணிந்தவளுமான என் மகளை; பெற்றிலேன் நான் கண்ணால் காணப்பெற்றிலேன்; பிறப்பிலி நித்யனான எம்பெருமான்; பின்னே நடந்து பின்னே நடந்துசென்று; மற்று எல்லாம் எல்லோரும்; கை தொழப் போய் கண்டு ஸேவிக்கும் படியாக; வயல் ஆலி வயல்களையுடைய திருவாலியில்; புகுவர்கொலோ புகுந்திருப்பர்களோ
muṝilum winnow; paingil̤iyum green parrot; pandhum ball; ūsalum swing; siṝil from a small nest; pĕsuginṛa speaking; men pūvaiyum tender natured myna bird; vittu aganṛa left these and went away; sezhum kŏdhai thannai one who is like a beautiful garland; muṝizhaiyai my daughter who is fully decorated with ornaments; peṝilĕn ī did not get to see her;; maṝellām kai thozha to be worshipped by everyone other than her; piṛappili pinnĕ behind the one who is opposite to all defects; nadandhu pŏy walked; vayal āli in thiruvāli which has abundance of crops; puguvarkolŏ will they enter?

PT 3.7.9

1216 காவியங்கண்ணி எண்ணில் கடிமாமலர்ப்பாவை யொப்பாள் *
பாவியேன் பெற்றமையால் பணைத்தோளிபரக்கழிந்து *
தூவிசேரன்னமன்னநடையாள் நெடுமாலொடும் போய் *
வாவியந்தண்பணைசூழ் வயலாலி புகுவர்கொலோ?
1216 காவி அம் கண்ணி எண்ணில் * கடி மா மலர்ப் பாவை ஒப்பாள் *
பாவியேன் பெற்றமையால் * பணைத் தோளி பரக்கழிந்து **
தூவி சேர் அன்னம் அன்ன நடையாள் * நெடுமாலொடும் போய் *
வாவி அம் தண் பணை சூழ் * வயல் ஆலி புகுவர்கொலோ? 9
1216 kāvi am kaṇṇi ĕṇṇil * kaṭi mā malarp pāvai ŏppāl̤ *
pāviyeṉ pĕṟṟamaiyāl * paṇait tol̤i parakkazhintu **
tūvi cer aṉṉam aṉṉa naṭaiyāl̤ * nĕṭumālŏṭum poy *
vāvi am taṇ paṇai cūzh * vayal āli pukuvarkŏlo?-9

Ragam

Dvajāvanti / த்வஜாவந்தி

Thalam

Ādi / ஆதி

Bhavam

Mother

Simple Translation

1216. Her mother says, “She is as lovely as Lakshmi on a fragrant lotus and her eyes are as beautiful as kāvi flowers. She has round bamboo-like arms and walks like a white-feathered swan. She went with Nedumāl. Will the village gossip about her? Will they go to Vayalāli (Thiruvāli) surrounded with rich fields and cool ponds? Is she doing all this because I am her poor mother and gave birth to her?”

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion (Aṉvayam). Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
காவி அம் காவி போன்று அழகிய; கண்ணி கண்களையுடையவளும்; எண்ணில் எண்ணிப்பார்க்கையில்; கடி மா மலர்ப் பாவை மஹாலக்ஷ்மிக்கு; ஒப்பாள் ஒப்பாகச் சொல்லத் தகுந்தவளும்; தூவி சேர் அன்னம் இறகையுடைய அன்னப்பேடையின்; அன்ன நடைபோன்ற; நடையாள் நடையையுடையவளும்; பணை மூங்கில் போன்ற; தோளி தோள்களையுடையவளுமான என் மகள்; பாவியேன் பாவியான என்வயிற்றில்; பெற்றமையால் பிறந்த குற்றத்தினால்; பரக்கழிந்து பெரும்பழிக்கு இலக்காகி; நெடுமாலொடும் எம்பெருமானுடன்; போய் கூடச் சென்று; வாவி அம் தண் அழகிய குளிர்ந்த; பணை சூழ் தடாகங்கள் சூழ்ந்த; வயல் ஆலி வயல்களையுடைய திருவாலியில்; புகுவர்கொலோ புகுந்திருப்பர்களோ
kāvi am kaṇṇi having beautiful eyes resembling kāvi flower; eṇṇil if we analyse; kadi mā malar living in very fragrant lotus flower; pāvai oppāl̤ one who is matching periya pirāttiyār; thūvi sĕr having wings; annam anna matching a swan-s; nadaiyāl̤ having the gait; paṇaith thŏl̤i my daughter who is having bamboo like shoulder; pāviyĕn me, the sinner; peṝamaiyāl due to the defect of giving birth to her; parakku azhindhu without even a little bit of shame; nedumālodum with the one who has great love; pŏy going alone; vāvi ponds; thaṇ ambaṇai cool water bodies; sūzh surrounded fully; vayal having abundant crops; āli in thiruvāli; puguvarkolŏ will they enter?

