PT 2.9.1

Paramēccura Viṇṇakaram, Worshipped by the Pallava King

பல்லவன் பணிந்த பரமேச்சுர விண்ணகரம்

1128 சொல்லுவன்சொற்பொருள்தானவை யாய்ச்

சுவைஊறுஒலிநாற்றமும்தோற்றமுமாய் *

நல்லரன் நான்முகன்நாரணனுக்குஇடந்தான்

தடம்சூழ்ந்துஅழகாயகச்சி *

பல்லவன்வில்லவனென்றுலகில்

பலராய்ப்பலவேந்தர் வணங்குகழல்

பல்லவன் * மல்லையர்கோன்பணிந்த

பரமேச்சுரவிண்ணகரமதுவே. (2)

Text size