TVT 47

தலைவியின் மெலிவுக்குச் செவிலி இரங்கல்: பாங்கி இரங்கலுமாம்

2524 திரிகின்றதுவடமாருதம் * திங்கள்வெந்தீமுகந்து
சொரிகின்றது அதுவும்அது * கண்ணன்விண்ணூர் தொழவே
சரிகின்றதுசங்கம்தண்ணந்துழாய்க்குவண்ணம்பயலை
விரிகின்றது முழுமெய்யும் * என்னாம்கொல்என் மெல்லியற்கே?
2524 tirikiṉṟatu vaṭa mārutam * tiṅkal̤ vĕm tī mukantu *
cŏrikiṉṟatu atuvum atu * kaṇṇaṉ viṇṇūr tŏzhave
carikiṉṟatu caṅkam taṇ am tuzhāykku vaṇṇam payalai *
virikiṉṟatu muzhu mĕyyum * ĕṉ ām kŏl ĕṉ mĕlliyaṟke?47

Ragam

Thalam

Bhavam

Nāyaki (lovelorn lady)

Simple Translation

2524. Her mother says, “My daughter fell in love with Kannan. The wind from the north blows always and makes her suffer, the moon pours down its rays and makes her hot and her conch bangles grow loose. She longs for his cool thulasi garland and her body grows pale because he hasn’t given it to her. What will happen to my gentle daughter?”

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion (Aṉvayam). Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
வட மாருதம் வாடைக் காற்றானது; திரிகின்றது உலாவுகிறது; திங்கள் வெம் தீ சந்திரன் கொடிய நெருப்பை; முகந்து சொரிகின்றது வாரி இறைக்கின்றான்; அதுவும் வாடைக் காற்றும்; அது நெருப்பை வீசுகின்றது; கண்ணன் கண்ணனின்; விண்ணூர் வைகுண்டத்தை; தொழவே அடைய நினைத்து தொழவே; சங்கம் சங்குவளைகள்; சரிகின்றது கழன்று விழுகின்றன; தண் அம் குளிர்ந்த அழகிய; துழாய்க்கு துளசிமாலைக்கு ஆசைப்பட்டு; முழு மெய்யும் சரீரம் முழுவதும்; வண்ணம் பயலை இயற்கை நிறம் மாறி பசலை; விரிகின்றது பூக்கிறது; மெல்லியற்கு மென்மையான என் மகளுக்கு; என் ஆம்கொல்! என் இன்னும் என்னதான் நடக்குமோ!
vadamārudham northerly wind; thiriginṛadhu is blowing; thingal̤ moon; vem cruel; thī fire; mugandhu scooping a lot; soriginṛadhu is showering; adhuvum similarly, other harmful entities such as the evil cuckoo; adhu started harming like that moon.; kaṇṇan krishṇa’s; viṇ in paramapadham; ūr ṣrīvaikuṇtam, his dwelling place; thozha to attain (thinking of worshipping); sangam bangle; sariginṛadhu is slipping; thaṇ cool; am beautiful; thuzhāykku in the divine thul̤asi (due to desire); vaṇṇam natural colour; payalai becoming pale; muzhu meyyum throughout the physical form; viriginṛadhu pervaded; en melliyaṛku for my soft-natured daughter; en āngol will anything harmful happen (later)?