Chapter 10

Requesting the god to come and help when Yama’s messengers come - (துப்புடையாரை அடைவது)

எமபயம் நீக்கென அரங்கத்தரவணையானை வேண்டுதல்
Requesting the god to come and help when Yama’s messengers come - (துப்புடையாரை அடைவது)
Everyone must experience the results of their good and bad deeds. When committing sins, they neither listen nor speak of it, and they are not afraid. It is only when they think of hell that fear arises. What if one chants the divine names of the Lord? What if one thinks of Him! Can it be done at the moment of death? Remember Him while the body is still + Read more
ஒவ்வொருவரும் புண்ணிய பாவ பலன்களை அனுபவித்தே தீரவேண்டும். பாவம் செய்யும்போது கேட்பதில்லை; சொல்வதில்லை; பயப்படுவதில்லை. நரகத்தை நினைக்கும்போதுதான் பயமாக இருக்கிறது. பகவானின் திருநாமங்களைச் சொன்னால் என்ன? அவனை நினைத்தால் என்ன! உயிர் போகும் நேரத்தில் முடியுமா? உடல் நன்றாக இருக்கும்போதே + Read more
Verses: 423 to 432
Grammar: Eṇcīrk Kaḻinediladi Āsiriya Viruththam / எண்சீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்
Recital benefits: Will become pure devotees of the Lord
Tamil
Simplified
English
Verse info
Synonyms
Translation

PAT 4.10.1

423 துப்புடையாரைஅடைவதெல்லாம்
சோர்விடத்துத்துணையாவரென்றே *
ஒப்பிலேனாகிலும்நின்னடைந்தேன்
ஆனைக்குநீஅருள்செய்தமையால் *
எய்ப்புஎன்னைவந்துநலியும்போது
அங்குஏதும்நானுன்னைநினைக்கமாட்டேன் *
அப்போதைக்குஇப்போதேசொல்லிவைத்தேன்
அரங்கத்தரவணைப்பள்ளியானே. (2)
423 ## துப்புடையாரை அடைவது எல்லாம் * சோர்விடத்துத் துணை ஆவர் என்றே *
ஒப்பிலேன் ஆகிலும் நின் அடைந்தேன் * ஆனைக்கு நீ அருள் செய்தமையால் **
எய்ப்பு என்னை வந்து நலியும்போது * அங்கு ஏதும் நான் உன்னை நினைக்கமாட்டேன் *
அப்போதைக்கு இப்போதே சொல்லி வைத்தேன் * அரங்கத்து அரவணைப் பள்ளியானே (1)
423 ## tuppuṭaiyārai aṭaivatu ĕllām * corviṭattut tuṇai āvar ĕṉṟe *
ŏppileṉ ākilum niṉ aṭainteṉ * āṉaikku nī arul̤ cĕytamaiyāl **
ĕyppu ĕṉṉai vantu naliyumpotu * aṅku etum nāṉ uṉṉai niṉaikkamāṭṭeṉ *
appotaikku ippote cŏlli vaitteṉ * araṅkattu aravaṇaip pal̤l̤iyāṉe (1)

Ragam

Ārabi / ஆரபி

Thalam

Ādi / ஆதி

Bhavam

Self

Divya Desam

Simple Translation

423. When they are old, people go to others who are strong because they believe they will help them. Even though I am not worthy to approach you, I come to you for refuge because you saved the elephant Gajendra from the crocodile when it seized him. When I become old and my time comes to an end and I am suffering, I may not be able even to think of you. Now I have told you what my state will be then. O lord, you rest on the snake bed on the ocean in Srirangam.

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion (Aṉvayam). Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
அரங்கத்து திருவரங்கத்தில்; அரவணை பாம்பணையில்; பள்ளியானே! பள்ளி கொண்டிருப்பவனே!; துப்புடையாரை காக்கும் திறனுடைய உன்னை; அடைவது எல்லாம் அடைவதன் காரணம்; சோர்வு இடத்து நம் உடல் நலிந்திடும் சமயம்; துணையாவர் என்றே நீ துணை நிற்பாய் என்று; ஒப்பிலேன் நான் யாருக்கும் ஈடானவன் அல்லன்; ஆகிலும் எனினும்; நின் அடைந்தேன் உன்னை அடைந்தேன்; ஆனைக்கு நீ யானை கஜேந்திரனுக்கு; அருள் செய்தமையால் அருள் செய்ததனால்; எய்ப்பு இளைப்பு; என்னை வந்து என்னை வந்து; நலியும் போது நலியச் செய்யும்போது; அங்கு ஏதும் அந்த சமயம் உன்னை நான்; நான் உன்னை நினக்க மாட்டாது போவேன்; அப்போதைக்கு அப்போதைக்காக; இப்போதே இந்திரியங்கள் தெளிவாக உள்ள இப்போதே; சொல்லி வைத்தேன் சொல்லி வைக்கிறேன் என்கிறார்
pal̤l̤iyāṉe! the One who rests; aravaṇai on the snake bed (Adiseshan); araṅkattu in Sri Rangam; aṭaivatu ĕllām the reason for reaching you; tuppuṭaiyārai who has the power to protect; tuṇaiyāvar ĕṉṟe is that You will stand by us; corvu iṭattu when our body is in a deteriorated state; ŏppileṉ I am not a match for anyone; ākilum still; niṉ aṭainteṉ I have sought refuge in you; arul̤ cĕytamaiyāl since You blessed; āṉaikku nī the elephant Gajendran; ĕyppu and when the weakness; ĕṉṉai vantu approaches me; naliyum potu and make me suffer; nāṉ uṉṉai i might not; aṅku etum think of You at that time; appotaikku for that time; cŏlli vaitteṉ I am saying this; ippote now when my senses are clear

