Chapter 13

The love sickness of a girl - (கண்ணன் என்னும்)

கண்ணன் உகந்த பொருள்கொண்டு காதல்நோய் தணிமின் எனல்
The love sickness of a girl - (கண்ணன் என்னும்)
"Mothers! Stop giving me advice and instead, bring Krishna's yellow garment and wave it over me. Bring the sacred Tulasi that He wore and adorn my hair with it. Bring His forest garland and place it on me. Take the soil from the places where He walked and apply it on me. If you follow any of these methods, you can save me," says Andal.
தாய்மார்களே! எனக்கு உபதேசம் செய்வதை நிறுத்திவிட்டு, கண்ணன் அணிந்த பீதாம்பரத்தைக் கொண்டு வந்து என்மீது வீசுங்கள். அவனணிந்த திருத்துழாயைக் கொண்டு வந்து என் கூந்தலில் செருகுங்கள். அவனுடைய வனமாலையைக் கொண்டு வந்து என்மீது போட்டுப் புரட்டுங்கள். அவன் நடந்து சென்ற இடங்களிலுள்ள மண்ணைக் கொண்டு வந்து என்மீது பூசுங்கள். இம்முறைகளுள் ஏதேனும் ஒன்றைப் பின்பற்றினால் நீங்கள் என்னைக் காப்பாற்றலாம் என்று ஆண்டாள் கூறுகிறாள்.
Verses: 627 to 636
Grammar: Aṟuchīrk Kaḻinediladi Āsiriya Viruththam / அறுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்
Recital benefits: Will not suffer the ocean of sorrow
Tamil
Simplified
English
Verse info
Synonyms
Translation

NAT 13.1

627 கண்ணனென்னும்கருந்தெய்வம் காட்சிபழகிக்கிடப்பேனை *
புண்ணில்புளிப்பெய்தாற் போலப்புறநின்றழகுபேசாதே *
பெண்ணின்வருத்தமறியாத பெருமா னரையில்பீதக
வண்ணஆடைகொண்டு * என்னை வாட்டம்தணியவீசீரே. (2)
627 ## கண்ணன் என்னும் கருந்தெய்வம் * காட்சிப் பழகிக் கிடப்பேனை *
புண்ணில் புளிப் பெய்தால் போலப் * புறம் நின்று அழகு பேசாதே **
பெண்ணின் வருத்தம் அறியாத * பெருமான் அரையில் பீதக *
வண்ண ஆடை கொண்டு * என்னை வாட்டம் தணிய வீசீரே (1)
627 ## kaṇṇaṉ ĕṉṉum karuntĕyvam * kāṭcip pazhakik kiṭappeṉai *
puṇṇiṟ pul̤ip pĕytāl polap * puṟam niṉṟu azhaku pecāte **
pĕṇṇiṉ varuttam aṟiyāta * pĕrumāṉ araiyil pītaka *
vaṇṇa āṭai kŏṇṭu * ĕṉṉai vāṭṭam taṇiya vīcīre (1)

Ragam

Bhairavi / பைரவி

Thalam

Ādi / ஆதி

Bhavam

Nāyaki (lovelorn lady)

Simple Translation

627. "O mothers! I lie immersed in the sight of the dark -hued Kannan. Your gossip is like pouring tamarind juice on a wound. Bring the colorful silk cloth that adorns the waist of the Lord who doesn't understand a girl's despair. Fan me with His waist cloth to give me solace. "

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion (Aṉvayam). Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
கண்ணன் என்னும் கிருஷ்ணன் என்கிற; கருந்தெய்வம் கருமையான தெய்வத்தின்; காட்சி பழகி காட்சியிலே பழகி; கிடப்பேனை கிடக்கிற என்னை; புண்ணில் புளி புண்ணிலே புளி ரஸத்தை; பெய்தாற் போல சொரிந்தாற்போல்; புறம் நின்று வெளியே நின்று; அழகுபேசாதே கேலி பேசுவதைத் தவிர்த்து; பெண்ணின் வருத்தம் பெண்ணின் வருத்தம்; அறியாத அறியாத; பெருமான் பெருமானுடைய; அரையில் இடுப்பில் சாத்திய; பீதக வண்ண ஆடை பீதாம்பரத்தை; கொண்டு கொண்டுவந்து; என்னை வாட்டம் தணிய என் தாபம் தீரும்படி; வீசீரே வீசுங்கள்

