Your browser does not support the audio element.
audio
1128 சொல்லுவன்சொற்பொருள்தானவை யாய்ச்
சுவைஊறுஒலிநாற்றமும்தோற்றமுமாய் *
நல்லரன் நான்முகன்நாரணனுக்குஇடந்தான்
தடம்சூழ்ந்துஅழகாயகச்சி *
பல்லவன்வில்லவனென்றுலகில்
பலராய்ப்பலவேந்தர் வணங்குகழல்
பல்லவன் * மல்லையர்கோன்பணிந்த
பரமேச்சுரவிண்ணகரமதுவே. (2)
1129 கார்மன்னுநீள்விசும்பும்கடலும்
சுடரும் நிலனும்மலையும் * தன்உந்தித்
தார்மன்னுதாமரைக்கண்ணனிடம்
தடமாமதிள் சூழ்ந்து அழகாயகச்சி *
தேர்மன்னுதென்னவனை முனையில்செருவில்
திறல்வாட்டியதிண்சிலையோன் *
பார்மன்னுபல்லவர்கோன்பணிந்த
பரமேச்சுரவிண்ணகரமதுவே.
1130 உரந்தருமெல்லணைப்பள்ளிகொண்டான்
ஒருகால்முன்னம்மாவுருவாய்க்கடலுள் *
வரந்தரும்மாமணிவண்ணனிடம்
மணிமாடங்கள்சூழ்ந்துஅழகாயகச்சி *
நிரந்தவர்மண்ணையில்புண்ணுகர்வேல்
நெடுவாயிலுகச்செருவில்முனநாள் *
பரந்தவன்பல்லவர்கோன்பணிந்த
1131 அண்டமும்எண்திசையும்நிலனும்
அலைநீரொடுவான்எரிகால்முதலா
உண்டவன் * எந்தைபிரானதுஇடம்
ஒளிமாடங்கள்சூழ்ந்துஅழகாயகச்சி *
விண்டவர்இண்டைக்குழாமுடனே
விரைந்தார்இரியச்செருவில்முனைந்து *
பண்டுஒருகால்வளைத்தான்பணிந்த
1132 தூம்புடைத்திண்கைவன்தாள்களிற்றின்
துயர்தீர்த்து, அரவம்வெருவ * முனநாள்
பூம்புனல்பொய்கைபுக்கானவனுக்குஇடந்தான்
தேம்பொழில்குன்றெயில்தென்னவனைத்
திசைப்பச்செருமேல்வியந்துஅன்றுசென்ற *
பாம்புடைப்பல்லவர்கோன்பணிந்த
1133 திண்படைக்கோளரியின்உருவாய்த்
திறலோனகலம்செருவில்முனநாள் *
புண்படப்போழ்ந்தபிரானதுஇடம்
பொருமாடங்கள்சூழ்ந்துஅழகாயகச்சி *
வெண்குடைநீழல்செங்கோல்நடப்ப
விடைவெல்கொடிவேற்படைமுன்உயர்த்த *
பண்புடைப்பல்லவர்கோன்பணிந்த
1134 இலகியநீள்முடிமாவலிதன்பெருவேள்வியில்
மாணுருவாய், முனநாள் *
சலமொடுமாநிலங்கொண்டவனுக்குஇடந்தான்
உலகுடைமன்னவன்தென்னவனைக்
கன்னிமாமதிள்சூழ்கருவூர்வெருவ *
பலபடைசாயவென்றான்பணிந்த
1135 குடைத்திறல்மன்னவனாய் ஒருகால்
குரங்கைப்படையா * மலையால்கடலை
யடைத்தவன்எந்தைபிரானதுஇடம்
விடைத்திறல்வில்லவன்நென்மெலியில்
வெருவச்செருவேல்வலங்கைப்பிடித்த *
படைத்திறல்பல்லவர்கோன்பணிந்த
1136 பிறையுடைவாணுதல்பின்னைதிறத்து முன்னே
ஒருகால்செருவில்லுருமின் *
மறையுடைமால்விடையேழடர்த்தாற்கிடந்தான்
கறையுடைவாள்மறமன்னர்கெடக்
கடல்போலமுழங்கும்குரல்கடுவாய் *
பறையுடைப்பல்லவர்கோன்பணிந்த
1137 பார்மன்னுதொல்புகழ்ப்பல்லவர்கோன்பணிந்த
பரமேச்சுரவிண்ணகர்மேல் *
கார்மன்னுநீள்வயல்மங்கையர்தம்தலைவன்
கலிகன்றிகுன்றாதுஉரைத்த *
சீர்மன்னுசெந்தமிழ்மாலைவல்லார்
திருமாமகள்தன் அருளால் * உலகில்
தேர்மன்னராய்ஒலிமாகடல்சூழ்
செழுநீருலகாண்டுதிகழ்வர்களே. (2)