This is the Temple Worshipped by the Pallava King
பல்லவர்கோன் பணிந்த கோயில் இது
1133 திண்படைக்கோளரியின்உருவாய்த்
திறலோனகலம்செருவில்முனநாள் *
புண்படப்போழ்ந்தபிரானதுஇடம்
பொருமாடங்கள்சூழ்ந்துஅழகாயகச்சி *
வெண்குடைநீழல்செங்கோல்நடப்ப
விடைவெல்கொடிவேற்படைமுன்உயர்த்த *
பண்புடைப்பல்லவர்கோன்பணிந்த
பரமேச்சுரவிண்ணகரமதுவே.