To Be Rid of Sin, Go to Citrakūṭa
பாவம் நீங்கச் சித்திரகூடம் செல்லுங்கள்
1166 செருநீலவேற்கண்மடவார்திறத்துச்
சினத்தோடுநின்றுமனத்தால்வளர்க்கும் *
அருநீலபாவம்அகலப் புகழ்சேர்
அமரர்க்கும்எய்தாத அண்டத்துஇருப்பீர்! *
பெருநீர்நிவாவுந்திமுத்தங்கொணர்ந்து
எங்கும்வித்தும்வயலுள்கயல்பாய்ந்துஉகள *
திருநீலம்நின்றுதிகழ்கின்ற தில்லைத்
திருச்சித்ரகூடம்சென்றுசேர்மின்களே.