Your browser does not support the audio element.
audio
1972 மன்னிலங்குபாரதத்துத் தேரூர்ந்து * மாவலியைப்
பொன்னிலங்குதிண்விலங்கில்வைத்து * பொருகடல்சூழ்
தென்னிலங்கையீடழித்த தேவர்க்குஇதுகாணீர் *
என்னிலங்குசங்கோடு எழில்தோற்றிருந்தேனே. (2)
1973 இருந்தான்என்னுள்ளத்து இறைவன் * கறைசேர்
பருந்தாட்களிற்றுக்குஅருள்செய்த * செங்கண்
பெருந்தோள்நெடுமாலைப் பேர்பாடியாட *
வருந்தாதுஎன்கொங்கை ஒளிமன்னும்அன்னே!
1974 அன்னே! இவரை அறிவன் * மறைநான்கும்
முன்னேயுரைத்த முனிவரிவர்வந்து *
பொன்னேய்வளைகவர்ந்துபோகார் மனம்புகுந்து *
என்னே? இவரெண்ணும்எண்ணம் அறியோமே.
1975 அறியோமேயென்று உரைக்கலாமே? எமக்கு *
வெறியார்பொழில்சூழ் வியன்குடந்தைமேவி *
சிறியானோர்பிள்ளையாய் மெள்ளநடந்திட்டு *
உறியார்நறுவெண்ணெய் உண்டுகந்தார்தம்மையே.
1976 தம்மையேநாளும் வணங்கித்தொழுவார்க்கு *
தம்மையேயொக்க அருள்செய்வராதலால் *
தம்மையேநாளும் வணங்கித்தொழுதிறைஞ்சி *
தம்மையேபற்றா மனத்துஎன்றும்வைத்தோமே.
1977 வைத்தார்அடியார் மனத்தினில்வைத்து * இன்பம்
உற்றார்ஒளிவிசும்பில் ஓரடிவைத்து * ஓரடிக்கும்
எய்த்தாதுமண்ணென்று இமையோர்தொழுதிறைஞ்சி *
கைத்தாமரைகுவிக்கும் கண்ணன்என்கண்ணனையே.
1978 கண்ணன் மனத்துள்ளேநிற்கவும் * கைவளைகள்
என்னோகழன்ற? இவையென்னமாயங்கள்? *
பெண்ணானோம் பெண்மையோம்நிற்க * அவன்மேய
அண்ணல்மலையும் அரங்கமும்பாடோமே.
1979 பாடோமே? எந்தைபெருமானை * பாடிநின்று
ஆடோமே? ஆயிரம்பேரானை * பேர்நினைந்து
சூடோமே? சூடும்துழாயலங்கல்சூடி * நாம்
கூடோமே? கூடக்குறிப்பாகில்நன்னெஞ்சே!
1980 நன்னெஞ்சே! நம்பெருமான் நாளும்இனிதமரும் *
அன்னம்சேர்கானல் அணியாலிகைதொழுது *
முன்னம்சேர்வல்வினைகள்போக முகில்வண்ணன் *
பொன்னஞ்சேர்சேவடிமேல் போதணியப்பெற்றோமே.
1981 பெற்றாரார் ஆயிரம்பேரானை * பேர்பாடப்
பெற்றான் கலியனொலிசெய்தமிழ்மாலை *
கற்றார்ஓ! முற்றுலகாள்வர் * இவைகேட்க
லுற்றார்க்கு உறுதுயரில்லைஉலகத்தே. (2)