Your browser does not support the audio element.
audio
1148 இருந்தண்மாநிலம்ஏனமதாய்
வளைமருப்பினில் அகத்தொடுக்கி *
கருந்தண்மாகடல்கண்துயின்றவனிடம்
கமலநன்மலர்த்தேறல்
அருந்தி * இன்னிசைமுரன்றெழும்அளிகுலம்பொதுளி
அம்பொழிலூடே *
செருந்திநாண்மலர்சென்றணைந்துஉழிதரு
திருவயிந்திரபுரமே. (2)
1149 மின்னும்ஆழியங்கையவன்
செய்யவள்உறைதருதிருமார்பன் *
பன்னுநான்மறைப்பலபொருளாகிய
பரனிடம், வரைச்சாரல் *
பின்னும்மாதவிப்பந்தலில்
பெடைவரப்பிணியவிழ்கமலத்து *
தென்னவென்றுவண்டுஇன்னிசைமுரல்தரு
திருவயிந்திரபுரமே.
1150 வையமேழுஉண்டுஆலிலை
வைகியமாயவன் * அடியவர்க்கு
மெய்யனாகியதெய்வநாயகனிடம்
மெய்தகுவரைச்சாரல் *
மொய்கொள்மாதவிசண்பகம்முயங்கிய
முல்லையங்கொடியாட *
செய்யதாமரைச்செழும்பணைதிகழ்தரு
1151 மாறுகொண்டுடன்றெதிர்ந்தவல்லவுணன்தன்
மார்பகம்இருபிளவா *
கூறுகொண்டுஅவன்குலமகற்கு
இன்னருள்கொடுத்தவனிடம் * மிடைந்து
சாறுகொண்டமென்கரும்பிளங்கழை
தகைவிசும்புறமணிநீழல் *
சேறுகொண்டதண்பழனமதெழில்திகழ்
1152 ஆங்குமாவலிவேள்வியில்இரந்துசென்று
அகலிடமளந்து * ஆயர்
பூங்கொடிக்குஇனவிடைபொருதவனிடம்
பொன்மலர்திகழ் * வேங்கை
கோங்குசெண்பகக்கொம்பினில்
குதிகொடுகுரக்கினம்இரைத்தோடி *
தேன்கலந்தண்பலங்கனிநுகர்த்தரு
1153 கூனுலாவியமடந்தைதன்கொடுஞ்சொலின்திறத்து
இளங்கொடியோடும் *
கானுலாவியகருமுகில்திருநிறத்தவனிடம்
கவினாரும் *
வானு லாவியமதிதவழ்மால்வரை
மாமதிள்புடைசூழ *
தேனுலாவியசெழும்பொழில்தழுவிய
1154 மின்னின்நுண்ணிடைமடக்கொடிகாரணம்
விலங்கலின்மிசைஇலங்கை
மன்னன் * நீண்முடிபொடிசெய்தமைந்தனதிடம்
மணிவரைநீழல் *
அன்னமாமலரரவிந்தத் தமளியில்
பெடையொடும்இனிதமர *
செந்நெலார்க்கவரிக்குலைவீசு தண்
1155 விரைகமழ்ந்தமென்கருங்குழல்காரணம்
வில்லிறுத்து அடல்மழைக்கு *
நிரைக லங்கிடவரைகுடையெடுத்தவன்
நிலவியஇடம், தடமார் *
வரைவளம்திகழ்மதகரிமருப்பொடு
மலைவளரகிலுந்தி *
திரைகொணர்ந்தணைசெழுநதிவயல்புகு
1156 வேல்கொள்கைத்தலத்துஅரசர்வெம்போரினில்
விசயனுக்காய், மணித்தேர் *
கோல்கொள்கைத்தலத்துஎந்தைபெம்மானிடம்
குலவுதண்வரைச்சாரல் *
கால்கொள்கண்கொடிக்கையெழக்
கமுகிளம்பாளைகள்கமழ்சாரல் *
சேல்கள்பாய்தருசெழுநதிவயல்புகு
1157 மூவராகிய ஒருவனை
மூவுலகுண்டுஉமிழ்ந்துஅளந்தானை *
தேவர்தானவர்சென்றுசென்றிறைஞ்சத்
தண்திருவயிந்திரபுரத்து *
மேவுசோதியை வேல்வலவன்
கலிகன்றிவிரித்துரைத்த *
பாவுதண்தமிழ்பத்திவைபாடிடப்
பாவங்கள்பயிலாவே. (2)