This Temple is the Abode of the One Reclining on the Serpent Couch
பாம்பணைப் பள்ளிகொண்டவன் இடமே இக்கோயில்
1130 உரந்தருமெல்லணைப்பள்ளிகொண்டான்
ஒருகால்முன்னம்மாவுருவாய்க்கடலுள் *
வரந்தரும்மாமணிவண்ணனிடம்
மணிமாடங்கள்சூழ்ந்துஅழகாயகச்சி *
நிரந்தவர்மண்ணையில்புண்ணுகர்வேல்
நெடுவாயிலுகச்செருவில்முனநாள் *
பரந்தவன்பல்லவர்கோன்பணிந்த
பரமேச்சுரவிண்ணகரமதுவே. (2)