NAT 13.2

628 பாலாலிலையில்துயில்கொண்ட பரமன்வலைப்பட்டிருந்தேனை *
வேலால்துன்னம்பெய்தாற்போல் வேண்டிற்றெல்லாம்பேசாதே *
கோலால்நிரைமேய்த் தாயனாய்க் குடந்தைக்கிடந்தகுடமாடி *
நீலார் தண்ணந்துழாய்கொண்டு என்நெறிமென்குழல்மேல்சூட்டீரே.
628 பால் ஆலிலையில் துயில் கொண்ட * பரமன் வலைப்பட்டு இருந்தேனை *
வேலால் துன்னம் பெய்தால் போல் * வேண்டிற்று எல்லாம் பேசாதே **
கோலால் நிரைமேய்த்து ஆயனாய்க் * குடந்தைக் கிடந்த குடம் ஆடி *
நீலார் தண்ணந் துழாய் கொண்டு * என் நெறி மென் குழல்மேல் சூட்டிரே (2)
628 pāl ālilaiyil tuyil kŏṇṭa * paramaṉ valaippaṭṭu irunteṉai *
velāl tuṉṉam pĕytāl pol * veṇṭiṟṟu ĕllām pecāte **
kolāl niraimeyttu āyaṉāyk * kuṭantaik kiṭanta kuṭam āṭi *
nīlār taṇṇan tuzhāy kŏṇṭu * ĕṉ nĕṟi mĕṉ kuzhalmel cūṭṭire (2)

Ragam

Bhairavi / பைரவி

Thalam

Ādi / ஆதி

Bhavam

Nāyaki (lovelorn lady)

Divya Desam

Simple Translation

628. "I am trapped in the love-net of the supreme Lord who rested as an infant on a tender banyan leaf. Don’t gossip thoughtlessly as if you are piercing someone with a spear. He is a cowherd and grazes the cows holding a stick, and he danced on a pot in Kudandai. (Kumbakonam) Bring the cool thulasi garland of the dark-colored Kannan to decorate my soft curly hair. ”

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion (Aṉvayam). Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
பால் ஆலிலையில் பால் பாயும் ஆலந்தளிரிலே; துயில் கொண்ட கண்வளர்ந்த; பரமன் வலை பெருமானுடைய வலையிலே; பட்டு அகப்பட்டுக் கொண்டிருக்கிற; இருந்தேனை என்னை; வேலால் துன்னம் வேலாயுதத்தை இட்டு; பெய் தாற்போல் துளைத்தாற்போல்; வேண்டிற்று எல்லாம் தோன்றிய படியெல்லாம்; பேசாதே பேசாமல்; ஆயனாய் ஆயர்ப் பிள்ளையாய்; கோலால் கோலைக்கொண்டு; நிரைமேய்த்து பசுக்களை மேய்த்தவனாய்; குடந்தைக் கிடந்த திருக்குடந்தையில்; குடம் ஆடி குடக்கூடத்தாடி; நீலார் தண் அம் பசுமை மிக்க குளிர்ந்த அழகிய; துழாய் திருத்துழாயை; கொண்டு என் கொண்டு வந்து என்; நெறி மென் மென்மையாகயிருக்கும் என்; குழல் மேல் கூந்தலிலே; சூட்டீரே சூட்டுங்கள்