PAT 4.10.2

424 சாமிடத்துஎன்னைக்குறிக்கொள்கண்டாய்
சங்கொடுசக்கரமேந்தினானே! *
நாமடித்துஎன்னைஅனேகதண்டம்
செய்வதாநிற்பர்நமன்தமர்கள் *
போமிடத்துஉன்திறத்துஎத்தனையும்
புகாவண்ணம்நிற்பதோர்மாயைவல்லை *
ஆமிடத்தேஉன்னைச்சொல்லிவைத்தேன்
அரங்கத்தரவணைப்பள்ளியானே.
424 சாம் இடத்து என்னைக் குறிக்கொள் கண்டாய் * சங்கொடு சக்கரம் ஏந்தினானே *
நா மடித்து என்னை அனேக தண்டம் * செய்வதா நிற்பர் நமன்தமர்கள் **
போம் இடத்து உன்திறத்து எத்தனையும் * புகாவண்ணம் நிற்பதோர் மாயை வல்லை *
ஆம் இடத்தே உன்னைச் சொல்லி வைத்தேன் * அரங்கத்து அரவணைப் பள்ளியானே (2)
424 cām iṭattu ĕṉṉaik kuṟikkŏl̤ kaṇṭāy * caṅkŏṭu cakkaram entiṉāṉe *
nā maṭittu ĕṉṉai aṉeka taṇṭam * cĕyvatā niṟpar namaṉtamarkal̤ **
pom iṭattu uṉtiṟattu ĕttaṉaiyum * pukāvaṇṇam niṟpator māyai vallai *
ām iṭatte uṉṉaic cŏlli vaitteṉ * araṅkattu aravaṇaip pal̤l̤iyāṉe (2)

Ragam

Ārabi / ஆரபி

Thalam

Ādi / ஆதி

Bhavam

Self

Divya Desam

Simple Translation

424. Look, you need to come and help me when my time comes to an end, O god with a conch and discus in your hands. The Kingarar, the messengers of Yama, will come to take me and bring me terrible pain. I worship you always. Wherever you go, with your miracles you can prevent any suffering that comes to anyone. I am telling you right now while I can. O lord, you rest on the snake bed on the ocean in Srirangam.

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion (Aṉvayam). Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
சங்கொடு சங்கையும்; சக்கரம் சக்கரத்தையும்; ஏந்தினானே! ஏந்தியுள்ள பிரானே!; அரங்கத்து திருவரங்கத்தில்; அரவணை பாம்பணையில்; பள்ளியானே! சயனித்திருப்பவனே!; நமன் தமர்கள் எம தூதர்கள்; நா மடித்து நாக்கை கடித்துக் கொண்டு; என்னை எனக்கு; அனேக தண்டம் பல தண்டனைகளை; செய்வதா கொடுக்க; நிற்பர் வந்து நின்று; போம் என்னை இழுத்துப் போகும்; இடத்து இடத்தில்; உன் திறத்து உம்மைப் பற்றி; எத்தனையும் சிறிதும்; புகாவண்ணம் என் மனதில் தோன்றாதபடி; நிற்பதோர் தன்னை மறைத்துக் கொள்கிற; மாயை வஞ்சனையில்; வல்லை வல்லவராக நிற்கிறீர்; ஆம் ஆதலால் புலன்கள்; இடத்தே நல்ல நிலையிலிருக்கும்போதே; சாம் இடத்து அந்திமகாலத்தில்; என்னை உம்மை நினைக்கமுடியாத என்னை; குறிக்கொள் திருவுள்ளம் பற்றி; கண்டாய் அருள வேண்டும் என்று; உன்னை உம்மைக் குறித்து இப்போதே; சொல்லி வைத்தேன் சொல்லி வைத்தேன்
entiṉāṉe! O One who holds; caṅkŏṭu the conch; cakkaram and the discus; pal̤l̤iyāṉe! and who rests; aravaṇai on the snake bed (Adiseshan); araṅkattu in Sri Rangam; namaṉ tamarkal̤ when the messengers of Yama; nā maṭittu with folded tongues; niṟpar come and wait; cĕyvatā to give; aṉeka taṇṭam several punishments; ĕṉṉai for me; iṭattu and at the place; pom from where they drag me; vallai You are talented; māyai and deceit me; niṟpator by hiding from me; pukāvaṇṇam and make me not to think; ĕttaṉaiyum even a little; uṉ tiṟattu about You; cām iṭattu at the time of death; ĕṉṉai I may not be capable of remembering You; kaṇṭāy I wish to receive; kuṟikkŏl̤ Your grace; ām therefore when my body; iṭatte is in good condition; cŏlli vaitteṉ I tell this; uṉṉai about You now itself

