Chapter 10

Thirunāngur Arimeyavinnagaram - (திரு மடந்தை)

திருநாங்கூர் அரிமேயவிண்ணகரம்
Thirunāngur Arimeyavinnagaram - (திரு மடந்தை)
Introduction & Details
Recitation
Translation

PT 3.10.1

1238 திருமடந்தைமண்மடந்தை இருபாலும்திகழத்

தீவினைகள்போயகலஅடியவர்கட்குஎன்றும்

அருள்நடந்து * இவ்வேழுலகத்தவர்ப்பணிய வானோர்

அமர்ந்தேத்தஇருந்தஇடம் * பெரும்புகழ்வேதியர் வாழ்

தரும்இடங்கள்மலர்கள்மிகுகைதைகள்செங்கழுநீர்

தாமரைகள்தடங்கள்தொறும் இடங்கள்தொறும் திகழ *

அருவிடங்கள்பொழில்தழுவி எழில்திகழும்நாங்கூர்

அரிமேயவிண்ணகரம்வணங்குமடநெஞ்சே! (2)

PT 3.10.2

1239 வென்றிமிகுநரகனுரமது அழியவிசிறும்

விறலாழித்தடக்கையன், விண்ணவர்கட்கு * அன்று

குன்றுகொடுகுரைகடலைக்கடைந்துஅமுதமளிக்கும்

குருமணிஎன்னாரமுதம்குலவியுறைகோயில் *

என்றுமிகுபெருஞ்செல்வத்து எழில்விளங்கு மறையோர்

ஏழிசையும்கேள்விகளும்இயன்றபெருங் குணத்தோர் *

அன்றுஉலகம்படைத்தவனையனையவர்கள்நாங்கூர்

அரிமேயவிண்ணகரம்வணங்குமடநெஞ்சே!

PT 3.10.3

1240 உம்பரும்இவ்வேழுலகும்ஏழ்கடலும்எல்லாம்

உண்டபிரான் அண்டர்கள்முன்கண்டு மகிழ்வெய்த *

கும்பமிகுமதயானைமருப்பொசித்துக் கஞ்சன்

குஞ்சிபிடித்தடித்தபிரான்கோயில் * மருங் கெங்கும்

பைம்பொனொடுவெண்முத்தம்பலபுன்னைகாட்ட

பலங்கனிகள்தேன்காட்ட, படவரவேரல்குல் *

அம்பனையகண்மடவார்மகிழ்வெய்து நாங்கூர்

அரிமேயவிண்ணகரம்வணங்குமடநெஞ்சே!

PT 3.10.4

1241 ஓடாதவாளரியின்உருவமதுகொண்டு அன்று

உலப்பில்மிகுபெருவரத்தஇரணியனைப்பற்றி *

வாடாதவள்ளுகிரால்பிளந்து, அவன்தன்மகனுக்கு

அருள்செய்தான்வாழும்இடம், மல்லிகை செங்கழுநீர் *

சேடேறுமலர்ச்செருந்திசெழுங்கமுகம்பாளை

செண்பகங்கள்மணநாறும்வண்பொழிலினூடே *

ஆடேறுவயலாலைப்புகைகமழு நாங்கூர்

அரிமேயவிண்ணகரம்வணங்குமடநெஞ்சே!

PT 3.10.5

1242 கண்டவர்தம்மனம்மகிழமாவலிதன்வேள்விக்

களவில்மிகுசிறுகுறளாய்மூவடியென்றுஇரந்திட்டு *

அண்டமும் இவ்வலைகடலும்அவனிகளுமெல்லாம்

அளந்தபிரான்அமரும்இடம், வளங்கொள் பொழிலயலே *

அண்டமுறுமுழவொலியும்வண்டினங்களொலியும்

அருமறையினொலியும்மடவார்சிலம்பினொலியும் *

அண்டமுறும்அலைகடலினொலிதிகழும் நாங்கூர்

அரிமேயவிண்ணகரம்வணங்குமடநெஞ்சே!