NAT 13.3

629 கஞ்சைக்காய்ந்தகருவல்லி கடைக்கணென்னும்சிறைக்கோலால் *
நெஞ்சூடுருவவேவுண்டு நிலையும்தளர்ந்துநைவேனை *
அஞ்சேலென்னானவனொருவன் அவன்மார்வணிந்தவனமாலை *
வஞ்சியாதேதருமாகில் மார்வில்கொணர்ந்துபுரட்டீரே.
629 கஞ்சைக் காய்ந்த கருவில்லி * கடைக்கண் என்னும் சிறைக்கோலால் *
நெஞ்சு ஊடுருவ வேவுண்டு * நிலையும் தளர்ந்து நைவேனை **
அஞ்சேல் என்னான் அவன் ஒருவன் * அவன் மார்வு அணிந்த வனமாலை *
வஞ்சியாதே தருமாகில் * மார்வில் கொணர்ந்து புரட்டீரே (3)
629 kañcaik kāynta karuvilli * kaṭaikkaṇ ĕṉṉum ciṟaikkolāl *
nĕñcu ūṭuruva vevuṇṭu * nilaiyum tal̤arntu naiveṉai **
añcel ĕṉṉāṉ avaṉ ŏruvaṉ * avaṉ mārvu aṇinta vaṉamālai *
vañciyāte tarumākil * mārvil kŏṇarntu puraṭṭīre (3)

Ragam

Bhairavi / பைரவி

Thalam

Ādi / ஆதி

Bhavam

Nāyaki (lovelorn lady)

Simple Translation

629. “He killed Kamsan and With his strong bow-like eyebrows, He pierces my heart through the glances from the corners of his eyes, like sharp spears that make me weak and hurt. But he doesn’t tell me, “Don’t be afraid!. ” O mothers, if that matchless lord gives the garland from his chest and doesn’t cheat me, bring it and spread it on my chest. ”

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion (Aṉvayam). Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
கஞ்சை கம்சனை; காய்ந்த தொலைத்தவனாயும்; கருவில்லி பெரிய வில் போன்ற புருவத்தையுடைய; கடைக்கண் என்னும் தன் கடைக்கண்ணாகிற; சிறைக்கோலால் சிறகையுடைய அம்பாலே; நெஞ்சு ஊடுருவ நெஞ்சம் ஊடுருவ; வேவுண்டு வெந்து போய்; நிலையும் தளர்ந்து நிலைமை குலைந்து; நைவேனை வருந்துகின்ற என்னை; அஞ்சேல் பயப்படாதே; என்னான் என்ற வார்த்தையும்; அவன் ஒருவன் சொல்லாதவன்; அவன் அப்பெருமான்; மார்வு அணிந்த திருமார்பில் அணிந்த; வனமாலை வனமாலையை; வஞ்சியாதே ஏமாற்றாமல்; தருமாகில் தருவானாகில்; கொணர்ந்து அதைக் கொண்டு வந்து; மார்வில் என்னுடைய மார்பிலே; புரட்டீரே புரட்டுங்கள்

NAT 13.4

630 ஆரேயுலகத்தாற்றுவார்? ஆயர்பாடிகவர்ந்துண்ணும் *
காரேறுழக்கவுழக்குண்டு தளர்ந்தும்முறிந்தும்கிடப்பேனை *
ஆராவமுதமனையான்றன் அமுதவாயிலூறிய *
நீர்தான்கொணர்ந்துபுலராமே பருக்கியிளைப்பைநீக்கிரே.
630 ஆரே உலகத்து ஆற்றுவார்? * ஆயர்பாடி கவர்ந்து உண்ணும் *
காரேறு உழக்க உழக்குண்டு * தளர்ந்தும் முறிந்தும் கிடப்பேனை **
ஆராவமுதம் அனையான் தன் * அமுத வாயில் ஊறிய *
நீர்தான் கொணர்ந்து புலராமே * பருக்கி இளைப்பை நீக்கீரே (4)
630 āre ulakattu āṟṟuvār? * āyarpāṭi kavarntu uṇṇum *
kāreṟu uzhakka uzhakkuṇṭu * tal̤arntum muṟintum kiṭappeṉai **
ārāvamutam aṉaiyāṉ taṉ * amuta vāyil ūṟiya *
nīrtāṉ kŏṇarntu pularāme * parukki il̤aippai nīkkīre (4)

