They Shall Live for a Long Time at the Feet of the Supreme Lord
பரமன் அடியில் பலகாலம் வாழ்வர்
1167 சீரார்பொழில்சூழ்ந்துஅழகாய தில்லைத்
திருசித்ரகூடத்துறைசெங்கண்மாலுக்கு *
ஆராதஉள்ளத்தவர்கேட்டுஉவப்ப
அலைநீருலகுக்கு அருளேபுரியும் *
காரார்புயற்கைக்கலிகன்றி குன்றாவொலிமாலை
ஒரொன்பதோடுஒன்றும்வல்லார் *
பாராருலகம்அளந்தானடிக்கீழ்ப்
பலகாலம்நிற்கும்படிவாழ்வர்தாமே. (2)