Your browser does not support the audio element.
audio
2012 நீள்நாகம்சுற்றி நெடுவரைநட்டு * ஆழ்கடலைப்
பேணான்கடைந்து அமுதம்கொண்டுஉகந்தபெம்மானை *
பூணாரமார்வனைப் புள்ளூரும்பொன்மலையை *
காணாதார்கண்என்றும் கண்ணல்லகண்டாமே. (2)
2013 நீள்வான்குறளுருவாய் நின்றிரந்துமாவலிமண் *
தாளால்அளவிட்ட தக்கணைக்குமிக்கானை *
தோளாதமாமணியைத் தொண்டர்க்கினியானை *
கேளாச்செவிகள் செவியல்லகேட்டாமே.
2014 தூயானைத் தூயமறையானை * தென்னாலி
மேயானை மேவாளுயிருண்டுஅமுதுண்ட
வாயானை * மாலைவணங்கி அவன்பெருமை
பேசாதார் * பேச்சுஎன்றும் பேச்சல்லகேட்டாமே.
2015 கூடாஇரணியனைக் கூருகிரால்மார்விடந்த *
ஓடாஅடலரியை உம்பரார்கோமனை *
தோடார்நறுந்துழாய் மார்வனை, ஆர்வத்தால் *
பாடாதார்பாட்டுஎன்றும் பாட்டல்லகேட்டாமே.
2016 மையார்கடலும் மணிவரையும்மாமுகிலும் *
கொய்யார்குவளையும் காயாவும்போன்றுஇருண்ட
மெய்யானை * மெய்யமலையானைச் சங்கேந்தும்
கையானை * கைதொழா கையல்லகண்டாமே.
2017 கள்ளார்துழாயும் கணவலரும்கூவிளையும் *
முள்ளார்முளரியும் ஆம்பலுமுன்கண்டக்கால் *
புள்ளாய்ஓரேனமாய்ப் புக்கிடந்தான்பொன்னடிக்கென்று *
உள்ளாதாருள்ளத்தை உள்ளமாக்கொள்ளோமே.
2018 கனையார்கடலும் கருவிளையும்காயாவும்
அனையானை * அன்பினால் ஆர்வத்தால் * என்றும்
சுனையார்மலரிட்டுத் தொண்டராய்நின்று
நினையாதார் * நெஞ்சென்றும் நெஞ்சல்லகண்டாமே.
2019 வெறியார்கருங்கூந்தல் ஆய்ச்சியர்வைத்த *
உறியார்நறுவெண்ணெய் தானுகந்துஉண்ட
சிறியானை * செங்கணெடியானைச் சிந்தித்து
அறியாதார் * என்றும் அறியாதார்கண்டாமே.
2020 தேனோடுவண்டாலும் திருமாலிருஞ்சோலை *
தானிடமாக்கொண்டான் தடமலர்க்கண்ணிக்காய் *
ஆன்விடையேழன்றடர்த்தாற்கு ஆளானாரல்லாதார் *
மானிடவரல்லரென்று என்மனத்தேவைத்தேனே. (2)
2021 மெய்ந்நின்ற பாவம்அகல * திருமாலைக்
கைந்நின்றஆழியான் சூழும்கழல்சூடி *
கைந்நின்றவேற்கைக் கலியனொலிமாலை *
ஐயொன்றுமைந்தும் இவைபாடியாடுமினே. (2)