Ragam

Bhairavi / பைரவி

Thalam

Ādi / ஆதி

Bhavam

Nāyaki (lovelorn lady)

Divya Desam

Simple Translation

630. “He is as sweet as nectar, This dark bull who stole butter and milk from the cowherd women of Gokulam has made me weak with love for him and I am heartbroken. Who can relieve me of this sorrow? If you bring the water that drips from his the nectar-like mouth, and feed that to me, the weakness of my body and my love sickness will go away. ”

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion (Aṉvayam). Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
ஆயர் பாடி ஆயர்பாடி முழுவதையும்; கவர்ந்து உண்ணும் கவர்ந்து அநுபவிக்கிற; காரேர் ஒரு கறுத்த காளையான பிரான்; உழக்க இம்சிக்க; உழக்கு உண்டு அதனால் துன்பப்பட்டு; தளர்ந்தும் முறிந்தும் தளர்ந்தும் முறிந்தும்; கிடப்பேனை கிடக்கும் என்னை; உலகத்து இவ்வுலகத்திலே; ஆற்றுவார் ஆரே? தேறுதல் செய்பவர் ஆருண்டு?; ஆராவமுதம் ஆரா அமுதமான; அனையான் தன் பிரானுடைய; அமுத அமிர்தம் சுரக்கும்; வாயில் ஊறிய வாயில் ஊறிக்கிடக்கிற; நீர் தான் ரசத்தையாவது; கொணர்ந்து கொண்டு வந்து; புலராமே உடல் உலர்ந்து போகாமல் இருக்க; பருக்கி நான் பருகும்படி பண்ணி; இளைப்பை நீக்கீரே தளர்ச்சியை நீக்குவீரே

NAT 13.5

631 அழிலும்தொழிலுமுருக்காட்டான் அஞ்சேலென்னானவனொருவன் *
தழுவிமுழுகிப்புகுந்தென்னைச் சுற்றிச்சுழன்றுபோகானால் *
தழையின்பொழில்வாய்நிரைப்பின்னே நெடுமாலூதிவருகின்ற *
குழலின்தொளைவாய்நீர்கொண்டு குளிரமுகத்துத்தடவீரே.
631 அழிலும் தொழிலும் உருக் காட்டான் * அஞ்சேல் என்னான் அவன் ஒருவன் *
தழுவி முழுசிப் புகுந்து என்னைச் * சுற்றிச் சுழன்று போகானால் **
தழையின் பொழில்வாய் நிரைப் பின்னே * நெடுமால் ஊதி வருகின்ற *
குழலின் தொளைவாய் நீர் கொண்டு * குளிர முகத்துத் தடவீரே (5)
631 azhilum tŏzhilum uruk kāṭṭāṉ * añcel ĕṉṉāṉ avaṉ ŏruvaṉ *
tazhuvi muzhucip pukuntu ĕṉṉaic * cuṟṟic cuzhaṉṟu pokāṉāl **
tazhaiyiṉ pŏzhilvāy niraip piṉṉe * nĕṭumāl ūti varukiṉṟa *
kuzhaliṉ tŏl̤aivāy nīr kŏṇṭu * kul̤ira mukattut taṭavīre (5)

Ragam

Bhairavi / பைரவி

Thalam

Ādi / ஆதி

Bhavam

Nāyaki (lovelorn lady)

Simple Translation

631. "He who doesn't appear whether you weep or worship, He who doesn't say, "Don't be afraid", came and tightly embraced me and surrounded me totally and now seems to follow me everywhere without ever leaving. Sprinkle the water that comes from the holes of His flute on my face as he plays it walking behind his cows in the grove. ”

