Holy Citrakūṭa is Surrounded by Sacred Waters
புண்ணிய தீர்த்தங்கள் சூழ்ந்தது திருச்சித்திரகூடம்
1164 மௌவல்குழலாய்ச்சிமென்தோள்நயந்து
மகரம்சுழலச்சுழல்நீர்பயந்த *
தெய்வத்திருமாமலர்மங்கைதங்கு
திருமார்பனைச்சிந்தையுள்வைத்துமென்பீர்! *
கௌவைக்களிற்றின்மருப்பும் பொருப்பில்
கமழ்சந்தும்உந்திநிவாவலங்கொள் *
தெய்வப்புனல்சூழ்ந்து அழகாய தில்லைத்
திருச்சித்ரகூடம்சென்றுசேர்மின்களே.