Your browser does not support the audio element.
audio
534 தெள்ளியார்பலர் கைதொழுந்தேவனார் *
வள்ளல் மாலிருஞ்சோலைமணாளனார் *
பள்ளிகொள்ளுமிடத்து அடிகொட்டிட *
கொள்ளுமாகில் நீகூடிடுகூடலே (2)
535 காட்டில்வேங்கடம் கண்ணபுரநகர் *
வாட்டமின்றி மகிழ்ந்துறைவாமனன் *
ஓட்டராவந்து என்கைப்பற்றி * தன்னொடும்
கூட்டுமாகில் நீகூடிடுகூடலே. (2 )
536 பூமகன்புகழ்வானவர் போற்றுதற்
காமகன் * அணிவாணுதல் தேவகி
மாமகன் * மிகுசீர் வசுதேவர்தம்
கோமகன்வரில் கூடிடுகூடலே.
537 ஆய்ச்சிமார்களும் ஆயருமஞ்சிட *
பூத்தநீள்கடம்பேறிப் புகப்பாய்ந்து *
வாய்த்தகாளியன்மேல் நடமாடிய *
கூத்தனார்வரில் கூடிடுகூடலே.
538 மாடமாளிகை சூழ்மதுரைப்பதி
நாடி * நந்தெருவின் நடுவேவந்திட்டு *
ஓடைமாமதயானை யுதைத்தவன் *
கூடுமாகில் நீ கூடிடுகூடலே.
539 அற்றவன் மருதம்முறியநடை
கற்றவன் * கஞ்சனை வஞ்சனையிற்
செற்றவன் * திகழும் மதுரைப்பதி *
கொற்றவன்வரில் கூடிடுகூடலே.
540 அன்றின்னாதனசெய் சிசுபாலனும் *
நின்றநீள்மருதும் மெருதும்புள்ளும் *
வென்றிவேல்விறல் கஞ்சனும் வீழ * முன்
கொன்றவன்வரில் கூடிடுகூடலே.
541 ஆவலன்புடையார்தம் மனத்தன்றி
மேவலன் * விரைசூழ் துவராபதிக்
காவலன் * கன்றுமேய்த்து விளையாடும் *
கோவலன்வரில் கூடிடுகூடலே.
542 கொண்டகோலக் குறளுருவாய்ச்சென்று *
பண்டுமாவலிதன் பெருவேள்வியில் *
அண்டமும்நிலனும்அடியொன்றினால் *
கொண்டவன்வரில் கூடிடுகூடலே.
543 பழகுநான்மறையின்பொருளாய் * மத
ஒழுகுவாரண முய்யவளித்த * எம்
அழகனார் அணியாய்ச்சியர் சிந்தையுள்
குழகனார் * வரில் கூடிடுகூடலே.
544 ஊடல்கூடல் உணர்தல்புணர்தலை *
நீடுநின்ற நிறைபுகழாய்ச்சியர் *
கூடலைக் குழற்கோதைமுன்கூறிய *
பாடல்பத்தும்வல்லார்க்கு இல்லைபாவமே.