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion (Aṉvayam). Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
அழிலும் அழுதாலும்; தொழிலும் தொழுதாலும்; உரு தன் வடிவை; காட்டான் காட்டாதவனாயும்; அஞ்சேல் அஞ்சேல் என்று; என்னான் சொல்லாதவனாயுமுள்ள; அவன் ஒருவன் அவன் ஒருவன்; புகுந்து என்னை இங்கே வந்து; தழுவி என்னை தழுவி; முழுசி நெருக்கியணைத்து; சுற்றிச் முன்னும் பின்னும்; சுழன்று சூழ்ந்து கொண்டு; போகானால் போகாமலிருக்கிறானே (கற்பனையே); தழையின் பீலிக் குடைகளாகிற; பொழில் வாய் சோலையின் கீழே; நிரைப் பின்னே பசுக்களின் மீது; நெடு மால் பெருங் காதலுடையவன்; ஊதி வருகின்ற ஊதிக்கொண்டு வரும்; குழலின் புல்லாங்குழலின்; தொளை துளைகளிலுள்ள; வாய்நீர் வாய் நீரை; கொண்டு கொண்டு வந்து; முகத்து என்னுடைய முகத்திலே; குளிர தடவீரே! குளிரும்படி தடவுங்கள்

NAT 13.6

632 நடையொன்றில்லாவுலகத்து நந்தகோபன்மகனென்னும் *
கொடியகடியதிருமாலால் குளப்புக்கூறுகொளப்பட்டு *
புடையும்பெயரகில்லேன்நான் போட்கன்மிதித்தஅடிப்பாட்டில் *
பொடித்தான்கொணர்ந்துபூசீர்கள் போகாவுயிரென்னுடம்பையே.
632 நடை ஒன்று இல்லா உலகத்து * நந்தகோபன் மகன் என்னும் *
கொடிய கடிய திருமாலால் * குளப்புக்கூறு கொளப்பட்டு **
புடையும் பெயரகில்லேன் நான் * போழ்க்கன் மிதித்த அடிப்பாட்டில் *
பொடித்தான் கொணர்ந்து பூசீர்கள் * போகா உயிர் என் உடம்பையே (6)
632 naṭai ŏṉṟu illā ulakattu * nantakopaṉ makaṉ ĕṉṉum *
kŏṭiya kaṭiya tirumālāl * kul̤appukkūṟu kŏl̤appaṭṭu **
puṭaiyum pĕyarakilleṉ nāṉ * pozhkkaṉ mititta aṭippāṭṭil *
pŏṭittāṉ kŏṇarntu pūcīrkal̤ * pokā uyir ĕṉ uṭampaiye (6)

Ragam

Bhairavi / பைரவி

Thalam

Ādi / ஆதி

Bhavam

Nāyaki (lovelorn lady)

Simple Translation

632. “This world is unfair. Thirumāl, the son of Nandagopan, makes me suffer as if I were crushed beneath the feet of a bull. I can’t even move. Bring the dust from where He has walked, smear it on me, and I will survive. "

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion (Aṉvayam). Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
நடை ஒன்று மரியாதை என்பது; இல்லா குலைந்து கிடக்கிற; உலகத்து இவ்வுலகத்து; நந்தகோபன் நந்த கோபரின்; மகன் என்னும் மகன் என்பவனால்; குளப்புக் கூறு மிக்க துன்ப; கொளப்பட்டு படுத்தப்பட்டு; புடையும் அங்குமிங்கும்; பெயரகில்லேன் அசையக்கூட முடியாதவளாய்; நான் நான் நின்றேன்; போட்கன் கால் குளம்பாலே பிளவுபட்ட; கொடிய கடிய இரக்கமற்ற கடுமையானவனான; திருமாலால் கண்ணனாலே; திருமாலால் கண்ணனாலே; மிதித்த திருவடி பட்டு மிதித்த; அடிப்பாட்டில் இடத்திலுண்டான; பொடித்தான் ஸ்ரீபாத தூளியையாவது; கொணர்ந்து கொணர்ந்து; போகா உயிர் போகாத உயிரையுடைய; என் உடம்பையே என் உடம்பிலே; பூசீர்கள் பூசுங்கள்