PAT 4.10.3

425 எல்லையில்வாசல்குறுகச்சென்றால்
எற்றிநமன்தமர்பற்றும்போது *
நில்லுமினென்னும்உபாயமில்லை
நேமியும்சங்கமும்ஏந்தினானே! *
சொல்லலாம்போதேஉன்நாமமெல்லாம்
சொல்லினேன் என்னைக்குறிக்கொண்டுஎன்றும் *
அல்லல்படாவண்ணம்காக்கவேண்டும்
அரங்கத்தரவணைப்பள்ளியானே.
425 எல்லையில் வாசல் குறுகச் சென்றால் * எற்றி நமன் தமர் பற்றும்போது *
நில்லுமின் என்னும் உபாயம் இல்லை * நேமியும் சங்கமும் ஏந்தினானே **
சொல்லலாம் போதே உன் நாமம் எல்லாம் * சொல்லினேன் என்னைக் குறிக்கொண்டு என்றும் *
அல்லல் படாவண்ணம் காக்க வேண்டும் * அரங்கத்து அரவணைப் பள்ளியானே (3)
425 ĕllaiyil vācal kuṟukac cĕṉṟāl * ĕṟṟi namaṉ-tamar paṟṟumpotu *
nillumiṉ ĕṉṉum upāyam illai * nemiyum caṅkamum entiṉāṉe **
cŏllalām pote uṉ nāmam ĕllām * cŏlliṉeṉ ĕṉṉaik kuṟikkŏṇṭu ĕṉṟum *
allal paṭāvaṇṇam kākka veṇṭum * araṅkattu aravaṇaip pal̤l̤iyāṉe (3)

Ragam

Ārabi / ஆரபி

Thalam

Ādi / ஆதி

Bhavam

Self

Divya Desam

Simple Translation

425. When the Kingarars, the messengers of Yama, come to take me, even if I run to the front door of my house and beg them, saying, “Stop here” they will not do it. O lord with a discus and conch in your hands, whenever I can I worship you and praise you, saying all your names. You should protect me from all trouble and take care of me. O lord, you rest on the snake bed on the ocean in Srirangam.

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion (Aṉvayam). Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
அரங்கத்து திருவரங்கத்தில்; அரவணை ஆதிசேஷன் மேல்; பள்ளியானே! சயனித்திருப்பவனே!; சங்கமும் சங்கையும்; நேமியும் சக்கரத்தையும்; ஏந்தினானே! கையில் ஏந்தியிருப்பவனே!; எல்லையில் ஆயுள் முடிவில்; வாசல் யமபுரத்து வாயில்; குறுகச் சென்றால் வழியாகச் சென்றால்; எற்றி நமன் தமர் யம கிங்கரர்கள் அடித்து; பற்றும் போது பிடிக்கும்போது; நில்லுமின் என்னும் தடுத்து நிறுத்தும்; உபாயம் ஒரு உபாயமும்; இல்லை என் கையில் இல்லை; சொல்லலாம் சொல்ல முடிந்த; போதே காலத்திலேயே; உன் நாமம் உன் நாமங்களை; எல்லாம் எல்லாம்; சொல்லினேன் சொன்னேன்; என்னை என்றும் என்னை என்றும்; குறிக்கொண்டு திருவுள்ளத்தில் குறித்துக் கொண்டு; அல்லல் யமபடர்களிடம்; படா வண்ணம் அல்லல் படாதபடி; காக்க வேண்டும் காப்பாற்ற வேண்டும்
pal̤l̤iyāṉe! the One who rests; aravaṇai on the snake bed (Adiseshan); araṅkattu in Sri Rangam; entiṉāṉe! the One who in the hands hold; caṅkamum the conch; nemiyum and the discus; ĕllaiyil at end of life; kuṟukac cĕṉṟāl while going through; vācal the gates of Yama's kingdom; ĕṟṟi namaṉ tamar when Yama's attendants hit; paṟṟum potu and catch me; illai i will not have; upāyam any solution; nillumiṉ ĕṉṉum to prevent that; pote therefore, at a time; cŏllalām when I am able to do it; cŏlliṉeṉ I recite; ĕllām all; uṉ nāmam Your names; ĕṉṉai ĕṉṟum please remember; kuṟikkŏṇṭu me in Your heart; kākka veṇṭum and protect me; paṭā vaṇṇam from sufferings in; allal the hand of Yama's messengers

PAT 4.10.4

426 ஒற்றைவிடையனும்நான்முகனும்
உன்னையறியாப்பெருமையோனே! *
முற்றஉலகெல்லாம்நீயேயாகி
மூன்றெழுத்தாயமுதல்வனேயா! *
அற்றதுவாணாள்இவற்கென்றெண்ணி
அஞ்சநமன்தமர்பற்றலுற்ற *
அற்றைக்கு, நீஎன்னைக்காக்கவேண்டும்
அரங்கத்தரவணைப்பள்ளியானே.
426 ஒற்றை விடையனும் நான்முகனும் * உன்னை அறியாப் பெருமையோனே! *
முற்ற உலகு எல்லாம் நீயே ஆகி * மூன்று எழுத்து ஆய முதல்வனே!ஓ! **
அற்றது வாழ்நாள் இவற்கு என்று எண்ணி * அஞ்ச நமன்தமர் பற்றல் உற்ற *
அற்றைக்கு நீ என்னைக் காக்கவேண்டும் * அரங்கத்து அரவணைப் பள்ளியானே (4)
426 ŏṟṟai viṭaiyaṉum nāṉmukaṉum * uṉṉai aṟiyāp pĕrumaiyoṉe! *
muṟṟa ulaku ĕllām nīye āki * mūṉṟu ĕzhuttu āya mutalvaṉe!o! **
aṟṟatu vāzhnāl̤ ivaṟku ĕṉṟu ĕṇṇi * añca namaṉtamar paṟṟal uṟṟa *
aṟṟaikku nī ĕṉṉaik kākkaveṇṭum * araṅkattu aravaṇaip pal̤l̤iyāṉe (4)

Ragam

Ārabi / ஆரபி

Thalam

Ādi / ஆதி

Bhavam

Self

Divya Desam

Simple Translation

426. O lord, you are the whole world and you rest on the snake bed on the ocean in Srirangam. Shivā, the bull rider and Nānmuhan could not find the head or feet of you, the ancient lord praised with the syllable “Om” When the messengers of Yama come terrifying me because they think my time is up, you must come and protect me.

