
1228 சலங்கொண்டஇரணியனது அகல்மார்வம் கீண்டு
தடங்கடலைக்கடைந்த அமுதம்கொண்டுகந்தகாளை *
நலங்கொண்டகருமுகில்போல் திருமேனி அம்மான்
நாள்தோறும்மகிழ்ந்து இனிதுமருவியுறை கோயில் *
சலங்கொண்டுமலர்சொரியும் மல்லிகைஒண்செருந்தி
சண்பகங்கள்மணநாறும் வண்பொழிலினூடே *
வலங்கொண்டு கயலோடிவிளையாடு நாங்கூர்
வைகுந்தவிண்ணகரம் வணங்குமடநெஞ்சே! (2)
1229 திண்ணியதோரரியுருவாய்த்திசையனைத்தும் நடுங்கத்
தேவரொடுதானவர்கள் திசைப்ப * இரணியனை
நண்ணிஅவன்மார்வகலத்து உகிர்மடுத்தநாதன்
நாள்தோறும்மகிழ்ந்து இனிதுமருவியுறை கோயில் *
எண்ணில்மிகுபெருஞ்செல்வத்து எழில்விளங்கு மறையும்
ஏழிசையும்கேள்விகளும் இயன்ற பெருங்குணத்தோர் *
மண்ணில்மிகுமறையவர்கள் மலிவெய்து நாங்கூர்
வைகுந்தவிண்ணகரம் வணங்குமடநெஞ்சே!
1230 அண்டமும் இவ்வலைகடலும் அவனிகளுமெல்லாம்
அமுதுசெய்ததிருவயிற்றன் அரன்கொண்டுதிரியும் *
முண்டமதுநிறைத்து அவன்கண்சாபமதுநீக்கும்
முதல்வனவன்மகிழ்ந்து இனிதுமருவியுறை கோயில் *
எண்திசையும்பெருஞ்செந்நல் இளந்தெங்குகதலி
இலைக்கொடிஒண்குலைக்கமுகோடு இசலிவளம் சொரிய *
வண்டுபலஇசைபாடமயிலாலு நாங்கூர்
வைகுந்த விண்ணகரம் வணங்குமடநெஞ்சே!
1231 கலையிலங்கும் அகலல்குல் அரக்கர்க்குலக்கொடியைக்
காதொடுமூக்குடன்அரியக்கதறிஅவளோடி *
தலையில்அங்கைவைத்து மலையிலங்கைபுகச்செய்த
தடந்தோளன்மகிழ்ந்து இனிதுமருவியுறை கோயில் *
சிலையிலங்கு மணிமாடத்துச்சிமிசைச்சூலம்
செழுங்கொண்டலகடிரியச் சொரிந்த செழுமுத்தம் *
மலையிலங்குமாளிகைமேல் மலிவெய்து நாங்கூர்
வைகுந்த விண்ணகரம் வணங்குமடநெஞ்சே!
1232 மின்னனையநுண்மருங்குல்மெல்லியற்கா இலங்கை
வேந்தன்முடியொருபதும் தோளிருபதும் போயுதிர *
தன்னிகரில்சிலைவளைத்து அன்றுஇலங்கைபொடி செய்த
தடந்தோளன்மகிழ்ந்து இனிதுமருவியுறை கோயில் *
செந்நெலொடுசெங்கமலம் சேல்கயல்கள் வாளை
செங்கழுநீரொடுமிடைந்துகழனிதிகழ்ந்துஎங்கும் *
மன்னுபுகழ்வேதியர்கள் மலிவெய்து நாங்கூர்
வைகுந்த விண்ணகரம் வணங்குமடநெஞ்சே!
1233 பெண்மைமிகுவடிவுகொடுவந்தவளைப் பெரிய
பேயினதுஉருவுகொடுமாளஉயிருண்டு *
திண்மைமிகுமருதொடு நற்சகடமிறுத்தருளும்
தேவனவன்மகிழ்ந்து இனிதுமருவியுறை கோயில் *
உண்மைமிகுமறையொடு நற்கலைகள்நிறை பொறைகள்
உதவுகொடையென்றுஇவற்றினொழிவில்லா * பெரிய
வண்மைமிகுமறையவர்கள் மலிவெய்து நாங்கூர்
வைகுந்த விண்ணகரம் வணங்குமடநெஞ்சே!
1234 விளங்கனியைஇளங்கன்றுகொண்டுஉதிரஎறிந்து
வேல்நெடுங்கணாய்ச்சியர்கள் வைத்ததயிர் வெண்ணெய் *
உளங்குளிரஅமுதுசெய்து இவ்வுலகுண்டகாளை
உகந்தினிதுநாள்தோறும் மருவியுறைகோயில் *
இளம்படிநற்கமுகுகுலைத்தெங்குகொடிச்செந்நெல்
ஈன்கரும்புகண்வளரக்கால்தடவும்புனலால் *
வளங்கொண்டபெருஞ்செல்வம்வளருமணி நாங்கூர்
வைகுந்த விண்ணகரம் வணங்குமடநெஞ்சே!
1235 ஆறாதசினத்தின்மிகுநரகனுரம்அழித்த
அடலாழித்தடக்கையன், அலர்மகட்கும்அரற்கும் *
கூறாகக்கொடுத்தருளும்திருவுடம்பன் இமையோர்
குலமுதல்வன்மகிழ்ந்து இனிதுமருவியுறை கோயில் *
மாறாதமலர்க்கமலம் செங்கழுநீர்ததும்பி
மதுவெள்ளம்ஒழுக வயலுழவர்மடையடைப்ப *
மாறாதபெருஞ்செல்வம் வளருமணி நாங்கூர்
வைகுந்த விண்ணகரம் வணங்குமடநெஞ்சே!
1236 வங்கமலிதடங்கடலுள்வானவர்களோடு
மாமுனிவர்பலர்கூடிமாமலர்கள்தூவி *
எங்கள்தனிநாயகனே! எமக்குஅருளாயென்னும்
ஈசனவன்மகிழ்ந்து இனிதுமருவியுறை கோயில் *
செங்கயலும்வாளைகளும் செந்நெலிடைக்குதிப்பச்
சேலுகளும்செழும்பணைசூழ்வீதிதொறும் மிடைந்து *
மங்குல்மதியகடுரிஞ்சுமணிமாட நாங்கூர்
வைகுந்த விண்ணகரம் வணங்குமடநெஞ்சே!
1237 சங்குமலிதண்டுமுதல்சக்கரமுன்ஏந்தும்
தாமரைக்கண்நெடியபிரான் தானமரும்கோயில் *
வங்கமலிகடலுலகில்மலிவெய்து நாங்கூர்
வைகுந்தவிண்ணகர்மேல், வண்டறையும் பொழில்சூழ் *
மங்கையர்தம்தலைவன், மருவலர்தம்உடல்துணிய
வாள்வீசும்பரகாலன்கலிகன்றிசொன்ன *
சங்கமலிதமிழ்மாலைபத்துஇவைவல்லார்கள்
தரணியொடுவிசும்பாளும்தன்மைபெறுவாரே. (2)