PAT 4.10.8

O Great Wondrous One Born in Mathurā! Protect Me

மதுரைப் பிறந்த மாமாயனே! என்னைக் காத்திடு

430 நான்ஏதும்உன்மாயமொன்றறியேன்

நமன்தமர்பற்றிநலிந்திட்டு * இந்த

ஊனேபுகேயென்றுமோதும்போது

அங்கேதும் நான்உன்னைநினைக்கமாட்டேன் *

வானேய்வானவர்தங்களீசா!

மதுரைப்பிறந்தமாமாயனே! * என்

ஆனாய்! நீஎன்னைக்காக்கவேண்டும்

அரங்கத்தரவணைப்பள்ளியானே.

Text size