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion (Aṉvayam). Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
ஒற்றை விடையனும் ஒப்பற்ற ருத்திரனும்; நான்முகனும் நான்முக பிரம்மாவும்; உன்னை உன்னை உள்ளபடி; அறியா அறியாத அளவு; பெருமையோனே! பெருமை பொருந்தியவனே!; முற்ற உலகு எல்லாம் எல்லா உலகங்களும்; நீயே ஆகி நீயே ஆகி; மூன்று மூன்று அக்ஷர; எழுத்து ஆய ‘ ஓம்’ எனும் பிரணவமான; முதல்வனே! ஓ! முழுமுதற் கடவுளே!; அரங்கத்து திருவரங்கத்தில்; அரவணை ஆதிசேஷன் மீது; பள்ளியானே! சயனித்திருப்பவனே!; இவற்கு இவனுக்கு; அற்றது வாழ்நாள் வாழ் நாள் முடிந்தது; என்று எண்ணி என்று நினைத்து; நமன் தமர் யமபடர்கள்; பற்றல் உற்ற அற்றைக்கு பிடிக்க வரும் அன்று; அஞ்ச அஞ்சும்போது; நீ என்னை ரக்ஷகனான நீ என்னை; காக்க வேண்டும் ரக்ஷித்து காத்தருள வேண்டும்
ŏṟṟai viṭaiyaṉum the incomparable Rudra; nāṉmukaṉum and the four-faced Brahma; aṟiyā are not capable of understanding you; uṉṉai as you truly are; pĕrumaiyoṉe! who is filled with greatness; nīye āki You are; muṟṟa ulaku ĕllām all the worlds; pal̤l̤iyāṉe! the One who rests; aravaṇai on the Adisesha; araṅkattu at Sri Rangam; mutalvaṉe! o! is the primordial God; ĕḻuttu āya who symbolizes AUM; mūṉṟu the three syllables; namaṉ tamar when the messengers of Yama; paṟṟal uṟṟa aṟṟaikku come to catch me; ĕṉṟu ĕṇṇi thinking; ivaṟku that my; aṟṟatu vāḻnāl̤ lifetime is over; añca and when I fear; nī ĕṉṉai You, as the protector,; kākka veṇṭum should protect me

PAT 4.10.5

427 பையரவினணைப் பாற்கடலுள்
பள்ளிகொள்கின்றபரமமூர்த்தி! *
உய்யஉலகுபடைக்கவேண்டி
உந்தியில்தோற்றினாய்நான்முகனை *
வையமனிசரைப்பொய்யென்றெண்ணிக்
காலனையும்உடனேபடைத்தாய் *
ஐய! இனிஎன்னைக்காக்கவேண்டும்
அரங்கத்தரவணைப்பள்ளியானே.
427 பை அரவின் அணைப் பாற்கடலுள் * பள்ளி கொள்கின்ற பரம முர்த்தி! *
உய்ய உலகு படைக்க வேண்டி * உந்தியில் தோற்றினாய் நான்முகனை **
வைய மனிசரைப் பொய் என்று எண்ணிக் * காலனையும் உடனே படைத்தாய் *
ஐய இனி என்னைக் காக்கவேண்டும் * அரங்கத்து அரவணைப் பள்ளியானே (5)
427 pai araviṉ aṇaip pāṟkaṭalul̤ * pal̤l̤i kŏl̤kiṉṟa parama murtti! *
uyya ulaku paṭaikka veṇṭi * untiyil toṟṟiṉāy nāṉmukaṉai **
vaiya maṉicaraip pŏy ĕṉṟu ĕṇṇik * kālaṉaiyum uṭaṉe paṭaittāy *
aiya iṉi ĕṉṉaik kākkaveṇṭum * araṅkattu aravaṇaip pal̤l̤iyāṉe (5)

Ragam

Ārabi / ஆரபி

Thalam

Ādi / ஆதி

Bhavam

Self

Simple Translation

427. You, the highest one of Sri Rangam resting on Adishesha, the snake on the milky ocean, made Nānmuhan on your navel so that he could create all the creatures of the world, and you also made Yama because you thought that the lives of people in this world should not be endless. O dear lord! You should protect me now.

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion (Aṉvayam). Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
பாற்கடலுள் பாற்கடலில்; பை அரவின் அணை படங்களுடைய ஆதிசேஷன் மீது; பள்ளி கொள்கின்ற சயனித்துக் கொண்டிருக்கும்; பரம மூர்த்தி! எம்பெருமானே!; அரங்கத்து திருவரங்கத்தில்; அரவணை ஆதிசேஷன் மீது; பள்ளியானே! பள்ளிகொண்டிருப்பவனே!; உய்ய அனைவரும் உய்யும்படி; உலகு உலகங்களை; படைக்க வேண்டி படைக்க விரும்பி; நான்முகனை நான்முகபிரமனை; உந்தியில் திருநாபிக் கமலத்தில்; தோற்றினாய் படைத்தவனே!; வைய மனிசரை பூமியிலுள்ள மனிதர்கள்; பொய் சாஸ்திரங்கள் பொய்; என்று என்று எண்ணுவார்களென்று; காலனையும் யமனையும் கூடவே; படைத்தாய் படைத்தவனே!; ஐய! இனி என்னை ஐயனே இனி என்னை; காக்க வேண்டும் நீதான் காத்தருள வேண்டும்
parama mūrtti! Oh Lord, You; pal̤l̤i kŏl̤kiṉṟa recline peacefully; pai araviṉ aṇai on the serpent, Adisesha, with many heads; pāṟkaṭalul̤ in the milky ocean; pal̤l̤iyāṉe! you rest; aravaṇai on the Adisesha; araṅkattu at Sri Rangam; uyya to help raise everyone; paṭaikka veṇṭi You desired to create; ulaku the worlds; toṟṟiṉāy and You created; nāṉmukaṉai the four-faced Brahma; untiyil from the lotus of the divine navel; ĕṉṟu thinking that; vaiya maṉicarai people in the world; pŏy would consider the scriptures to be false; paṭaittāy You also created; kālaṉaiyum Yama; aiya! iṉi ĕṉṉai oh Lord, from now on; kākka veṇṭum You should protect me