PT 3.7.10

1217 தாய்மனம்நின்றிரங்கத்தனியே நெடுமால்துணையா *
போயினபூங்கொடியாள் புனலாலி புகுவரென்று *
காய்சினவேல்கலியன் ஒலிசெய்தமிழ்மாலைபத்தும் *
மேவியநெஞ்சுடையார் தஞ்சமாவதுவிண்ணுலகே. (2)
1217 ## தாய் மனம் நின்று இரங்கத் * தனியே நெடுமால் துணையா *
போயின பூங் கொடியாள் * புனல் ஆலி புகுவர் என்று **
காய் சின வேல் கலியன் * ஒலிசெய் தமிழ் மாலை பத்தும் *
மேவிய நெஞ்சு உடையார் * தஞ்சம் ஆவது விண் உலகே 10
1217 ## tāy maṉam niṉṟu iraṅkat * taṉiye nĕṭumāl tuṇaiyā *
poyiṉa pūṅ kŏṭiyāl̤ * puṉal āli pukuvar ĕṉṟu **
kāy ciṉa vel kaliyaṉ * ŏlicĕy tamizh-mālai pattum *
meviya nĕñcu uṭaiyār * tañcam āvatu viṇ ulake-10

Ragam

Dvajāvanti / த்வஜாவந்தி

Thalam

Ādi / ஆதி

Bhavam

Mother

Simple Translation

1217. Kaliyan who carries a spear and fights angrily with his enemies composed ten Tamil pāsurams about how a beautiful vine-like girl went alone, taking Nedumal of Thiruvāli as her companion and leaving her mother to worry about her. If devotees learn and recite these pāsurams, they will reach the spiritual world and be with the gods.

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion (Aṉvayam). Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
தாய் மனம் தாயானவள்; நின்று இரங்க மனமிரங்கி நிற்க; தனியே தாயினிடம் சொல்லாமல் தன் இஷ்டப்படியே; நெடு மால் திருமாலை; துணையா துணையாகக் கொண்டு; போயின போன; பூங் கொடியாள் கொடிபோன்ற என் மகளும் அவனும்; புனல் ஆலி நீர்வளம் மிக்க திருவாலியிலே; புகுவர் சென்று சேர்ந்திருப்பர்களோ; என்று என்று எண்ணியதை; காய் சின வேல் கோபமும் வேலுமுடைய; கலியன் ஒலி செய் திருமங்கையாழ்வார் அருளிச்செய்த; தமிழ் மாலை பத்தும் இத்தமிழ்ப் பாமாலை பத்தையும்; மேவிய கற்க விரும்பும்; நெஞ்சுடையார் மனமுடையவர்கள்; விண் உலகே பரமபதத்தையே; தஞ்சம் ஆவது தஞ்சமாக அடைவர்
thāy mother; ninṛu manam iranga while suffering and having her stomach burn; nedumāl one who is bewildered due to more love than she; thuṇaiyā as company; thaniyĕ pŏyina one who went without the company of anyone like her; pūm kodiyāl̤ my daughter who is like a beautiful creeper (and he, both of them); punal āli in thiruvāli which has abundance of water; puguvar enṛu -will they enter or not?-; kāy sinam great anger towards enemies; vĕl and having the spear to destroy such enemies; kaliyan āzhvār; oli sey mercifully spoke; thamizh mālai paththum the ten pāsurams, each of which is a garland; mĕviya nenju udaiyār for those who can recite with heart-s involvement; viṇ ulagu the leader of the residents of paramapadham; thanjamāvadhu is the protector (he will grant them paramapadham).