NAT 13.7

633 வெற்றிக்கருளகொடியான்றன் மீமீதாடாவுலகத்து *
வெற்றவெறிதேபெற்றதாய் வேம்பேயாகவளர்த்தாளே *
குற்றமற்றமுலைதன்னைக் குமரன்கோலப்பணைத்தோளோடு *
அற்றகுற்றமவைதீர அணையவமுக்கிக்கட்டீரே.
633 வெற்றிக் கருளக் கொடியான்தன் * மீமீது ஆடா உலகத்து *
வெற்ற வெறிதே பெற்ற தாய் * வேம்பே ஆக வளர்த்தாளே **
குற்றம் அற்ற முலைதன்னைக் * குமரன் கோலப் பணைத்தோளோடு *
அற்ற குற்றம் அவை தீர * அணைய அமுக்கிக் கட்டீரே (7)
633 vĕṟṟik karul̤ak kŏṭiyāṉtaṉ * mīmītu āṭā ulakattu *
vĕṟṟa vĕṟite pĕṟṟa tāy * vempe āka val̤arttāl̤e **
kuṟṟam aṟṟa mulaitaṉṉaik * kumaraṉ kolap paṇaittol̤oṭu *
aṟṟa kuṟṟam avai tīra * aṇaiya amukkik kaṭṭīre (7)

Ragam

Bhairavi / பைரவி

Thalam

Ādi / ஆதி

Bhavam

Nāyaki (lovelorn lady)

Simple Translation

633. "Carrying a victorious eagle flag, He rules the world and all obey him. Yashodā raised him but she only made him like an unripe, bitter fruit. If he embraces tightly my faultless breasts with his young strong arms, my faults will go away and I will be happy. ”

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion (Aṉvayam). Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
வெற்றிக் கருள கருடனை வெற்றி; கொடியான் கொடியாகவுடைய; தன் பிரானின்; மீமீது ஆடா ஆணையை; உலகத்து மீறாத உலகத்தில்; வெற்ற வெறிதே வெறுமனே; பெற்ற தாய் யசோதையானவள்; வேம்பே ஆக வேப்பங்காய் போலவே; வளர்த்தாளே வளர்த்தாள்; குற்றம் அற்ற குற்றம் இல்லாத; முலைதன்னை என் மார்பில்; குமரன் கோல குமரனாவன் அழகியதாயும்; பணை கற்பகக் கிளைபோன்ற; தோளோடு தோளோடு; அற்ற குற்றம் என்னைக் கைவிட்ட குற்றம்; அவை தீர தீரும்படி; அணைய அணைத்து; அமுக்கிக் கட்டீரே அமுத்திக் கட்டிடுவீர்

NAT 13.8

634 உள்ளேயுருகிநைவேனை உளளோஇலளோவென்னாத *
கொள்ளைகொள்ளிக்குறும்பனைக் கோவர்த்தனனைக்கண்டக்கால் *
கொள்ளும்பயனொன்றில்லாத கொங்கைதன்னைக்கிழங்கோடும் *
அள்ளிப்பறித்திட்டவன்மார்விலெறிந்து என்னழலைத்தீர்வேனே.
634 உள்ளே உருகி நைவேனை * உளளோ இலளோ என்னாத *
கொள்ளை கொள்ளிக் குறும்பனைக் * கோவர்த்தனனைக் கண்டக்கால் **
கொள்ளும் பயன் ஒன்று இல்லாத * கொங்கை தன்னைக் கிழங்கோடும் *
அள்ளிப் பறித்திட்டு அவன் மார்வில் எறிந்து * என் அழலைத் தீர்வேனே (8)
634 ul̤l̤e uruki naiveṉai * ul̤al̤o ilal̤o ĕṉṉāta *
kŏl̤l̤ai kŏl̤l̤ik kuṟumpaṉaik * kovarttaṉaṉaik kaṇṭakkāl **
kŏl̤l̤um payaṉ ŏṉṟu illāta * kŏṅkai taṉṉaik kizhaṅkoṭum *
al̤l̤ip paṟittiṭṭu avaṉ mārvil ĕṟintu * ĕṉ azhalait tīrveṉe (8)