PAT 4.10.6

428 தண்ணெனவில்லைநமன்தமர்கள்
சாலக்கொடுமைகள்செய்யாநிற்பர் *
மண்ணொடுநீரும்எரியும்காலும்
மற்றும்ஆகாசமுமாகிநின்றாய்! *
எண்ணலாம்போதேஉன்நாமமெல்லாம்
எண்ணினேன், என்னைக்குறிக்கொண்டுஎன்றும் *
அண்ணலே! நீஎன்னைக்காக்கவேண்டும்
அரங்கத்தரவணைப்பள்ளியானே.
428 தண்ணனவு இல்லை நமன்தமர்கள் * சாலக் கொடுமைகள் செய்யாநிற்பர் *
மண்ணொடு நீரும் எரியும் காலும் * மற்றும் ஆகாசமும் ஆகி நின்றாய் **
எண்ணலாம் போதே உன் நாமம் எல்லாம் * எண்ணினேன் என்னைக் குறிக்கொண்டு என்றும் *
அண்ணலே நீ என்னைக் காக்கவேண்டும் * அரங்கத்து அரவணைப் பள்ளியானே (6)
428 taṇṇaṉavu illai namaṉtamarkal̤ * cālak kŏṭumaikal̤ cĕyyāniṟpar *
maṇṇŏṭu nīrum ĕriyum kālum * maṟṟum ākācamum āki niṉṟāy **
ĕṇṇalām pote uṉ nāmam ĕllām * ĕṇṇiṉeṉ ĕṉṉaik kuṟikkŏṇṭu ĕṉṟum *
aṇṇale nī ĕṉṉaik kākkaveṇṭum * araṅkattu aravaṇaip pal̤l̤iyāṉe (6)

Ragam

Ārabi / ஆரபி

Thalam

Ādi / ஆதி

Bhavam

Self

Divya Desam

Simple Translation

428. O god, you are the earth, ocean, fire, wind and the sky! The Kingarars, the evil messengers of Yama come and cruelly take people’s lives. Whenever I have thought of you I have recited all your names and worshipped you. O my lord, think of me always and protect me. O lord, you rest on the snake bed on the ocean in Srirangam.

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion (Aṉvayam). Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
தண்ணனவு இல்லை இரக்கமற்றவர்களாய்; நமன் தமர்கள் யமகிங்கரர்கள்; சால மிகவும்; கொடுமைகள் கொடிய தண்டனைகளை; செய்யா நிற்பர் கொடுப்பார்கள்; மண்ணொடு நீரும் பூமியும் நீரும்; எரியும் காலும் அக்னியும் வாயுவும்; மற்றும் மற்றும்; ஆகாசமும் ஆகாயுமுமாய்; ஆகி நின்றாய்! நிற்பவனே!; அண்ணலே! என் ஸ்வாமியே!; அரங்கத்து திருவரங்கத்தில்; அரவணை ஆதிசேஷன் மீது; பள்ளியானே! பள்ளிகொண்டிருப்பவனே!; எண்ணலாம் கரண களேபரங்கள் தெளிவாக இருந்து; போதே உள்ள இப்போதே; உன் நாமம் உன் நாமங்கள்; எல்லாம் எல்லாம்; எண்ணினேன் அநுசந்தித்தேன் ஆதலால்; என்னை என்னை; குறிக்கொண்டு திரு உள்ளம் பற்றி; என்றும் எப்போதும்; நீ என்னை நீ என்னை; காக்க வேண்டும் காத்தருள வேண்டும்
namaṉ tamarkal̤ the messengers of Yama; taṇṇaṉavu illai without mercy; cĕyyā niṟpar give; cāla very; kŏṭumaikal̤ cruel punishments; āki niṉṟāy! You stand as; maṇṇŏṭu nīrum the earth; ĕriyum kālum the fire, the air; maṟṟum and; ākācamum the sky; aṇṇale! my Lord!; pal̤l̤iyāṉe! you rest; aravaṇai on the Adisesha; araṅkattu at Sri Rangam; ĕṇṇalām when my mind is clear; pote at this very moment; ĕṇṇiṉeṉ I recited; ĕllām all; uṉ nāmam Your names; nī ĕṉṉai You should; ĕṉṟum always; kuṟikkŏṇṭu remember; ĕṉṉai me; kākka veṇṭum and protect me

