MLT 69

Where is the Tree that Bore the Banyan Leaf upon which You Rested?

நீ படுத்திருந்த ஆலிலை தாங்கிய மரம் எங்குள்ளது?

2150 பாலன்தனதுருவாய் ஏழுலகுண்டு * ஆலிலையின்
மேலன்று நீவளர்ந்தமெய்யென்பர் * - ஆலன்று
வேலைநீருள்ளதோ? விண்ணதோ? மண்ணதோ?
சோலைசூழ்குன்றெடுத்தாய்! சொல்லு.
2150 pālaṉ taṉatu uruvāy * ezh ulaku uṇṭu * āl ilaiyiṉ
mel aṉṟu nī val̤arnta mĕy ĕṉpar ** āl aṉṟu
velai nīr ul̤l̤ato? * viṇṇato? maṇṇato? *
colai cūzh kuṉṟu ĕṭuttāy ! cŏllu -69

Ragam

Sahāna / ஸஹானா

Thalam

Tiripuṭai / திரிபுடை

Bhavam

Self

Simple Translation

2150. People say it is true that when you were a baby you swallowed all the seven worlds and lay on a banyan leaf. Where was that banyan leaf? Was it in the ocean? Was it in the sky? Was it on the earth? Tell me, O god who carried Govardhanā mountain surrounded with groves.

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate conversion from poetry to prose (Aṉvayam). Please read the meanings (in black) continuously to form the sentence and understand the simplified meaning based on the Divyārtha Dīpikai for the verse.)
பாலன் தனது உருவாய் சிறு குழந்தையாய்; ஏழ் உலகு உண்டு ஏழ் உலகங்களையும் உண்டு; ஆல் இலையின் மேல் ஆல் இலையின் மேல்; அன்று நீ வளர்ந்த பிரளயகாலத்தில் நீ கண்வளர்ந்ததை; மெய் என்பர் வைதிகர்கள் உண்மை என்கிறார்கள்; ஆல் அன்று அந்த ஆலந்தளிர் அன்று; வேலை நீர் உள்ளதோ? ஸமுத்திரத்தில் இருந்ததா?; விண்ணதோ? ஆகாசத்தில் இருந்ததா?; மண்ணதோ? பூமியில் இருந்ததா?; சோலை சூழ் குன்று கோவர்த்தன மலையை எடுத்தவனே!; எடுத்தாய்! இவ்வாச்சரியத்தை; சொல்லு நீயே சொல்லவேண்டும்
bālan thanadhu uruvāy having the form of a child; ĕzh ulagu uṇdu swallowing the seven worlds; āl ilayin mĕl on top of a banyan leaf; anṛu during deluge; nī val̤arndha your sleeping; mey enbar (vaidhikas, experts in vĕdhas) would say (that it) is true; anṛu during that time; āl that banyan leaf; vĕlai nīr inside the oceanic water (where you had slept); ul̤l̤adhŏ was it?; viṇṇadhŏ was it in the sky (which does not have a support)?; maṇṇadhŏ was it in the (dissolved) earth?; sŏlai sūzh kunṛu eduththāy sollu one who lifted the (gŏvardhana) hill surrounded by gardens; sollu only (you) have to tell