PT 3.10.6

1243 வாள்நெடுங்கண்மலர்க்கூந்தல்மைதிலிக்கா இலங்கை

மன்னன்முடியொருபதும்தோளிருபதும்போயுதிர *

தாள்நெடுந்திண்சிலைவளைத்ததயரதன்சேய் என்தன்

தனிச்சரண் வானவர்க்கரசுகருதுமிடம், தடமார் *

சேணிடங்கொள்மலர்க்கமலம்சேல்கயல்கள்வாளை

செந்நெலொடுமடுத்தரியஉதிர்ந்தசெழுமுத்தம் *

வாணெடுங்கண்கடைசியர்கள்வாருமணி நாங்கூர்

அரிமேயவிண்ணகரம்வணங்குமடநெஞ்சே!

PT 3.10.7

1244 தீமனத்தான்கஞ்சனதுவஞ்சனையில்திரியும்

தேனுகனும்பூதனைதனாருயிரும்செகுத்தான் *

காமனைத்தான்பயந்தகருமேனியுடையம்மான்

கருதுமிடம், பொருதுபுனல்துறைதுறைமுத்து உந்தி *

நாமனத்தால்மந்திரங்கள்நால்வேதம் ஐந்து

வேள்வியோடுஆறங்கம்நவின்றுகலைபயின்று * அங்கு

ஆமனத்துமறையவர்கள்பயிலுமணி நாங்கூர்

அரிமேயவிண்ணகரம்வணங்குமடநெஞ்சே!

PT 3.10.8

1245 கன்றதனால்விளவெறிந்துகனியுதிர்த்தகாளை

காமருசீர்முகில்வண்ணன், காலிகள்முன்காப்பான் *

குன்றதனால்மழைதடுத்துக்குடமாடுகூத்தன்

குலவும்இடம், கொடிமதிள்கள்மாளிகை கோபுரங்கள் *

துன்றுமணிமண்டபங்கள்சாலைகள் தூமறையோர்

தொக்குஈண்டித்தொழுதியொடுமிகப்பயிலும் சோலை *

அன்றுஅலர்வாய்மதுவுண்டுஅங்குஅளிமுரலும் நாங்கூர்

அரிமேயவிண்ணகரம்வணங்குமடநெஞ்சே!

PT 3.10.9

1246 வஞ்சனையால்வந்தவள்தன்உயிருண்டு வாய்த்த

தயிருண்டுவெண்ணெயமுதுண்டு * வலிமிக்க

கஞ்சனுயிரதுவுண்டுஇவ்வுலகுண்டகாளை

கருதுமிடம், காவிரிசந்துஅகில்கனகம்உந்தி *

மஞ்சுலவுபொழிலூடும்வயலூடும்வந்து

வளங்கொடுப்பமாமறையோர்மாமலர்கள் தூவி *

அஞ்சலித்துஅங்குஅரிசரணென்று இறைஞ்சுமணி நாங்கூர்

அரிமேயவிண்ணகரம்வணங்குமடநெஞ்சே!

PT 3.10.10

1247 சென்றுசினவிடையேழும்படஅடர்த்துப் பின்னை

செவ்வித்தோள்புணர்ந்துஉகந்ததிருமால்தன் கோயில் *

அன்றுஅயனும்அரன்சேயும்அனையவர்கள் நாங்கூர்

அரிமேயவிண்ணகரம் அமர்ந்தசெழுங்குன்றை *

கன்றிநெடுவேல்வலவன்மங்கையர்தம்கோமான்

கலிகன்றியொலிமாலை ஐந்தினொடுமூன்றும் *

ஒன்றினொடுமொன்றும் இவைகற்றுவல்லார் உலகத்து

உத்தமர்கட்குஉத்தமராய்உம்பரும்ஆவர்களே. (2)