Ragam

Bhairavi / பைரவி

Thalam

Ādi / ஆதி

Bhavam

Nāyaki (lovelorn lady)

Simple Translation

634. “My heart melts for Him who carried Govardhanā mountain (Madhura) and I suffer. He doesn’t even care whether I’m alive or not. If I see that mischievous one who stole my heart, I will pluck my bosoms and throw them on his chest. Perhaps that will make my fiery anger cool. ”

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion (Aṉvayam). Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
உள்ளே உள்ளுக்குள்ளேயே; உருகி உருகி; நைவேனை நைந்து போகிற; என்னைப்பற்றி என்னைப்பற்றி; உளளோ இருக்கிறாளா; இலளோ இல்லையா என்றும்; என்னாத கேளாத; கொள்ளை என்னையே கொள்ளை; கொள்ளி கொண்ட; குறும்பனை குறும்புக்காரனான; கோவர்த்தனனை கண்ணபிரானை; கண்டக்கால் நான் கண்டேனாகில்; கொள்ளும் பயன் கொள்ளும் பயன்; ஒன்று இல்லாத ஒன்று இல்லாத; கொங்கை தன்னை என் மார்பை; கிழங்கோடும் வேரோடே; அள்ளிப் பறித்திட்டு பற்றிப்பிடுங்கி; அவன் அந்த பிரானுடைய; மார்வில் மார்பிலே; எறிந்து எறிந்துவிட்டு; என் அழலை எனது துக்கத்தை; தீர்வேனே போக்கிக்கொள்வேன்

NAT 13.9

635 கொம்மைமுலைகளிடர்தீரக் கோவிந்தற்கோர்குற்றேவல் *
இம்மைப்பிறவிசெய்யாதே இனிப்போய்ச்செய்யும்தவந்தானென் *
செம்மையுடையதிருமார்வில் சேர்த்தானேலும்ஒருஞான்று *
மெய்ம்மைசொல்லிமுகம்நோக்கி விடைதான்தருமேல்மிகநன்றே.
635 கொம்மை முலைகள் இடர் தீரக் * கோவிந்தற்கு ஓர் குற்றேவல் *
இம்மைப் பிறவி செய்யாதே * இனிப் போய்ச் செய்யும் தவம்தான் என்? **
செம்மை உடைய திருமார்வில் * சேர்த்தானேனும் ஒரு ஞான்று *
மெய்ம்மை சொல்லி முகம் நோக்கி * விடைதான் தருமேல் மிக நன்றே (9)
635 kŏmmai mulaikal̤ iṭar tīrak * kovintaṟku or kuṟṟeval *
immaip piṟavi cĕyyāte * iṉip poyc cĕyyum tavamtāṉ ĕṉ? **
cĕmmai uṭaiya tirumārvil * certtāṉeṉum ŏru ñāṉṟu *
mĕymmai cŏlli mukam nokki * viṭaitāṉ tarumel mika naṉṟe (9)

Ragam

Bhairavi / பைரவி

Thalam

Ādi / ஆதி

Bhavam

Nāyaki (lovelorn lady)

Simple Translation

635. If I cannot serve Govindan in this birth, that will relieve me of my bosoms' pain, what is the use of doing tapas in the future? If he embraces me with his chest it would be good, or if he looks at me and tells me the truth to my face, it would also be good. Isn’t it better if he tells me the truth?”

