(இன்று தாறும்-இது காறும் -இன்று வரை நெஞ்சைத் தூது விட்ட ஆழ்வார் அவனைப்போலவே சீதாபிராட்டி இரண்டாம் பிரிவு போல் ஆனதே முதல் பிரிவில் பெருமாள் துன்பம் பட்டார் இரண்டாம் பிரிவில் அப்படி ஒன்றும் இல்லாமல் தரித்து இருந்தாரே இதுவும் அவரைப் போலவே ஆனதே
அவர் ஆளை நமக்குள் வைக்கும் ஒற்றர் போல் அன்றோ இந்த நெஞ்சம் அது தெரியாமல் நமது மட நெஞ்சம் என்று பிரமம் கொண்டுள்ளோம் அப்படி நம்பி இருந்தால்