Your browser does not support the audio element.
audio
1118 திரிபுரம்மூன்று எரித்தானும்
மற்றைமலர்மிசைமேல்அயனும்வியப்ப *
முரிதிரைமாகடல் போல்முழங்கி
மூவுலகும்முறையால்வணங்க *
எரியனகேசரவாளெயிற்றோடு
இரணியனாகம்இரண்டுகூறா *
அரியுருவாமிவரார்கொல்? என்ன
அட்டபுயகரத்தேனென்றாரே. (2)
1119 வெந்திறல்வீரரில்வீரரொப்பார்
வேதமுரைத்துஇமையோர்வணங்கும் *
செந்தமிழ்பாடுவார்தாம்வணங்கும்
தேவரிவர்கொல்? தெரிக்கமாட்டேன் *
வந்துகுறளருவாய்நிமிர்ந்து
மாவலிவேள்வியில்மண்ணளந்த *
அந்தணர்போன்றுஇவரார்கொல்? என்ன
அட்டபுயகரத்தேனென்றாரே.
1120 செம்பொனிலங்குவலங்கைவாளி
திண்சிலைதண்டொடுசங்கம்ஒள்வாள் *
உம்பரிருசுடராழியோடு
கேடகம்ஒண்மலர்பற்றிஎற்றே! *
வெம்புசினத்துஅடல்வேழம்வீழ
வெண்மருப்பொன்றுபறித்து * இருண்ட
அம்புதம்போன்றிவரார்கொல்? என்ன
1121 மஞ்சுயர்மாமணிக்குன்றம்ஏந்தி
மாமழைகாத்துஒருமாயவானை
அஞ்ச * அதன்மருப்பன்றுவாங்கும்
ஆயர்கொல்? மாயஅறியமாட்டேன் *
வெஞ்சுடராழியும்சங்கும்ஏந்தி
வேதமுன்ஓதுவர்நீதிவானத்து *
அஞ்சுடர்போன்றுஇவரார்கொல்? என்ன
1122 கலைகளும்வேதமும்நீதிநூலும்
கற்பமும்சொற்பொருள்தானும் * மற்றை
நிலைகளும் வானவர்க்கும் பிறர்க்கும்
நீர்மையினால்அருள்செய்து * நீண்ட
மலைகளும்மாமணியும் மலர்மேல்
மங்கையும்சங்கமும் தங்குகின்ற *
அலைகடல்போன்றுஇவரார்கொல்? என்ன
1123 எங்ஙனும்நாம்இவர்வண்ணம்எண்ணில்
ஏதும்அறிகிலம், ஏந்திழையார் *
சங்கும்மனமும்நிறைவும்எல்லாம்
தம்மனவாகப்புகுந்து * தாமும்
பொங்குகருங்கடல்பூவைகாயா
போதவிழ்நீலம்புனைந்தமேகம் *
அங்ஙனம்போன்றுஇவரார்கொல்? என்ன
1124 முழுசிவண்டாடியதண்டுழாயின்
மொய்ம்மலர்க்கண்ணியும் * மேனியஞ்சாந்
திழிசியகோலம்இருந்தவாறும்
எங்ஙனம்சொல்லுகேன்? ஓவிநல்லார் *
எழுதியதாமரையன்னகண்ணும்
ஏந்தெழிலாகமும் தோளும்வாயும் *
அழகியதாம்இவரார்கொல்? என்ன
1125 மேவிஎப்பாலும்விண்ணோர்வணங்க
வேதமுரைப்பர்முந்நீர்மடந்தை
தேவி * அப்பால்அதிர்சங்கம்இப்பால்
சக்கரம்மற்றிவர்வண்ணம்எண்ணில் *
காவியொப்பார்கடலேயுமொப்பார்
கண்ணும்வடிவும்நெடியராய் * என்
ஆவியொப்பார்இவரார்கொல்? என்ன
1126 தஞ்சம்இவர்க்கென்வளையும்நில்லா
நெஞ்சமும்தம்மதேசிந்தித்தேற்கு *
வஞ்சிமருங்குல்நெருங்கநோக்கி
வாய்திறந்துஒன்றுபணித்ததுஉண்டு *
நஞ்சமுடைத்திவர்நோக்கும்நோக்கம்
நான்இவர்தம்மைஅறியமாட்டேன்
அஞ்சுவன்மற்றிவரார்கொல்? என்ன
1127 மன்னவன்தொண்டையர்கோன்வணங்கும்
நீள்முடிமாலைவயிரமேகன் *
தன்வலிதன்புகழ்சூழ்ந்தகச்சி
அட்டபுயகரத்துஆதிதன்னை *
கன்னிநன்மாமதிள்மங்கைவேந்தன்
காமருசீர்க்கலிகன்றி * குன்றா
இன்னிசையால்சொன்னசெஞ்சொல்மாலை
ஏத்தவல்லார்க்குஇடம்வைகுந்தமே. (2)