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion (Aṉvayam). Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
கொம்மை முலைகள் கிளர்ந்த மார்பின்; இடர் தீர குமைச்சல் தீரும்படி; கோவிந்தற்கு கண்ணபிரானுக்கு; ஓர் குற்றேவல் ஒரு கைங்கரியத்தை; இம்மைப் பிறவி இந்த இப்பிறவியிலே; செய்யாதே செய்யாது; இனிப்போய் இனி பின்பு; செய்யும் செய்யும்; தவம் தான் என் தபஸ் ஏதற்கு?; செம்மை உடைய செம்மை உடைய; திருமார்வில் திருமார்பிலே என்னை; சேர்த்தானேலும் சேர்த்துக் கொண்டால்; நன்று நல்லது; ஒரு நான்று ஒரு நாள்; மெய்ம்மை சொல்லி மெய்யே சொல்லி; முகம் நோக்கி என் முகத்தைப்பார்த்து; விடைதான் தருமேல் விடை கொடுத்தால்; மிக நன்றே அது மிக நல்லது

NAT 13.10

636 அல்லல்விளைத்தபெருமானை ஆயர்பாடிக்கணிவிளக்கை *
வில்லிபுதுவைநகர்நம்பி விட்டுசித்தன்வியன்கோதை *
வில்லைத்தொலைத்தபுருவத்தாள் வேட்கையுற்றுமிகவிரும்பும் *
சொல்லைத்துதிக்கவல்லார்கள் துன்பக்கடளுள்துவளாரே. (2)
636 ## அல்லல் விளைத்த பெருமானை * ஆயர்பாடிக்கு அணி விளக்கை *
வில்லி புதுவை நகர் நம்பி * விட்டுசித்தன் வியன் கோதை **
வில்லைத் தொலைத்த புருவத்தாள் * வேட்கை உற்று மிக விரும்பும் *
சொல்லைத் துதிக்க வல்லார்கள் * துன்பக் கடலுள் துவளாரே (10)
636 ## allal vil̤aitta pĕrumāṉai * āyarpāṭikku aṇi vil̤akkai *
villi putuvai nakar nampi * viṭṭucittaṉ viyaṉ kotai **
villait tŏlaitta puruvattāl̤ * veṭkai uṟṟu mika virumpum *
cŏllait tutikka vallārkal̤ * tuṉpak kaṭalul̤ tuval̤āre (10)

Ragam

Bhairavi / பைரவி

Thalam

Ādi / ஆதி

Bhavam

Nāyaki (lovelorn lady)

Divya Desam

Simple Translation

The chief of Villiputhur, Vishnuchittan's Kodai, composed pāsurams about how she (Andal) whose eyebrows are lovelier than bows, loved the dear Kannan, the bright light of the cowherd village of Gokulam and how He gave her pangs of love. Those who learn these pāsurams that describe her divine love for the dear God and worship Him will not suffer in the ocean of sorrow.

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion (Aṉvayam). Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
வில்லை வில்லை; தொலைத்த தோற்கடித்த; புருவத்தாள் புருவங்களையுடைய; வில்லிபுதுவை வில்லிபுத்தூர்; நகர்நம்பி பெரியோன்; விட்டுசித்தன் பெரியாழ்வாரின்; வியன் கோதை வியப்புக்குரிய ஆண்டாள்; அல்லல் விளைத்த துன்பம் விளைத்த; பெருமானை பிரானை; ஆயர்பாடிக்கு ஆயர் பாடிக்கு; அணி விளக்கை அணி போன்ற ஜோதி மீது; வேட்கை உற்று ஆசைப்பட்டு; மிக விரும்பும் மிகவும் விருப்பமான; சொல்லை சொன்ன பாசுரங்களை; துதிக்க வல்லார்கள் அனுசந்திப்பவர்கள்; துன்பக் கடலுள் துன்பக் கடலுள்; துவளாரே துவளமாட்டார்கள்