TVT 45

தலைவி தலைவனது உதவியை நினைந்துரைத்தல்

2522 பெருங்கேழலார் தம்பெருங்கண்மலர்ப்புண்டரீகம் * நம்மேல்
ஒருங்கேபிறழவைத்தார் இவ்வகாலம் * ஒருவர்நம்போல்
வரும்கேழ்பவருளரே? தொல்லைவாழியம்சூழ்பிறப்பு
மருங்கேவரப்பெறுமே? * சொல்லுவாழிமடநெஞ்சமே!
2522 pĕruṅ kezhalār tam * pĕruṅ kaṇ malarp puṇṭarīkam * nam mel
ŏruṅke piṟazha vaittār ivva kālam ** ŏruvar nam pol
varuṅ kezhpavar ul̤are tŏllai vāzhiyam cūzh piṟappu *
maruṅke varap pĕṟume cŏllu vāzhi maṭa nĕñcame45

Ragam

Thalam

Bhavam

Nāyaki (lovelorn lady)

Simple Translation

2522. She says, “He gives his grace to us with his lotus eyes. Is there anyone who can help us as he can or any friend like him? The bond between him and us is forever— he is with us and we will have no trouble. O heart, do not worry! Worship him and live. O ignorant heart, only he can remove our births. ”

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion (Aṉvayam). Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
பெரும் பெரிய; கேழலார் வராஹமாக அவதரித்த பெருமான்; தம் தம்முடைய; மலர்ப்புண்டரீகம் தாமரைப்பூ போன்ற; பெருங் கண் பெரிய கண்களை; நம்மேல் ஒருங்கே நம்மேல் முழுதுமாக; பிறழ வைத்தார் மிளிர வைத்தார்; இவ்வ காலம் இந்த காலத்தில்; ஒருவர் நம் போல் நம்மைப்போல்; வரும் கேழ்பவர் நெருங்கிய ஸம்பந்தம் உடையவர்; உளரே? வேறொருத்தர் உண்டோ? தொல்லை அனாதியாய்; ஆழியம் கடலைப் போல் தாண்டத்தக்கதாய்; பிறப்பு சுற்றிக் கொண்டிருக்கும் பிறப்பும்; மருங்கே என் ஸம்பந்தம் உடையவர்க்கும்; வரப் பெறுமே? சொல்லு வரக்கூடுமோ? சொல்லு; மட நெஞ்சமே! பேதை நெஞ்சே!; வாழி கலக்கம் தெளிந்து வாழ்வாயாக
perum kĕzhalār varāhapperumāl̤ (divine wild boar) who has a huge form; tham his; malar blossomed; puṇdarīgam like a lotus flower; perum expansive; kaṇ divine eyes; nam mĕl upon us; orungĕ completely; piṛazha to join; vaiththār kept; ivva kālam during this time; oruvar anyone; nam pŏl like us; varum that which happened; kĕzhbavar having the benefit; ul̤arĕ is there?; thollai for a very long time; āzhi cannot be crossed like the ocean; ām beautiful (being cruel); sūzh surrounding; piṛappum birth; marungĕ nearby (with those connected to me); varappeṛumĕ will it occur?; madam being obedient; nenjamĕ oh heart!; sollu tell; vāzhi may you live long