PAT 4.10.7

429 செஞ்சொல்மறைப்பொருளாகிநின்ற
தேவர்கள்நாயகனே! எம்மானே! *
எஞ்சலிலென்னுடையின்னமுதே!
ஏழுலகுமுடையாய்! என்னப்பா! *
வஞ்சவுருவின்நமன்தமர்கள்
வலிந்துநலிந்துஎன்னைப்பற்றும்போது *
அஞ்சலமென்றுஎன்னைக்காக்கவேண்டும்
அரங்கத்தரவணைப்பள்ளியானே.
429 செஞ்சொல் மறைப்பொருள் ஆகி நின்ற * தேவர்கள் நாயகனே எம்மானே *
எஞ்சலில் என்னுடை இன் அமுதே * ஏழ் உலகும் உடையாய் என் அப்பா **
வஞ்ச உருவின் நமன்தமர்கள் * வலிந்து நலிந்து என்னைப் பற்றும்போது *
அஞ்சலம் என்று என்னைக் காக்கவேண்டும் * அரங்கத்து அரவணைப் பள்ளியானே (7)
429 cĕñcŏl maṟaippŏrul̤ āki niṉṟa * tevarkal̤ nāyakaṉe ĕmmāṉe *
ĕñcalil ĕṉṉuṭai iṉ amute * ezh ulakum uṭaiyāy ĕṉ appā **
vañca uruviṉ namaṉtamarkal̤ * valintu nalintu ĕṉṉaip paṟṟumpotu *
añcalam ĕṉṟu ĕṉṉaik kākkaveṇṭum * araṅkattu aravaṇaip pal̤l̤iyāṉe (7)

Ragam

Ārabi / ஆரபி

Thalam

Ādi / ஆதி

Bhavam

Self

Divya Desam

Simple Translation

429. O my father, you are the god of gods, the meaning of the Vedās and their pure words, you are my sweet faultless nectar, and the lord of all the seven worlds. When the Kingarars, the messengers of Yama, come with their cunning forms, make me suffer and take me, you must come to protect me and say, “Do not be afraid!” O lord. you rest on the snake bed on the ocean in Srirangam.

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion (Aṉvayam). Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
செஞ்சொல் செம்மையான சொற்களையுடைய; மறைப்பொருள் வேதத்துக்கு; ஆகி நின்ற அர்த்தமாக இருக்கும்; தேவர்கள் தேவர்களின்; நாயகனே! தலைவனே!; எம்மானே! எம்பெருமானே!; எஞ்சலில் குறையில்லாத; என்னுடை என்னுடை; இன் அமுதே! இன் அமுதே!; என் அப்பா! என் அப்பனே!; அரங்கத்து திருவரங்கத்தில்; அரவணை ஆதிசேஷன் மீது; பள்ளியானே! பள்ளிகொண்டிருப்பவனே!; வஞ்ச உருவின் வஞ்சனையே உருவமான; நமன் தமர்கள் யமகிங்கரர்கள்; வலிந்து நலிந்து பலாத்காரமாக துன்புறுத்தி; என்னை என்னை; பற்றும் போது பிடிக்கும் போது; அஞ்சலம் என்று பயப்படாதே என்று; என்னை என்னைக்; காக்க வேண்டும் காத்தருள வேண்டும்
ĕmmāṉe! Oh Lord!; nāyakaṉe! the Leader; tevarkal̤ of the gods; āki niṉṟa who is the meaning of; maṟaippŏrul̤ the Vedas; cĕñcŏl which is flawless and pure; ĕṉ appā! my dear Father!; ĕñcalil the Faultless; iṉ amute! sweet nectar of !; ĕṉṉuṭai mine; pal̤l̤iyāṉe! the One who rests; aravaṇai on Adisesha; araṅkattu at Sri Rangam; namaṉ tamarkal̤ the messengers of Yama; vañca uruviṉ with form full of deceit; paṟṟum potu when they catch hold of; ĕṉṉai me; valintu nalintu and forcefully torment; kākka veṇṭum You must bless and protect; ĕṉṉai me; añcalam ĕṉṟu telling not to fear

PAT 4.10.8

430 நான்ஏதும்உன்மாயமொன்றறியேன்
நமன்தமர்பற்றிநலிந்திட்டு * இந்த
ஊனேபுகேயென்றுமோதும்போது
அங்கேதும் நான்உன்னைநினைக்கமாட்டேன் *
வானேய்வானவர்தங்களீசா!
மதுரைப்பிறந்தமாமாயனே! * என்
ஆனாய்! நீஎன்னைக்காக்கவேண்டும்
அரங்கத்தரவணைப்பள்ளியானே.
430 நான் ஏதும் உன் மாயம் ஒன்று அறியேன் * நமன்தமர் பற்றி நலிந்திட்டு * இந்த
ஊனே புகே என்று மோதும்போது * அங்கேதும் நான் உன்னை நினைக்கமாட்டேன் **
வான் ஏய் வானவர் தங்கள் ஈசா * மதுரைப் பிறந்த மா மாயனே * என்
ஆனாய் நீ என்னைக் காக்கவேண்டும் * அரங்கத்து அரவணைப் பள்ளியானே (8)
430 nāṉ etum uṉ māyam ŏṉṟu aṟiyeṉ * namaṉtamar paṟṟi nalintiṭṭu * inta
ūṉe puke ĕṉṟu motumpotu * aṅketum nāṉ uṉṉai niṉaikkamāṭṭeṉ **
vāṉ ey vāṉavar taṅkal̤ īcā * maturaip piṟanta mā māyaṉe * ĕṉ
āṉāy nī ĕṉṉaik kākkaveṇṭum * araṅkattu aravaṇaip pal̤l̤iyāṉe (8)

Ragam

Ārabi / ஆரபி

Thalam

Ādi / ஆதி

Bhavam

Self

Simple Translation

430. I do not know any of the magic you do. When the Kingarars, the messengers of Yama, come, make me suffer and take me to Yama’s world, I may not be able to think of you, O god of the gods in the sky, O Māya, born in Madhura, my soul is yours. You should protect me. O lord, you rest on the snake bed on the ocean in Srirangam.

