1159 காயோடுநீடுகனியுண்டு, வீசு
கடுங்கால்நுகர்ந்து, நெடுங்காலம் * ஐந்து
தீயொடுநின்றுதவம்செய்யவேண்டா
திருமார்பனைச்சிந்தையுள்வைத்துமென்பீர் *
வாயோதுவேதம்மலிகின்றதொல்சீர்
மறையாளர்நாளும்முறையால்வளர்த்த *
தீயோங்கவோங்கப்புகழோங்கு தில்லைத்
திருச்சித்ரகூடம்சென்றுசேர்மின்களே.