MUT 53

மனமே! ஆலிலைத் துயின்றவனைத் தொழு

2334 முயன்றுதொழுநெஞ்சே! மூரிநீர்வேலை *
இயன்றமரத்தாலிலையின்மேலால் * - பயின்றங்கோர்
மண்ணலங்கொள்வெள்ளத்து மாயக்குழவியாய் *
தண்ணலங்கல்மாலையான்தாள்.
2334 muyaṉṟu tŏzhu nĕñce! * mūri nīr velai *
iyaṉṟa marattu āl ilaiyiṉ melāl ** - payiṉṟu aṅku or
maṇ nalam kŏl̤ vĕl̤l̤attu * māyak kuzhaviyāy *
taṇ alaṅkal mālaiyāṉ tāl̤ -53

Ragam

Mohana / மோஹன

Thalam

Tiripuṭai / திரிபுடை

Bhavam

Self

Simple Translation

2334. The lord who slept on a banyan leaf on the ocean as a magic child at the end of the eon swallowed the earth and the flood of water. O heart, worship the feet of him adorned with a cool thulasi garland.

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion (Aṉvayam). Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
மூரி அலைகளையுடைய; நீர் நீரோடு கூடின; வேலை இயன்ற கடலிலிருக்கும்; ஆல மரத்து ஆலமரத்து; இலையின் மேலால் இலையின் மேல்; பயின்று சயனித்திருந்து; அங்கு அங்கே; மண் பூமியின் நன்மையை; நலம் கொள் அபகரித்த; வெள்ளத்து பிரளய வெள்ளத்தில்; ஓர் மாய ஆச்சர்யமான; குழவியாய் ஒரு குழந்தையாய்; தண் அலங்கல் குளிர்ந்து அசையும்; மாலையான் மாலை உடைய பெருமானின்; தாள் திருவடிகளை; நெஞ்சே! மனமே!; முயன்று தொழு முயன்று வணங்கு
mūri nīr vĕlai in the ocean having water with waves; iyanṛa fitting; ālamaraththu ilaiyin mĕlāl on top of a banyan leaf; payinṛu reclining for a long time; angu there; maṇ earth’s; nalam benefit; kol̤ seiśed; vel̤l̤aththu in the deluge; ŏr māyak kuzhavi āy as an amaśing child; thaṇ alangal mālaiyān thāl̤ emperumān who has a cool, swaying thul̤asi garland, such emperumān’s; thāl̤ divine feet; nenjĕ ŏh heart!; muyanṛu thozhu make an effort and worship