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion (Aṉvayam). Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
நான் உன் மாயம் நான் உன் மாயைகள்; ஏதும் ஒன்று எதையும்; அறியேன் அறியமாட்டேன்; நமன் தமர் யமகிங்கரர்கள்; பற்றி என்னைப் பிடித்து; நலிந்திட்டு துன்புறுத்தி; இந்த ஊனே இந்த சரீரத்தில்; புகே என்று புகுந்துகொள் என்று; மோதும் போது அடிக்கும் போது; அங்கேதும் அந்த சமயத்தில்; நான் உன்னை எம்பெருமானே நான் உன்னை; நினைக்க மாட்டேன் நினைக்க மாட்டேன; வான் ஏய் விண்ணுலகில் இருக்கும்; வானவர் தங்கள் தேவர்களுக்குத்; ஈசா! தலைவனாய்; மதுரைப் பிறந்த வட மதுரையில் அவதரித்த; மா மிக்க ஆச்சரிய; மாயனே! சக்தியையுடையவனே!; என் ஆனாய்! எனக்கு வசப்பட்டிருப்பவனே!; நீ என்னை நீ என்னைக்; காக்க வேண்டும் காத்தருள வேண்டும்; அரங்கத்து திருவரங்கத்தில்; அரவணை ஆதிசேஷன் மீது; பள்ளியானே! பள்ளிகொண்டிருப்பவனே!
aṟiyeṉ I will not be aware of; etum ŏṉṟu any of; nāṉ uṉ māyam Your divine illusions; namaṉ tamar when the messengers of Yama; paṟṟi catch hold and; nalintiṭṭu torture me; motum potu when they beat; puke ĕṉṟu and order me to enter into; inta ūṉe another body; aṅketum at that time; nāṉ uṉṉai oh Lord, I will not; niṉaikka māṭṭeṉ remember You; īcā! as the Leader of; vāṉavar taṅkal̤ gods of the; vāṉ ey higher worlds; maturaip piṟanta born in Madhura; with great; māyaṉe! powers; ĕṉ āṉāy! You have become me; nī ĕṉṉai You have; kākka veṇṭum to protect me; pal̤l̤iyāṉe! Oh Lord who rests; aravaṇai on Adisesha; araṅkattu at Sri Rangam

PAT 4.10.9

431 குன்றெடுத்துஆநிரைகாத்தஆயா!
கோநிரைமேய்த்தவனே! எம்மானே! *
அன்றுமுதல் இன்றறுதியா
ஆதியஞ்சோதி! மறந்தறியேன் *
நன்றும்கொடியநமன்தமர்கள்
நலிந்துவலிந்துஎன்னைப்பற்றும்போது *
அன்றங்குநீஎன்னைக்காக்கவேண்டும்
அரங்கத்தரவணைப்பள்ளியானே.
431 குன்று எடுத்து ஆநிரை காத்த ஆயா * கோநிரை மேய்த்தவனே எம்மானே *
அன்று முதல் இன்று அறுதியாக * ஆதி அஞ் சோதி மறந்து அறியேன் **
நன்றும் கொடிய நமன்தமர்கள் * நலிந்து வலிந்து என்னைப் பற்றும்போது *
அன்று அங்கு நீ என்னைக் காக்கவேண்டும் * அரங்கத்து அரவணைப் பள்ளியானே (9)
431 kuṉṟu ĕṭuttu ānirai kātta āyā * konirai meyttavaṉe ĕmmāṉe *
aṉṟu mutal iṉṟu aṟutiyāka * āti añ coti maṟantu aṟiyeṉ **
naṉṟum kŏṭiya namaṉtamarkal̤ * nalintu valintu ĕṉṉaip paṟṟumpotu *
aṉṟu aṅku nī ĕṉṉaik kākkaveṇṭum * araṅkattu aravaṇaip pal̤l̤iyāṉe (9)

Ragam

Ārabi / ஆரபி

Thalam

Ādi / ஆதி

Bhavam

Self

Divya Desam

Simple Translation

431. You my lord, are the cowherd who grazed the cows and carried Govardhanā mountain to protected them. You are the ancient light. From the day I was born until today I have never forgotten you. When the Kingarars, the cruel messengers of Yama, come, make me suffer and take hold of me, you should come and protect me. O lord, you rest on the snake bed on the ocean in Srirangam.

