Your browser does not support the audio element.
audio
545 மன்னுபெரும்புகழ்மாதவன்
மாமணிவண்ணன் மணிமுடிமைந்தன்
தன்னை * உகந்ததுகாரணமாக
என்சங்கிழக்கும்வழக்குண்டே? *
புன்னைகுருக்கத்திஞாழல்செருந்திப்
பொதும்பினில்வாழும்குயிலே! *
பன்னியெப்போதுமிருந்துவிரைந்து என்
பவளவாயன்வரக்கூவாய். (2)
546 வெள்ளைவிளிசங்கிடங்கையிற்கொண்ட
விமலனெனக்குருக்காட்டான் *
உள்ளம்புகுந்தென்னைநைவித்து
நாளும் உயிர்பெய்து கூத்தாட்டுக்காணும் *
கள்ளவிழ்செண்பகப்பூமலர்கோதிக்
களித்திசைபாடுங்குயிலே! *
மெள்ளவிருந்துமிழற்றிமிழற்றாது என்
வேங்கடவன்வரக்கூவாய்.
547 மாதலிதேர்முன்புகோல்கொள்ள
மாயன்இராவணன் மேல் * சரமாரி
தாய்தலையற்றற்றுவீழத் தொடுத்த
தலைவன்வரவெங்குங்காணேன்! *
போதலர்காவில்புதுமணம்நாறப்
பொறிவண்டின்காமரங்கேட்டு * உன்
காதலியோடுடன்வாழ்குயிலே! என்
கருமாணிக்கம்வரக்கூவாய்.
548 என்புருகியினவேல்நெடுங்கண்கள்
இமைபொருந்தாபலநாளும் *
துன்பக்கடல்புக்குவைகுந்தனென்பது ஒர்
தோணிபெறாதுஉழல்கின்றேன் *
அன்புடையாரைப்பிரிவுறுநோயது
நீயுமறிதிகுயிலே! *
பொன்புரைமேனிக்கருளக்கொடியுடைப்
புண்ணியனைவரக்கூவாய்.
549 மென்னடையன்னம்பரந்துவிளையாடும்
வில்லிபுத்தூருறைவான்றன் *
பொன்னடிகாண்பதோராசையினால் என்
பொருகயற்கண்ணிணை துஞ்சா *
இன்னடிசிலொடுபாலமுதூட்டி
எடுத்தவென்கோலக்கிளியை *
உன்னொடுதோழமைகொள்ளுவன்குயிலே!
உலகளந்தான்வரக்கூவாய். (2)
550 எத்திசை யுமமரர்பணிந்தேத்தும்
இருடீகேசன்வலிசெய்ய *
முத்தன்னவெண்முறுவற்செய்யவாயும்
முலயுமழகழிந்தேன்நான் *
கொத்தலர்காவில்மணித்தடம் கண்படை
கொள்ளுமிளங்குயிலே! * என்
தத்துவனை வரக்கூகிற்றியாகில்
தலையல்லால்கைம்மாறிலேனே.
551 பொங்கியபாற்கடல்பள்ளிகொள்வானைப்
புணர்வதோராசயினால் * என்
கொங்கைகிளர்ந்துகுமைத்துக்குதுகலித்
தாவியையாகுலஞ்செய்யும் *
அங்குயிலே! உனக்கென்னமறைந்துறைவு ?
ஆழியும்சங்குமொண்தண்டும் *
தங்கியகையவனைவரக்கூவில் நீ
சாலத்தருமம்பெறுதி.
552 சார்ங்கம்வளையவலிக்கும்தடக்கைச்
சதுரன்பொருத்தமுடையன் *
நாங்களெம்மில்லிருந்தொட்டியகச்சங்கம்
நானுமவனுமறிதும் *
தேங்கனிமாம்பொழில்செந்தளிர்கோதுஞ்
சிறுகுயிலே! * திருமாலை
ஆங்குவிரைந்தொல்லைக்கூகிற்றியாகில்
அவனைநான்செய்வனகாணே.
553 பைங்கிளிவண்ணன்சிரீதரனென்பதோர்
பாசத்தகப்பட்டிருந்தேன் *
பொங்கொளிவண்டிரைக்கும்பொழில்வாழ்குயிலே!
குறிக்கொண்டிதுநீகேள் *
சங்கொடுசக்கரத்தான்வரக்கூவுதல்
பொன்வளைகொண்டுதருதல் *
இங்குள்ளகாவினில்வாழக்கருதில்
இரண்டத்தொன்றேல்திண்ணம்வேண்டும்.
554 அன்றுலகம்மளந்தானையுகந்து
அடிமைக்கணவன்வலிசெய்ய *
தென்றலுந்திங்களுமூடறுத்தென்னை
நலியும்முறைமையறியேன் *
என்றுமிக்காவிலிருந்திருந்து
என்னைத் ததர்த்தாதேநீயும் குயிலே *
இன்றுநாராயணனைவரக்கூவாயேல்
இங்குற்றுநின்றும்துரப்பன்.
555 விண்ணுறநீண்டடிதாவியமைந்தனை
வேற்கண்மடந்தைவிரும்பி *
கண்ணுறவென்கடல்வண்ணனைக் கூவு
கருங்குயிலே! என்றமாற்றம் *
பண்ணுறுநான்மறையோர்புதுவைமன்னன்
பட்டர்பிரான்கோதைசொன்ன *
நண்ணுறுவாசகமாலைவல்லார்
நமோநாராயணாயவென்பாரே. (2)