PT 3.2.8

Citrakūṭa, Worshipped by the Three Thousand Vedic Scholars

மூவாயிரம் மறையாளர் வணங்கும் சித்திரகூடம்

1165 மாவாயினங்கம்மதியாதுகீறி

மழைமாமுதுகுன்றுஎடுத்து * ஆயர்தங்கள்

கோவாய்நிரைமேய்த்துஉலகுண்டமாயன்

குரைமாகழல்கூடும் குறிப்புடையீர்! *

மூவாயிரநான்மறையாளர் நாளும்

முறையால்வணங்க, அணங்காயசோதி *

தேவாதிதேவன்திகழ்கின்ற தில்லைத்

திருச்சித்ரகூடம்சென்றுசேர்மின்களே.

Text size