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion (Aṉvayam). Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
குன்று எடுத்து கோவர்த்தன மலையை எடுத்து; ஆநிரை பசுக்களைக் காத்த ஆயனே!; கோநிரை மாடுகள் கூட்டத்தை; மேய்த்தவனே மேய்த்தவனே!; எம்மானே! எனக்கு ஸ்வாமியானவனே!; அரங்கத்து திருவரங்கத்தில்; அரவணை ஆதிசேஷன் மீது; பள்ளியானே! சயனித்திருப்பவனே!; அன்று முதல் அன்று முதல்; இன்று அறுதியாக இன்று வரை; ஆதி ஆதியான; அஞ் சோதி உன் தேஜோமய உருவத்தை; மறந்து அறியேன் நான் மறந்ததில்லை; நன்றும் கொடிய மிக்கக் கொடிய; நமன் தமர்கள் யமகிங்கரர்கள்; நலிந்து வலிந்து வலுக்கட்டாயமாகப் இழுத்து; என்னை என்னைப்; பற்றும் போது பிடிக்கும்போது; அன்று அங்கு அன்றைய தினம் அங்கே; நீ என்னை நீ என்னைக்; காக்க வேண்டும் காத்தருள வேண்டும்
ānirai You are the Cowherd who protected the cows; kuṉṟu ĕṭuttu by lifting the Govardhana hill; meyttavaṉe the One who grazed; konirai the herd of cattle; ĕmmāṉe! You are my Lord and Master!; pal̤l̤iyāṉe! the One who rests; aravaṇai on the Adisesha; araṅkattu at Sri Rangam; aṉṟu mutal from that day; iṉṟu aṟutiyāka until today; añ coti Your radiant form that are resplendent; āti and primordial; maṟantu aṟiyeṉ I have never forgotten that; namaṉ tamarkal̤ when the messengers of Yama who are; naṉṟum kŏṭiya very cruel; nalintu valintu forcefully drag me; paṟṟum potu and catch hold of; ĕṉṉai me; aṉṟu aṅku on that day, in that place; nī ĕṉṉai You must; kākka veṇṭum protect me with Your grace

PAT 4.10.10

432 மாயவனைமதுசூதனனை
மாதவனைமறையோர்களேத்தும் *
ஆயர்களேற்றினைஅச்சுதனை
அரங்கத்தரவணைப்பள்ளியானை *
வேயர்புகழ்வில்லிபுத்தூர்மன்
விட்டுசித்தன்சொன்னமாலைபத்தும் *
தூயமனத்தனராகிவல்லார்
தூமணிவண்ணனுக்காளர்தாமே. (2)
432 ## மாயவனை மதுசூதனனை * மாதவனை மறையோர்கள் ஏத்தும் *
ஆயர்கள் ஏற்றினை அச்சுதனை * அரங்கத்து அரவணைப் பள்ளியானை **
வேயர் புகழ் வில்லிபுத்தூர் மன் * விட்டுசித்தன் சொன்ன மாலை பத்தும் *
தூய மனத்தினர் ஆகி வல்லார் * தூ மணிவண்ணனுக்கு ஆளர் தாமே (10)
432 ## māyavaṉai matucūtaṉaṉai * mātavaṉai maṟaiyorkal̤ ettum *
āyarkal̤ eṟṟiṉai accutaṉai * araṅkattu aravaṇaip pal̤l̤iyāṉai **
veyar pukazh villiputtūr maṉ * viṭṭucittaṉ cŏṉṉa mālai pattum *
tūya maṉattiṉar āki vallār * tū maṇivaṇṇaṉukku āl̤ar tāme (10)

Ragam

Ārabi / ஆரபி

Thalam

Ādi / ஆதி

Bhavam

Self

Divya Desam

Simple Translation

432. The chief of the Veyar, Vishnuchithan of Villiputhur, composed ten Tamil pāsurams on Māyavan, Madhusudanan, Mādhavan, Achudan and Arangan who rests on a snake bed. If devotees recite these ten pāsurams they will become pure-minded and will be devotees of the sapphire-colored lord.

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion (Aṉvayam). Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
மாயவனை ஆச்சரிய குணமுடையவனை; மதுசூதனனை அசுரனான மதுவை அழித்தவனை; மாதவனை லக்ஷ்மி பிராட்டியின் நாதனை; மறையோர்கள் வேத விற்பன்னர்களால்; ஏத்தும் துதிக்கப்படுபவனும்; ஆயர்கள் ஆயர்களின்; ஏற்றினை தலைவனுமான; அச்சுதனை அச்சுதனை; அரங்கத்து திருவரங்கத்தில்; அரவணை ஆதிசேஷன் மீது; பள்ளியானை! சயனித்திருப்பவனைக் குறித்து; வேயர் புகழ் வேயர் குலம் புகழும்; வில்லிபுத்தூர் மன் வில்லிபுத்தூர் பிரான்; விட்டுசித்தன் பெரியாழ்வார்; சொன்ன மாலை அருளிச்செய்த பத்து; பத்தும் பாசுரங்களையும்; தூய மனத்தனர் ஆகி தூய மனத்தோடு; வல்லார் அனுசந்திப்பவர்; தூமணி தூய்மையான; வண்ணனுக்கு ரத்ன நிறமுடையவனுக்கு; ஆளர் தாமே அடிமை செய்யப் பெருவர்
ettum He who is praised; maṟaiyorkal̤ by vedic scholars; mātavaṉai the Lord of Goddess Lakshmi; matucūtaṉaṉai He is the one who destroyed the demon Madhu; māyavaṉai and the one who possesses wondrous qualities; vallār those who recite with; tūya maṉattaṉar āki pure mind; cŏṉṉa mālai these ten; pattum hymns; viṭṭucittaṉ composed by Periazhwar; villiputtūr maṉ the Chieftan of Sri Villiputhur; veyar pukaḻ about the One who is praised by Yadhavas; pal̤l̤iyāṉai! the One who rests on; aravaṇai Adisesha; araṅkattu at Sri Rangam; eṟṟiṉai the Leader of; āyarkal̤ the cowherds; accutaṉai Achyutan; āl̤ar tāme will become devoted servants; vaṇṇaṉukku of the Lord who has the hue of a gem that is; tūmaṇi pure