Citrakūṭa, Where Even Parrots Chant the Sound of the Vedas
கிளிகளும் வேதவொலி செய்யும் சித்திரகூடம்
1163 நெய்வாயழலம்புதுரந்து முந்நீர்
துணியப்பணிகொண்டுஅணியார்ந்து * இலங்கு
மையார்மணிவண்ணனைஎண்ணி நுந்தம்
மனத்தேஇருத்தும்படிவாழவல்லீர்! *
அவ்வாய்இளமங்கையர் பேசவும்தான்
அருமாமறையந்தணர்சிந்தைபுக *
செவ்வாய்க்கிளிநான்மறைபாடு தில்லைத்
திருச்சித்ரகூடம்சென்றுசேர்மின்களே.