Praising the Lord of Araṅgam Who Reclines on the Serpent Couch: For That Final Moment, I Have Declared My Surrender Right Now
அரவணைப்பள்ளிகொள் அரங்கனைப் போற்றல் அப்போதைக்கு இப்போதே சொல்லி வைத்தேன்
423 துப்புடையாரைஅடைவதெல்லாம்
சோர்விடத்துத்துணையாவரென்றே *
ஒப்பிலேனாகிலும்நின்னடைந்தேன்
ஆனைக்குநீஅருள்செய்தமையால் *
எய்ப்புஎன்னைவந்துநலியும்போது
அங்குஏதும்நானுன்னைநினைக்கமாட்டேன் *
அப்போதைக்குஇப்போதேசொல்லிவைத்தேன்
அரங்கத்தரவணைப்பள்ளியானே. (2)